AVOIDING MISTAKES-7
பிழை தவிர்த்தல் -7
AVOIDING
MISTAKES [பிழை தவிர்த்தல்] என்று எழுதிவிட்டு நானே தவறான
ஸ்பெல்லிங் எழுதியிருந்ததை [AVOIDIMG
MISTAKES]-6 எனது நண்பர் பேராசிரியர் டாக்டர் கண்ணன் அவர்கள்
சுட்டிக்காட்டினார். அவருக்கு மனமார்ந்த நன்றி.
எழுதியதை படித்துப்பார்க்காமல் வெளியிட்டது மாபெரும்
பிழையை தப்பிப்போக விட்டுவிட்டது. எனினும் குற்றவாளி நானே தான். இப்போது புலம்பி என்ன?
அப்போதே பார்த்திருக்க வேண்டும் என்றொரு குரல் ஒலிக்கிறது. எனவே கவனக்குறைவினால் விளைந்த
பிழைக்கு நிபந்தனை இல்லாத மன்னிப்பினை கோருகிறேன்.மன்னிப்பதோ மறுப்பதோ வாசகர் உரிமை
அதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. .
இனி
இந்த
பதிப்பு
தொடர்கிறது
GHO TI
, VOWEL,
DESPITE/ INSPITE OF
அவ்வளவு ஏன்? அமெரிக்கர்கள் கூடஆங்கிலத்தில் 'ghoti ' என
எழுதிவிட்டு "fish "என்று
படிக்கலாம்
என்று
கிண்டல்
செய்வதுண்டு
என
சென்ற
பகுதியில்
குறிப்பிட்டிருந்தேன் .
அவர்கள்
தரும்
'கிண்டல்'
விளக்கம்
வருமாறு
. வெவ்வேறு
சொற்களில்
அமைந்த
எழுத்துக்களை
மேற்கோள்
காட்டி,
ஒலியின்
வேறுபாடுகளை
நியாயப்படுத்தக் காணலாம்
GHOTI = GH+
O+ TI என எழுதிவிட்டு
FISH எப்படி எனில்
ROUGH என்ற
சொல்லில்
GH ஒலி
= F
TORTOISE என்ற சொல்லில் O = ஐ =I
STATION என்ற சொல்லில் TI = ஷ் = SH
ஆக
GHOTI = FISH என்று படிக்க முடியும் என வாதிடுவர்.
இது
போன்றே
எழுத்தின்
ஒலி
வடிவம்
இடம்
பொறுத்து
மாறுபடும்
இதோ
woman
=வுமன் ஆனால் women =விமன், எனவே WO வின் ஒலி வேறொரு எழுத்தினால் மாறுபடுகிறது.
இன்னொரு
விந்தை-
வவல்களில்
ஒன்றான
'e' இருப்பின், சொல்லின் ஒலி முற்றிலும் மாறக்காணலாம்
FAT ஆனால் அதுவே FATE ,
MAT
/MATE ,
PIN /PINE
FIN /
FINE ,
SIT
/SITE
அதாவது
ஒரு
சொல்லின்
இறுதியில்
'E' இடம்பெற்றால்,
அதே
சொல்லில்
அமைந்த
முற்பகுதியில்
உள்ள
வவல்
தனது
ஒலியை
நன்றாக
வெளிப்படுத்தும் PINE [பைன்], FINE [பைன் ] SITE [சைட் ] இவற்றில் 'I' தனது ஐ என்ற ஒலியை காட்டுகிறது . அதே FAT/MAT இல் உள்ள 'A ' அ என ஒலிப்பதும் அதே 'A ' FATE'/'MATE
'என்ற சொல்லில் 'ஏ ' என தனது ஒலியையே வெளிப்படுத்துவதும் , இறுதியில் அமைந்த வவல் 'E'யின் உபயம் என உணரலாம்.
