Wednesday, April 9, 2025

DIRECTOR - P MADHAVAN -4

 DIRECTOR - P MADHAVAN -4

இயக்குனர் பி மாதவன் -4

உன் கண்ணில் நீர் வழிந்தால் வியட்னாம் வீடு-1970, கண்ணதாசன் இசை ; கே வி மஹாதேவன் , குரல் டி எம் எஸ்

நீண்ட நெடு வாழ்வு வாழ்ந்து வயோதிக நிலை எட்டிய தம்பதியாக சிவாஜி, பத்மினி , இவள் மட்டுமே தன்னுடன் பயணிக்கிறான் என்பதை உணர்ந்து உணர்த்தும் கணவன். உன் கண்ணில் நீர் வழிந்தால் என பாவம் கொட்ட. அவளின் மகத்துவத்தை " வேரென நீ இருந்தாய் , நான் வீழ்ந்து விடாதிருந்தேன் " என்று அவளின் சிறப்பை கவியரசர் பேச , மாமா கே வி மஹாதேவன் இசையில் டி எம் எஸ் உணர்ச்சி பொங்க பாடியுள்ளார். பாடலுக்கு இணைப்பு இதோ

UN KANNIL [VIETNAM VEEDU 1970] KD KVM TMS

https://www.google.com/search?q=vietnam+veedu+movieunkannil+neer+vazhindhaal+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqXpSp-G58RUqXLpB4Bs73QjAW15Q%3A1744171026960&ei=EvD1Z6iwOvLgseMPx_7l-QI&oq=vietnam+veedu+movieUNKANNIL+NEER+VAZHINDHAAL+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOHZpZXRuYW0gdmVlZHUgbW92aWVVTktBTk5JTCBORUVSIFZBWkhJTkRIQUFMIFZJREVPIFNP

'தொடுவதென்ன தென்றலோ' [சபதம் 1971] கண்ணதாசன்  இசை : ஜி கே விங்கடேஷ் குரல்: எஸ் பி பாலசுப்ரமணியன்

விரக தாப பிடிப்பில் உழன்று பாடும் வாலிபன் . ஆரம்ப கால எஸ் பி பி, பாவங்களை பிழிந்து கொப்பளிக்க , பாடல் வெண்  மோகம் போல் மிதக்க, கேட்பவர் வயப்பட  மிக்க மென்மையான இசைக்கோலம் கருவிகளும் குருவிகள் போல் மென் குரலில் ஒலிக்க , கேட்க தெவிட்டாத பாடல். புன்னகை அரசி-ரவிச்சந்திரன் முக பாவங்களை ரசிக்க இணைப்பு இதோ

THODUVADHENNA THENDRALO SABATHAM [1971 ] KD  GK V , SPB

https://www.google.com/search?q=thoduvadhenna+thendralo+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqCRxTuLZbdXAw-ldB58-m15uwE9Q%3A1744169391040&ei=r-n1Z8iWApKxseMPiaDssQo&oq=THODUVADHENNA+THENDRALO+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiI1RIT0RVVkFESEVOTkEgVEhFTkRSQUxPIFZJREVPIFNPTkcgKgIIADIFECEYoAEyBRAhGKABMgUQIRigATIFECEYoAEyBRAhGKABSKq4AlCxZVic9gFwA3gBkAEAmAG8AaABuyKqAQQwL

மண மேடை [ஞான ஒளி -1972] கண்ணதாசன் , எம் எஸ் வி, பி சுசீலா

ஒரு சோகம் இழையோடும் காதலை சொல்லும் பாடல். . இருவரும் கிறித்தவ மரபினர் என்று உணர்த்தும் இசையின் நடை . பாடல் நெடுகிலும் தேவாலய ரீங்கார இசை அமைப்பைக்காணலாம்; பூங்காற்று, பெருமூச்சு போன்ற சொல் அமைப்புகள் சோகபிம்பங்கள். என்று கேட்டாலும் சஞ்சலம் ஏற்பட வைக்கும் மகோன்னதம் பாடலுக்கு இணைப்பு இதோ 

