AMMANI, AMMANI
அம்மணீ அம்மணீ [RENGA VENDAAM- 5 ]
அம்மணீ அம்மணீ என்று வாசலில் குரல் -காலை 7.50 மணிக்கு .
இங்கு அம்மண மணி என்று யாரும் இல்லை என்று சற்று கடுப்புடன் ஆண்குரல் .
இது ஒரு புறம் நடக்க,
இடுக்கு வழியே வெளியே ஓடிய சிறுவன் , வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டினுள் ஓடி
"பாட்டி -ஜோசியர் வந்திருக்கார்" என்றான். குழம்பிக்கிடந்த பாட்டி இது என்ன
துரத்தி துரத்தி நம்ம வீட்டுக்கு ஜோசியன், மாந்திரீகன் , மந்திரவாதி எல்லாம் காலை வேளையிலேயே
படை எடுக்கிறார்கள் என்று தன்னையே நொந்துகொண்டு , வெளியே வர அங்கே பாகவதர் கிராப்புடன்
நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமப்பொட்டுடன் சாட்சாத் ரெங்கராஜு [கிளி ஜோதிடர்].
அம்மணி வேறு யார்?
பலருக்கும் இவர் எப்படி இங்கே
? என்று மண்டையைக்குடைய வைத்த கோமதி என்ற திருமதி கோமதி வெங்கடாச்சாரி தான்.
ஐயோ , என்று திருமதி கோமதி வெங்கடாச்சாரி க்கு -ரெங்கராஜூவுக்கு
விரதம் முறிக்கும் அன்னமிடுவதாக ஒப்புக்கொண்ட பொறுப்பு மீண்டும் நினைவுக்கு வந்தது..
இப்பவே வந்துட்டீங்களே இன்னிக்கு ஸ்கூல் , ஆபீஸ் எல்லாம் லீவு அதுனால இனிமேல் தான்
சமையல் ஆரம்பிக்கணும் என்று கையை பிசைந்தாள் . [உள்ளே இருந்து மைதிலி , அம்மா சமையல் ஆரம்பிச்சாச்சு , 9.00 மணிக்கு
எல்லாம் ரெடி ஆயிடும் என்று தெரிவித்தாள்
]
இங்கே ரெங்கராஜு 'அம்மணி சாப்பிடவரவங்க
இப்பவே வா வருவாங்க , 9.30 மணி ஆவது ஆவும் , அதுவும் அய்யருங்க வெளி ஆளுங்களுக்கு முதல் ல சாப்பாடு தரமாட்டாங்க . இதெல்லம் பகவதி சொல்லி , டே காலத்திலேயே போய் எப்ப வந்தா அவங்களுக்கு
வசதியா இருக்கும் னு கேட்டுக்க னு சொல்லியிருக்குது. அதுக்கு தான் தெரிஞ்சுக்க வந்தேன்
.
அதற்குள் மைதிலி வெளியே வந்து நீங்க
9.30க்கு வந்தா சரியாயிருக்கும் என்றாள் . பளிச் என்று மஹாலக்ஷ்மி போல் இருந்த மைதிலி
யை இப்போது தான் முதலில் பார்க்கிறார் ரெங்கராஜு.
ஜோதிடன் அல்லவா , உடனே புரிந்து
கொண்டான் , சந்தானத்திற்கு பகவதி அருள் மைதிலி வழியாக வே சித்திக்கிறது என்று. மைதிலியை
இன்னொரு பகவதியின் அமைப்பாகவே பார்த்தான் ரெங்கராஜு. மைதிலியை பார்த்ததும் இயல்பான பழக்கமாக வேட்டியை முற்றாக
கீழே தழையதழைய படரவிட்டு , கை கூப்பி வணங்கி
, 'நல்லது தாயீ , உங்க மகனால உங்க எல்லாருக்கும் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு இன்னும்
5-7 வருசத்துக்குள்ள , குபேர லட்சுமி உங்களுக்கு செல்வத்தையும் பெருமையையும் வாரி வழங்கப்போகுது.
தாயீ ஒரு சின்ன விண்ணப்பம் , விரதம்
விடறது வாழை இலைல தான் செய்யணும் .
மைதிலி சிரித்துக்கொண்டே "தெரியும் இலை வாங்கி
வெச்சிருக்கோம்.
தாயீ ஒரு 4 மிளகு இலையில் வச்சுதான் , பகவதியை சாட்சி
வெச்சு விரதம் விடணும் .
மைதிலி :சரி அப்புறம் சூடம் , குங்குமம் ?
ரெங்கராஜு -இல்ல தாயீ அதெல்லாம் வேணாம்.
[சக்கரைப்பொங்கல். அக்கார அடிசில்,
நெய் குங்குமப்பூ , குல்கந்து இதெல்லாம் வேண்டாமா மா சரியாய் கேட்டுக்கோ , சாப்பிடும்
போது தயிர் , வெண்ணை அது இது னு பட்டியல் போடப்போறானுக . ஓசி ல கெடச்சா 4 ஜாங்கிரி
திரட்டுப்பால் னு கிளம்பும் -என்று கொந்தளித்தான் ரெங்கசாமி.
[மைதிலி உக்கிரப்பார்வை பார்த்து
சமயபுரம் மாரியம்மன் போல சுட்டெரித்தாள் ரெங்கசாமியை]
அனைத்தையும் குறிப்பால் உணர்ந்த
ரெங்கராஜு [பகவதியின் பிரதி நிதி அல்லவா கிளி ஜோதிடன்] ரெங்கா வேண்டாம் என்று உரத்த ஒலியில் சொன்னான்
[ரெங்கசாமி அதிர்ந்தான், மைதிலி
-ஏதாவது இங்கிதம் இருக்கா என்பது போல் ரெங்கசாமியை முறைக்க, சந்தானம் மலங்க மலங்க விழித்துக்கொண்டு,
“கணக்கில் எவ்வளவு? இங்கிலீஷில் எவ்வளவு”? என்று குதிக்கும் தந்தை இப்போது மாட்டிக்கொண்ட ஆடுபோல்
விழிப்பதை வெகுவாக ரசித்தான்] .
சரி தாயீ நான் அப்புறமா வரேன் என்று
கைகூப்பிக்கொண்டே நின்றான் ரெங்கராஜு
வெளியில் வந்த மைதிலி நீங்க
9.30க்கு வரலாம் வாங்கோ என்றாள் .
அப்புறம் தம்பி இருப்பாருல்ல என்று
சந்தானத்தைக்காட்டி கேட்டார் ரெங்கராஜு
இருப்பான் இன்னிக்கு அவனுக்கு லீவு
தான் என்றாள் மைதிலி. [This episode is RENGA
VENDAAM-5]
தொடரும்
அன்பன் ராமன்
ரங்கராஜுவுக்கு விருந்து என்றதும் ஞாபகம் வருகிறது. திருப்பந்துருத்தி உபசாரம் என்றால் என்னவென்று பேராசிரியர் விளக்குவாரா?
ReplyDeleteDoes 'Peraasiriyar' have no other work to atend to except to dabble with varied styles of feast?
ReplyDelete