P B SRINIVAS-8
பி பி ஸ்ரீனிவாஸ் -8
பிபி ஸ்ரீனிவாஸ் பலதர ப்பட்ட பாடல்களை , அவற்றின் நயம் குன்றாமல் பாடும் திறன் கொண்டவர். அவர் வழங்கிய பாடல்களில் மாறுபட்ட அமைப்பில் வெளிவந்தவற்றில் சில இன்றைய பதிவில் .
காதலிக்க நேரமில்லை படம் பல
புரட்சிகளின் துவக்கம். அதில் பாடல்களின் அமைப்பும் இசையும் நீங்காத இளமையும் மாறாத சுவையும் காட்சிகளில் புதுமையும் என உலா வந்த 1964ம் ஆண்டின் பொக்கிஷம்.
'அனுபவம் புதுமை' [கா .நேரமில்லை 1964] கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி பி
பி எஸ் , பி சுசீலா
அன்றைய நிலையில் "அனுபவம் புதுமை" பாடல் ஒரு புரட் சி. . சித்ராலயா கோபு சொல்வது "அனுபவம் புதுமை" பாடல் கேட்டு அத்தனை காலேஜ் ஸ்டூடண்டும் விழுந்துட்டான்". அதாவது இளைஞர்களை வசப்படுத்திய காட்சி அமைப்பு. நடிகை ராஜஸ்ரீ ஒப்பந்தம் செய்ய முடிவானதும் எடுக்கப்பட்ட காட்சி இந்தப்பாடல் தான். காஸ்ட்யூம் தருவாங்கனு பாத்தேன் -நைட் கௌன் [NIGHT GOWN ] மாட்டிக்கிட்டு பாடலுக்கு ஆட சொன்னாங்க . கூட PAIR யாருனு தெரியாது ; அந்த ரூம்லயே ஷூட்டிங் என்று ராஜஸ்ரீ முதல் நாள் ஷூட்டிங் பற்றி குறிப்பிட்டுள்ளார். [ மேக் அப் கம்மி என்று சொல்லி வின்சென்டிடம் ராஜஸ்ரீ வாங்கிக்கட்டிக்கொண்டதும் இதே
காட்சியில் தான்.
கொசுறு செய்தி -கோரியோக்ராபர் தங்கப்பன் அப்போது இல்லை. நடன அசைவுகளையும் ஸ்ரீதர் செய்து காண்பித்தாராம்.. தலை விரிச்சான் காட்சியில் ஒளியமைப்பு எப்படி இருக்கிறது பாருங்கள் . கொஞ்சம் கூட அதிக ஒளி இல்லாத அமைப்பு NIGHT
SONG என்பதை நிறுவக்காணலாம் . பின்னர் ரவிச்சந்திரன் காட்சிகள் இணைக்கப்பட்டு பாடல் உருவானது . சுசீலா ஒரு புறம் ஜமாய்க்க மறுபுறம் பி பி ஸ்ரீனிவாஸ் . கேட்டு மகிழ்ந்து ஒளி அமைப்புகளை கூர்ந்து கவனியுங்கள். எவ்வளவு மாறுபட்ட வசீகர இசை ? இணைப்பு
https://www.youtube.com/watch?v=CzBolio3q8k
anubavam pudhumai kn kd v-r ps pbs
மௌனமே பார்வையால் [கொடிமலர் -1966] கண்ணதாசன் , எம்
எஸ் விஸ்வநாதன் , பி பி ஸ்ரீனிவாஸ்
இதுவும் ஒரு ஊமைப்பெண்ணின் கணவன் அவளுக்கு ஆதரவாக பாடும் பாடல் . அந்த வகையில் "வீணை பேசும் "பாடலு க்கு முன்னோடி. இரண்டு களங்களும் ஒன்றே ஆனால் காலமும் , காட்சியின் தன்மையும் சரினு மாறு பட்டவை.. இந்தப்பாடல் பி பி எஸ்ஸின் திறமைக்கு சான்று. மிக மென்மையான ஒலி அமைப்பில் வந்த ஆண்குரல் பாடல். இணைப்பு இதோ
இதே பாடலின் பன்முக சிறப்புகளை சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்துடன் QFR குழுவினர் வழங்கிய இனிமையை ரசிக்க இணைப்பு
QFR 281
mouname kodimalar 1966 kd msv ,
pbs
நிலவே என்னிடம் [ராமு-1966] கண்ணதாசன், எம்
எஸ் விஸ்வநாதன், பி பி ஸ்ரீனிவாஸ் [சுசீலா]
திரு பி
பி எஸ் அவர்களுக்கு மங்காத புகழை ப்பெற்று தந்த ஒப்பில்லாத பாடல் . சோகத்தில் துவளும் ஆடவன் தன்னிலை விளக்கமாக குமைந்து குமுறும் பாடல். இப்பாடலின் பல்லவி அமைப்பை, வலுவாக நிறுவிட பெண் மனத்தின் ஏக்கமாக "தொகையறா
" அமைக்கப்பட்டுள்ளது. தொகையறா வை
திரும்பத்திரும்ப ஒலிக்க வைத்து ஆண் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு உள்ளானதாக "சூழ்நிலை" விளக்கப்பட்டுள்ளது .
"தொகையறா
"
'நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி 'என்று இரு முறை பாடி மூன்றாம் முறை துவங்கும் முன்
தோழீ --'நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி' என்று பெண் படுக்கையில் உடலை முறுக்கி விரகதாபம் வெளிப்பட பாடுகிறாள் .
இதனை முடிவுக்கு கொண்டு வர
பாடல் சிதாரின் மீட்டலில் துவங்கி நீண்ட நெடிய
நகர்வுகளில் தபாலாவின் துணையுடன் பயணிக்க , அவ்வப்போது ஷெனாய் ஒலி அவனின் மன ஒலி யாக காற்றில் மிதக்க , ஆழ்ந்த தாக்கம் விளைகிறது.
"அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன் , இந்த நிலையிலும் நீ
ஏன் தூது விட்டாய் ? என்று அமைந்த பாடல். இசையின் வீச்சுகள் வெறெந்தப்பாடலிலும் இல்லாத மதிமயக்கம் தரும் அமைப்பில் கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ NILAVE
ENNIDAM RAMU 1966 KD MSV PBS
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment