P B SRINIVAS -10
பி பி ஸ்ரீனிவாஸ் –10
யார் யார் அவள் யாரோ [பாசமலர் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,
பி
பி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா.
இது போன்ற பழைய பாடல்களை கேட்டால் தான் தெரியும் தமிழ் சினிமா எந்த உயரத்தில்
இருந்து
சறுக்கி
சரிந்துவிட்டது என்று. அதனால் உனக்கென்ன? என்போர் அநேகர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு எளிதில் கிடைத்துக்கொண்டிருந்த பொழுதுபோக்கு இப்போது அருவருப்பாக மாறிவிட்டதை சொல்லாமல் விட முடியவில்லை. கருப்பு வெள்ளைப்படத்தில் அன்றைய கொடைக்கானலின் அமைதியான சாலைகள், சோலைகள் , பனிபடர்ந்த சூழலில் காரிலும், காலிலும் பயணித்த இந்த சினிமா ஜோடி [ஜெமினி-சாவித்ரி] பாடல் கேட்கவே மகிழ்ச்சி தோன்றும்.
நேர்த்தியான இசை ஆஹா ஹஹ் ஹஹ ஹாஹா , மற்றும் ஹஹா ஹஹா ஒஹோ என்று ஹம்மி விட்டு யார் யார் யார் அவள் யாரோ என்று ஆண் துவங்க, ஊர் பேர் தான் தெரியாதோ என்று காதலிக்க வந்தனை சாவித்ரி எவ்வளவு முகபாவம் காட்டி [அதுகூட தெரியாம வந்துட்டியாக்கும் என்பது போல ] மடக்கி முடக்குகிறார். ஒவ்வொரு சரணத்திலும் ஆண்
வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிலையை கவிஞர் வெகு எளிதாக - பெண் மூலம் 'மயங்க வைத்தாளோ ? மற்றும் மஞ்சள்
குங்குமம் மலர் கொண்டாள் ,, மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள் ? [நீ தான் ஜொள்ளு விட்டாய்] என்ற இலக்கிய நய நையாண்டி . முக பாவங்களை ஊன்றி கவனித்து நடிப்பின் பரிமாணங்கள், சொல்லாடல் இசையின் வசீகரம் எதையும் நன்கு ரசிக்க இணைப்பு
yar yar yaar [pasa malar 1961]
kd v r pbs ps
காலங்களில் அவள் [பாவ
மன்னிப்பு -1961]]
கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ்
இந்தப்படம் தமிழ் சினிமாவின் இசை
வரலாற்றைப்புரட்டிப்போட்டதைப்போலவே திரு பி பி எஸ் அவர்களின் வாய்ப்பினையும் பன்மடங்கு உயர்த்திய பெருமை இதே "பாவ மன்னிப்பு" படத்திற்கு உண்டு. மேலும் ஜெமினி கணேசனுக்கு ஏற்ற குரலாக்க பரிணமித்து எண்ணற்ற வாய்ப்புகளை பெற்றார் திரு பி பி எஸ் . இப்பாடல் பகவத் கீதையின் சில கருத்துகளை பயன்படுத்தி அமைந்தகிது. அற்புதமான அமைப்பு மென் இசை மற்றும்முற்றிலும் புதிய இசைக்கருவித்தொகுப்புகள் என பெரும் வெற்றி ஈட்டியப்பாடல். கேட்டு மகிழ இணைப்பு
kalangalil [pavamannippu-1962] kd
v r pbs
மாடி மேலே மாடி கட்டி [கா.
நேரமில்லை] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் குழுவினர்.
உனக்காச்சு எனக்காச்சு என
முதலாளியை வம்பிழுக்கும் ஊழியனின் பாடல். இப்படி ஓர் பாடலை எவருக்கும் கொடுத்திருக்கலாம். ஆ னால் ரவிச்சந்திரனுக்கு குரல் பொருந்திவந்ததால் பி பி எஸ் பாடியுள்ளார். ஆழியார் விருந்தினர் இல்லம் அருகே
படப்பிடிப்பு.வின்சென்டின் வண்ண ஒளிப்பதிவின் ஆளுமை பளிச்சிடக்காணலாம் .67 வயதிற்குப்பின்னும் காட்சியில் கேமரா பேசுவதை கவனியுங்கள்.ரசித்து மகிழ இணைப்பு இதோ.
எங்கெங்கும் உன் உருவம் [கண்ணம்மா] கண்ணதாசன், இசை :சங்கர் -கணேஷ் , குரல் பி
பி ஸ்ரீனிவாஸ்
வெகு இயல்பான நடையும் , நடிப்பும் கிராமத்து சூழலில் புல்புல் தாரா இசை
நிகழ்ச்சியில் ஊடாடும் காதல் , காதல் பார்வை, பொது மக்களின் பங்கேற்பு என பயணித்த நல்ல பாடல் முத்து ராமன் -கே ஆர் விஜயா பங்கு கொண்ட காட்சி. கண்டு மகிழ இணைப்பு இதோ .
நிறைவு
அன்பன் ராமன்
No comments:
Post a Comment