MANA MEDAI [GNAANA OLI-1972] KD MSV PS

https://www.google.com/search?q=gnaana+oli+movie+mana+medai+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zol8l179XqVfRtsQ_CQWkwYREhJnA%3A1744170534225&ei=Ju71Z8DCDa2fseMP_oT7mA4&oq=gnaana+oli+movie+MANA+MEDAI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJ2duYWFuYSBvbGkgbW92aWUgTUFOQSBNRURBSSBWSURFTyBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApI52ZQoAZYxE9wAXgBkAEAmAHzAaAB7CKqAQ

சிவகாமி ஆட வந்தால் [பாட்டும் பரதமும் - 1975] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி எஸ்

காட்சியில் இரு பெரும் கலைஞர்கள் போட்டியிட , பாரதக்கலையின் மாண்பினை உணர்த்திய ஆக்கம். நடன இயக்கங்களுக்கெனவே ஆக்கப்பட்ட இசை , தாள நடைகள். பாடலை சிதம்பரம் ஆலய அமைப்பில் காட்சிப்படுத்தி உள்ளனர். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

SIVAGAAMI  AADA PAATTUM BHARATHAMUM,1975, KD MSV TMS PS

https://www.google.com/search?q=paattum+barathamum+movie+sivakami+aada+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zrxgWKexdMfcm6cFjBdSCMNwFHXcA%3A1744170015284&ei=H-z1Z5qVEZWTseMPoc_bgQU&oq=PAATTUM+BARATHAMUM+MOVIE+SIVAKAMI+AADA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMlBBQVRUVU0gQkFSQVRIQU1VTSBNT1ZJRSBTSVZBS0FNSSBBQURBIFZJREVPIFNPTkcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkj6gwFQ6gdYoGpwAXgBkAEAmAHaAaABwBmqAQYwLjI1LjG4AQHIAQD4AQGYAhmgAtUYwgIKEAAYsAMY1gQYR8ICBxAjGLACGCfCAgo KD MSV TMS PS 1975

காதல் ராஜ்ஜியம் எனது [மன்னவன் வந்தானடி -1975] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

அதியற்புதமான காவியச்சொல்லாடல் , ஓசை நயம் இசை நளினம், ஓங்கி மிளிர்ந்த இசைக்கூறுகள் நிறைந்த  காதல் பாடல். ஒரு சில பாடல்களில் மட்டுமே காணக்கூடிய சொற்கட்டுகள் என பன்முக சிறப்பு கொண்ட ஆக்கம். மெல்லிசை மன்னர் ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் தந்து சொற்களை அழகு படுத்தி , பிரத்யேக இசை வழங்கும் ஒரு ராட்சசன் . ஒரு கல்லில் இரண்டு மாங்காய்அல்ல மூன்று மாங்காய்கள்  என்பது போல படப்பிடிப்பு என்ற ஒரே செயலில், கவிதை, இசை மற்றும் அதன் உள்ளார்ந்த சிறப்புகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்த  ஒரு கொடூரம் இந்தப்பாடல். பாடல் துவக்கம் முதல் ஓடும் குதிரையின் குளம்பொலி ஒலிக்க, திரையில் குதிரை கழுதை போல் நடந்து வரும் காட்சியை எவ்வாறு மனம் உவந்து உருவாக்கினார்?கொடுமை . இணைப்பு இதோ

KAADHAL RAAJJIYAM [MANNAVAN VANDHAANADI -1975\ KD MSV TMS PS

https://www.google.com/search?q=MOVIE+MANNAVAN+VANDHAANADI-KADHAL+RAAJJIYAM+ENADHU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqp29J_wf9Z1MtOtK-X-BFqj3dxsQ%3A1744171318589&ei=NvH1Z-nlI_WdseMPponrqAg&ved=0ahUKEwjp2Py-iMqMAxX1TmwGHabEGoUQ4dUDCBA&oq=MOVIE+MANNAVAN+VANDHAANADI-KADHAL+RAAJJIYAM+ENADHU+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiPk1PVklFIE1BTk5BVkFOIFZBTkRIQUFOQURJL

நிறைவு

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

AMMANI, AMMANI

  AMMANI, AMMANI அம்மணீ அம்மணீ [ RENGA VENDAAM- 5 ] அம்மணீ அம்மணீ   என்று வாசலில் குரல் -காலை 7.50 மணிக்கு .  இங்கு அம்மண மணி என்று   யா...