LET US PERCEIVE THE SONG – 17
பாடலை உணர்வோம் -17
பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம்
-1966] பஞ்சு அருணாச்சலம், எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ் , சுசிலா
கதைக்களம் மஹாபலிபுரம் . நாயகன் நாயகி இருவரும் பல்லவர்
காலத்து பாத்திரங்களாக சித்தரிப்பு. சமகால நபர்கள் எனினும் மனதளவில் சரித்திர காலத்தில்
இருக்க உடையும் அணிகலன்களும் பல்லவ பாணியில் அமைத்துள்ளனர். தற்கொலைக்கு முயலும் நாயகியை
தடுத்து நிறுத்த துவங்கும் சொல் ' சிவகாமி ' என வெளிப்பட, நாயகனை நோக்கி அவள் திரும்ப,
காட்சி துவங்குகிறது. பெண்ணின் பின்னோக்கிய பார்வையை ஈர்க்க ஒரே சொல் தான் பாடலை துவங்குகிறது.
ஆம் -சிவகாமி, சிவகாமி என்ற ஆண் குரல் ; குரல் ஈர்ப்பில் நாயகி ஐக்கியம் கொண்டு
ஓ ஓ ஒ ஓ ஓ என்று பங்களிக்க , மெல்லிசை மன்னரின் இசைக்கோலம் துவங்குகிறது ; அதுவும்
எப்படி ? ஒரேகூட்டம் --வயலின் கூட்டம் , bow என்னும் வில் அனைத்தும் முனைக்கு முனை
தந்திகளை உரசி முன்னும் பின்னும் போய் வர , ஒரு தேவலோக சூழல் பின்னிக்கொள்ள மென் குரலில்
'பொன்னெழில் பூத்தது புதுவானில் , வெண் பனி
தூவும் நிலவே நில் என்ற பல்லவிக்கேற்ப இசையும் நின்று விட ஜல் ஜல் ஜல் என்று சிவகாமி ஓட மீண்டும் பாடல் உயிர்
பெறுகிறது. சொற்களுக்கான இசை பாடல் நெடுகிலும் வியாபிக்க, ஒருவருக்கொருவர் முன்னாளில்
காட்டிய நெருக்கம் வர்ணனையில் பாடலாக பயணிக்க இது ஒரு 'தொற்று' ப்பாடல் ஆம், கே ட்டவரை
தொற்றிக்கொண்டு , உள்ளூர ரீங்கரித்து சிறைப்படுத்தும் . இந்த வகை பாடல் அமைப்பில் எம்
எஸ் விக்கு நிகர் அவரே தான்.
இது அற்புதமான சொல்லாடலும், இலக்கிய மணமும் ,மரபும் நிறைந்த
ஆளுமை. இப்போதும் கூட இது கவியரசரின் எழுத்துதான் போலும் என நினைப்போர் ஏராளம் அவ்வளவு
நயமும் நேர்த்தியும் அன்றைய சமகால பாடல்களை விட தூக்கலாக மிளிர்வதைக்காணலாம். கருப்பு
வெள்ளை படம், எனினும் பாடலில் எந்த ஈர்ப்புக்கும் பஞ்சம் இல்லை. இப்பாடல் ஆய்வுக்குகந்தது
-குறிப்பாக, சொற்கட்டுகள், இசைக்கருவிகள், தாள அமைப்புகள், வேறுபாடுகள் என பன் முகங்கள்..
அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம் .
பாடலுக்கு இணைப்பு
முதலில் கவிதையை நன்கு உள்வாங்குதல் நலம்
https://www.google.com/search?q=ponnezhil+pooththadhu+pudhu+vaanil+video+song&oq=ponnezhil+pooththadhu+pudhu+vaanil+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyBwgDECEYjwLSAQkyMDU5NmowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f72525db,vid:aU4M0bdlcXc,st:0 kalangarai
vilakkam 1966 panju , msv tms ps
கணேஷ் க்ருபா இசைக்குழுவின் மேடை கச்சேரியில் பாடலை கேட்க , மேலும் பல பண்புகள் . பளிச்சிடக்காணலாம்
. இணைப்பு இதோ
PONNEZHIL POOTHATHU by
KOVAIMURALI & JANAKI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai
தயவு செய்து பாடலையும் இசைக்குழுவின் நிகழ்ச்சியையும்
கேளுங்கள்; இவன் வேலையற்ற வீணன் என நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை , பாடலை ஆழ்ந்து
கவனித்துக்கேட்க பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் , அப்போது புலப்படும், கவிதையின் ஆழம்,
சொல்லின் நேர்த்தி , இசையின் அனுசரணை மற்றும் மேலோங்கிய குரல் பாவங்கள் , தாள அமைப்புகள்
தரும் ஆதரவு என எண்ணற்ற பண்புகளை நாம் தவற விடுகிறோம் என்பதும் விளங்கும்
பாடலின் நுணுக்கங்கள் அடுத்த பதிவில் .
A song I have been mad after, right from the day I heard for the first time. What an orchestration and melody. It's a song which is beyond any analysis by any one, unique of its kind, which only MSV can give !!
ReplyDelete