Tuesday, April 22, 2025

LET US PERCEIVE THE SONG – 19

 LET US PERCEIVE THE SONG – 19

பாடலை உணர்வோம் -19

“பாடலை உணர்வோம்  என்ற பகுதியின்  19 ம் பதிவு இது. ஆயினும் பலரும் இந்தப்பகுதியில் நாம் சொல்ல விழைவதையும், அக்கருத்துக்கள் முன்னிறுத்தும் சிறப்பு பண்புகள் குறித்தும் 'கரடியாய் கத்தினாலும்'  அட போப்பா என்பது போல் கடந்து போவது மிகுந்த சோர்வைத்தருகிறது. ஏன் என்றால், இதில் வரும் குறிப்பிட்ட பாடலையும் ஏதோ டிவி நிகழ்ச்சியில் பாடல் கேட்பது போல் கேட்க அந்த இணைப்பினை பயன் படுத்துகிறார்கள்.

அதனால் அவர்கள் இழந்தது என்ன எனில், கவிதை நயம், காவியத்தர சொல்லாடல், இசையின் பயனாய் விளைந்த ஒலி வடிவம் , இவ்வனைத்தையும் தாண்டி, பாவத்தின் விளைவாக எழும் பாடலின் தாக்கம் இவை குறித்து ஒரு புரிதல் ஏற்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு இருந்தும் போடா நீயும் உன் வாய்ப்பும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். 

சரி நீங்களாவது உங்கள் புரிதலை பகிருங்கள் என்று வேண்டுகோள் வைத்தால் , பின்னங்கால் பிடரியில் பட [ அதாவது முன்னே செல்பவன் பிடரியில் பட ]ஓட்டம் பிடித்துவிடுவர்.  

ஆனால் ஒன்றை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பழைய பாடலையே ரசிக்க தயங்குவோர், வேறு எதை ரசிக்க இயலும்? பழைய பாடல்கள் அனைத்துமே மனித முயற்சியின் சீரிய வடிவம் அது தரும் பாடம் மகோன்னத உழைப்பின் வெகுமதி எனில் மிகை அல்ல. 

நமது இன்றைய தேர்வு 

ஹலோ மிஸ் டர் ஜமின்தார் - 1965  படத்தில் இடம் பெற்ற  "இளமை கொலுவிருக்கும் " என்ற மகோன்னதப்பாடல் .  

ஒரே பாடல் ஒரு முறை ஆண் குரலிலும் [பி பி ஸ்ரீனிவாஸ்], மீண்டும் பெண் குரலிலும் [பி சுசீலா ] வருகிறது . இம்மியும் மாறுபடாமல் ஒரே பாடல் இருமுறை படத்தில் இடம் பெற்றது. 

பாடலி ன் சிறப்பே அது  'பெண்ணினத்தின் மாண்புதனை" மிக நேர்த்தியாக உரைத்திருப்பது தான். முதலில் இரு பாடல்களையும் நன்கு ஆழ்ந்து கேளுங்கள் , கவிஞன் தரும் கருத்து, குரல்கள் தரும் உணர்ச்சிகள், இசை தரும் மன அமைதி அனைத்தையும் கேட்டுக்கேட்டு ரசியுங்கள்.

இப்பாடலுக்கான பிற நுணுக்க விவரங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.  இரு பாடல்களுக்கும் இணைப்பு கீழே

'இளமை கொலுவிருக்கும் '  ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் [1965] , கண்ணதாசன், விஸ்வநாதன் -ராமமூர்த்தி  

ILAMAI KOLUVIRUKKUM PBS

https://www.google.com/search?q=ilamai+kolu+irukkum+video+song&oq=ilamai+kolu+irukkum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgkIBRAhGAoYoAEyBwgGECEYjwLSAQkxNzI5MmowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:92181d32,vid:QsT3xiOILjI,st:0

ILAMAI KOLUVIRUKKUM  PS

https://www.google.com/search?q=ilamai+kolu+irukkum+video+song&oq=ilamai+kolu+irukkum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgkIBRAhGAoYoAEyBwgGECEYjwLSAQkxNzI5MmowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:8a9fc8ba,vid:geCp4H5J9Ow,st:0

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

KING and KING -3

  KING and KING -3                             அரசரும் மன்னரும் -3 இந்த பதிவில் வரும் விளக்கங்களும் பாடல்களும் பெரும் ஆளுமைகளு...