AVOIDIMG MISTAKES-6
பிழை தவிர்த்தல் -6
SUPERFICIAL and SUPERFLUOUS
அன்பர்களே
மொழிகுறித்த விளக்கமாக-- "பிழை தவிர்த்தல்' பகுதியில் இயன்ற வரை தெளிவு ஏற்படுத்த முயன்று வருகிறோம். இதனால் எவருக்கேனும் பயன்பட்டதா, தெளிவு தோன்றியதா எனில் -இறைவனுக்கே வெளிச்சம் .
எனக்கு பயன் பட்டது-- blog பதிவில் வாரம் ஒரு நாள் பகுதியை நிறைவு செய்ய எனக்கு உதவியது ; வேறு எவரும் கருத்து எதுவும் குறிப்பிடவோ பகிரவோ இல்லை , எனவே ஏதோ வேண்டா வெறுப்பாக திங்கள் கிழமை பதிவு அரங்கேறி வருவதை உணர முடிகிறது.
ஒருவேளை
பிறந்த
அகத்து
பெருமையை
உடன்பிறந்தவனிடம்
பேசுவது
அல்லது
ஆங்கில
சாட்டுவாக்கியம்
"CARRYING COAL TO NEWCASTLE " போல
இந்தப்பகுதி
இருக்கிறதோ
என்ற
எண்ணம்
தோன்றுகிறது.
தொடங்கியதை
அரைகுறையாக
விட்டு
விட
எண்ணவில்லை
எனவே
இன்நும்
சில
பகுதிகள்
கடந்தபின், இப்பகுதி தொடர
வாய்ப்பில்லை.
சரி, சென்ற பகுதியின் இறுதியில் SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS என்ற இரு சொற்களை பார்த்தோம். இவை இரண்டும் நன்கு தெரிந்த சொற்கள் எனினும் பலரும் SUPERFLUOUS ஐ SUPERFICIAL தரும் பொருளையே உணர்த்த பயன் படுத்துகின்றனர் .
SUPERFICIAL என்பது மேற்பரப்பில் என பொருள் தரும் SUPERFLUOUS என்பதோ அளவிற்கு அதிகமாக அல்லது தேவைக்கு மேல் என உணர்த்துவது.
The damage is superficial and to attend to it , more than two men is superfluous
[காரில் மேற்புற
சிதைவை பழுது நீக்க
2 பேர்
போதும்
4, 5 பேர்
என்பது
[அளவிற்கு அதிகம் ] superfluous [ உச்சரிப்பு
superfloo ] . இவ்வாறு
நுண்
வேற்றுமைகளை புரிந்து கொள்ளாமல்
சொற்களை
எடுத்தாளுதல்
பெரும் குழப்பத்தையும் அவப்பெயரையும்
ஏற்படுத்தும்.
இவ்விடத்தில்
நாம்
உணர
வேண்டிய
அடிப்படை மாறுபாடு
இந்தியமொழிகளில்
சொற்களை
'எழுத்து
கூட்டி
படித்தோ/எழுதியோ'
உணர்வதோ
/உணர்த்துவதோ
இயலும்.
ஆனால்
ஆங்கில
/ஐரோப்பிய
மொழிகளில்
எழுத்துவரிசைக்கும்
உச்சரிப்பிற்கும்
தொடர்பே
இல்லாத
அமைப்புகளைக்காணலாம்
பின்
வரும்
சொற்களை
சரியாக
உச்சரிக்கிறோமா
என்று
பாருங்கள்.
RENDEZVOUS,
RAPPROCHMENT, ENVELOPE, ENMASSE, GRAND PRIX, JEWEL TORTOISE, RESTAURANT
RENDEZVOUS,
ரெண்டஸ்வஸ் என்பது தவறு
ரெண்டெவூ என்பதே சரி
RAPPROCHMENT ராப்ரோச்மெண்ட் என்பது
தவறு
ராப்ரோச்மா
என்பதே சரி
ENVELOPE,
ENMASSE, EN CLAVE
இவை
பிரெஞ்சு
மொழியில்
இருந்து
ஏற்கப்பட்டு
ஆங்கில
மொழியில்
புழங்குபவை
இவை
முறையாக
ஆன்
வேலோப்[ENVELOPE]
[கவர்
/உரை ] , ஆன் மாஸ் [ENMASSE, ஒட்டுமொத்தமாக
] EN CLAVE ஆன்க்ளெவ் [ பல பகுதிகள் கொண்ட கட்டுமானம் ]
இதே
போல்
GRAND PRIX = நெடும் பந்தயம் [கிராண்ட் ப்ரி என்பதே சரி ], TORTOISE [ஆமை] டார்டிஸ் என்பதே சரி டார்ட்டாய்ஸ் தவறு.
RESTAURANT உணவகம் = முறையாக ரெஸ்ட் ராண்ட்
[ரெஸ்டாரண்ட் என்பது தவறு]
JEWEL = நகை [ஜ்வல் என்பதும் ஜுவல் என்பதும் ஏற்கப்பட்ட உச்சரிப்புகள்] .
JEWELLERY = ஜ்வல்ரி/ ஜுவல்ரி என்பதே சரி
[ ஜ்வல்லரி/ ஜுவல்லரிஎன்பது தவறு]
எனவே ஐரோப்பிய மொழி அமைப்பில்
சொல்லின் ஒலிவடிவம் , எழுத்து அடிப்படையில் அல்ல, ஏன் எனில்
சில
எழுத்துகள்
அமைதி
வடிவம்
கொண்டவை
[சைலண்ட்
லெட்டர்ஸ்
எனப்படுபவை.] island ஐலண்ட் [ ஐஸ் லாண்ட் அல்ல] அது Ice land என எழுதப்படுவது.
இவை
குறித்த நகைச்சுவை துணுக்கு மிகப்பிரபலம் அந்நாளில் .
விமானப்பயணத்தில் கீழே தெரிந்த கட்டிடங்களை ப்பார்த்த ஒருவன் ஐயா ஐயா BOMBAY என்று குதூகலிக்க , வேறொரு பயணி [கத்தாதே என்று ] BE SILENT என்று சொல்ல முன்னவன் ஆம்பே [OMBAY OMBAY ]என்று அலற, கத்தாதே என்று சொன்னவர "I SAID -- BE SILENT " என மீண்டும் சொல்ல , இப்போது முன்னவன் ஆமே ஆமே [OMAY ,OMAY ] என்று "B " ஒலி யை தவிர்த்து மீண்டும் கூவினான் என நகைச்சுவையாக குறிப்பிடுவர்.
அவ்வளவு
ஏன்? அமெரிக்கர்கள் கூடஆங்கிலத்தில்
'ghoti ' என
எழுதிவிட்டு "fish "என்று படிக்கலாம் என்று கிண்டல் செய்வதுண்டு
தொடரும்
அன்பன்
ராமன்
நல்ல உபயோகமான பதிவு. தயவு செய்து தொடரவும்
ReplyDelete