எண்ணற்ற
சொற்களில்
இது
போன்ற
ஒலிமாறுபாடுகளை கவனிக்கலாம். இது போன்ற சொல்லமைப்புகளைப்புரிந்து கொண்டால் நமது 'பேசு திறன், மற்றும் பேச்சில் ஒலி நளினம் வெகு அழகாக நர்த்தனம் புரியும். கேட்போரை எளிதில் வசீகரிக்கும்
IN SPITE
OF / DESPITE
இரண்டும் சம சொற்கள் [அதாவது ஒரே பொருள் தருவன].
இருந்தாலும் அல்லது எனினும் என பொருள் உணர்த்தவல்லவை.
இவ்விரு
வாக்கியங்களை
கவனியுங்கள்
IN SPITE
OF [அல்லது
DESPITE ] my repeated telling,
you say’I went to shop, it was not open’are you not ashamed?
திரும்ப
திரும்ப
நான்
சொல்லியும்,
நான்
கடைக்கு
போனேன்,
கடை
திறக்கவில்லை
என்கிறாய்
, உனக்கு
வெட்க மாக இல்லையா ?
"OF
" இந்த சொற்றொடரில் preposition எனும் இலக்கண மரபில் அமைவது. ; ஆனால் DESPITE
என்ற
சொல்
உபயோகித்தால்
"OF " தேவையில்லை ஏன் என்றால் DESPITE = IN SPITE OF என
"OF" ஐ
உள்ளடக்கியது . இதனை சரியாக புரிந்து கொள்ளாமல் பலர் DESPITE OF என்று துவங்கி பெரும் சொல்லாட்சியை வெளிப்படுத்தி
விட்டது
போல்
வெற்றிப்புன்னகை கொண்டு ஓரக்கண்ணால் பார்க்கும் போது இவனை/ இவளை எட்டி அறைந்தால் என்ன என்று கை
துறுதுறுக்கும் . இவர்கள் நோய் பரப்பும் கிருமிகள் போல தவறான சொல்லாடலை விதைக்கும் மன நோயாளிகள்.
"தான் கெட்டதும் இல்லாமல் சந்த்ர புஷ்கரணியையும்
கெடுத்தான்"
என்னும்
பழமொழிக்கு
இலக்கணம்
/உதாரணம்
இவர்களே.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றல் உடனே சிலர் 'அசால்ட்டா 'பேசுறாரு அல்லது எழுதுறாரு என்று விளக்கம் தருவதைக்காணலாம். ASSAULT என்ற சொல்லுக்கு அலட்சியப்போக்கு
அல்லது
கவனம்
இல்லாத
தன்மை
என்பதே
பொருள்
என்பதாக
தவறாக
புரிந்து
கொண்டு, பெரும்பாலும் கவலைப்படாத செயல் போக்கினை
"அசால்டா"
என்று
குறிப்பிடுகின்றனர். ASSAULT = தாக்குவது /அடிப்பது என்பதே
பொருள்.
CONTINUE
/ CONTINUOUS
CONTINUE
[VERB], CONTINUOUS [ADJ] இரண்டையும் முறையாக பயன்படுத்தாமல்
உளறுவது
அன்றாட
நிகழ்வு
.
இதற்கு
முக்கிய
காரணம்
மொழி
மாறி
பேசுவது.
தமிழில்
பேசும்போது
இடையே
CONTINUE ஆக
நடக்குது
என்பர்.
அவர்கள்
சொல்ல
விரும்புவது
தொடர்ச்சி
யாக
என்பது
[CONTINUOUS ஆக
என்று]
ஆனால்
சொல்வது
CONTINUE ஆக
என்று.
VERB மற்றும்
ADJECTIVE எங்கே
பொருந்தும்
என்ற
புரிதல்
இல்லாமல்
உளறுவதை
கலையாகவே
பயின்றுள்ளனர்.
நல்ல
மொழி
அறிந்த
நட்பு
வட்டங்களில்
பழகி
மொழியறிதல்
நல்ல
மொழி
ஆளுமையை
ஊக்குவிக்கும்.எல்லாம் தெரிந்து விட்டதாக கற்பனையில் மிதப்போர்
"அதான்
எனக்கு
தெரியுமே"
என்ற
வகையினர்
என்று
நாமாவது
புரிந்து
கொள்வோம்.
மேலும்
வரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment