Sunday, April 13, 2025

AVOIDING MISTAKES-5

 AVOIDING MISTAKES-5     

பிழை தவிர்த்தல் -5 

 CONTINUAL / CONTINUOUS இவைகளும் ஒரே பொருள் தருவன அல்ல.. JUDICIOUS / JUDICIAL   இரண்டும் வெவ்வேறு. SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS இரண்டும் ஒன்றல்ல. இன்னும்   நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய மொழி சார்ந்த விதி முறைகள் எண்ணற்றவை.          என்று சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன் .

அவற்றை புரிந்து கொள்வோம் 

                                                 இனிய   தமிழ் புத்தாண்டு                                                                                                                      "விசுவாவசு"                                            

                                          நல் வாழ்த்துக்கள்

                                                   

CONTINUAL , CONTINUOUS  இரண்டும் ஒரு செயலின் தொடர்ச்சியை குறிப்பிடுவன. ஆயினும் அவற்றிற்கிடையே வேற்றுமை அதிகம் .  

CONTINUAL என்பது விட்டு விட்டு நிகழும் தொடர் செயல் என்று விளக்கப்படுகிறது .என்ன தலை சுற்றுவது போல் இருக்கிறதா? மிகவும் எளிய தகவல் தான் . மனிதன் உயிர் வாழ உணவும் , உறக்கமும் மிகவும் அவசியம் . அதற்காக 24 மணி நேரமும் உணவையே உண்ணுவதோ, உறங்கிக்கொண்டே இருப்பதோ சரியல்ல , மேலும் ஆரோக்கிய வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். ஆகவே ஒவ்வொரு உணவிற்கு முன்னும், பின்னும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். அது போலவே , உண்ணும் நேரம் போக பிற நேரங்களில் தூங்கிக்கொண்டே இருப்பதும் தவறு. இரவில் நீண்ட நேரம் [8 மணி நேரம்+ உறங்கலாம்] பகலில் 15 -20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம் . இவ்வாறே உணவு உட்கொள்ளும் செயல் / உறங்குதல்  தொடர்ச்சியானதல்ல , இடை வெளிகளுடன் நிகழ்வது So, eating and sleeping are continual functions. 

மனிதன் உயிர் வாழ, மூச்சு இயக்கம் [breathing] மிகவும் அவசியம். மூச்சு இயக்கத்தில் நீண்ட இடைவெளி கிடையாது. மூச்சு இயக்கம் இடைவிடாமல் நிகழ்வதால் அது continuous எனும் இடை வெளி அற்ற தொடர் செயல்.

அதில்  இடை வெளி ஏற்பட்டால் மரணம் நிகழும்.. Breathing is contiinuous என்கிறோம். ஆக, தொடர் நிகழ்வுகளில் continual என்பது இடைவெளியுடன் நிகழ்வது,

Continuous என்பது இதயத்துடிப்பு போல் இடைவிடாமல் தொடர்ந்து இயங்குவது. இவற்றை நன்கு உள்வாங்கி புரிந்து கொள்ளுதல், முக்கிய நிபுணர்கள் மத்தியில்,  நல்ல பெயர் எடுக்க நமக்கு உதவும் .

JUDICIOUS   and  JUDICIAL

மேலே காணும் இவ்விரு சொற்களும் ஒரே பொருள் தருவன என்பதாகத்  தோன்றும்; கணிசமான நபர்கள் அவ்வாறே  எண்ணி, ஒன்றுக்கு பதில் மற்றதை உபயோகித்து, மொழி தேர்ச்சி பெற்ற பெருமக்களிடம் அவமானப்பட்டு ஹி ஹி ஹீ என்று அசடு வழிய தலைகவிழ்ந்து நிற்பர் அல்லது வந்து வந்து என்று ஏதோ சமாதானம் தேடி பேசமுடியாமல் விழிக்கக்கானலாம். இது போன்ற அவலங்கள் அவரவர் கவனக்குறைவால் தோன்றுபவையே... 

JUDICIOUS     என்ற  சொல் "சாதுர்யமாக" அல்லது "வெகு நுணுக்கமாக" புரிந்து கொண்டு நடந்துகொள்வதைக்குறிக்கும் .

JUDICIAL    என்ற சொல் " சட்டத்தின் நிர்ணயப்படி " அல்லது "சட்ட கோட்பாட்டின் படி" என்று உணர்த்தும்.  பின் வரும் வாசகத்தை கவனமாக உள்  வாங்கிக்கொள்ளுங்கள் .

 

“On matters of judicial complexities, our requirements should be judiciously presented”                                                                                                                              அதன் பொருள் என்னவெனில் [judicial complexities ] சட்ட நுணுக்கங்கள் மிக்க ஒரு பிரச்சினையில் , நமது தேவைகளை  [judicious ஆக]  சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும்

SUPERFICIAL  and  SUPERFLUOUS

'SUPERFICIAL' என்ற சொல்,  மேலோட்டமாகஅல்லதுவெளிப்புறப்பரப்பில்என்று பொருள் தரும் .  ஆனால், 'SUPERFLUOUS'  என்பதையும், பலரும் மேலோட்டமாக என்றே நினைத்துக்கொண்டு superficial என்ற சொல்லுக்கு பதில், superflous என்றே உபயோகிக்கின்றனர். 

 ஆனால் superfluous என்பதன் உண்மையான பொருள்,-தேவை இல்லாத அல்லது அளவுக்கு அதிகமாக என எடுத்துரைக்க மட்டும் தான்.

 மேலும் SUPERFLUOUS என்ற சொல், SUPERFLOO என்றே உச்சரிக்கப்பட வேண்டும்.

பொருள் உணராமல் பேசுவது மற்றும் எழுதுவது ஒருவரின் அடிப்படை திறமை  மற்றும் தகுதி இரண்டையும் குறைத்து மதிப்பீ டு செய்ய வழி . வகுக்கும் .

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

AMMANI, AMMANI

  AMMANI, AMMANI அம்மணீ அம்மணீ [ RENGA VENDAAM- 5 ] அம்மணீ அம்மணீ   என்று வாசலில் குரல் -காலை 7.50 மணிக்கு .  இங்கு அம்மண மணி என்று   யா...