Thursday, May 22, 2025

AVOIDING MISTAKES -11

AVOIDING MISTAKES -11

பிழை தவிர்த்தல் – 11

UP [ISOLATED] Vs combined as in keep up /upKeep, Bring up /Upbringing /brought up ,

இரு வெவ்வேறு சொற்களை இணைத்து ப்பேசும் பொது உருவாகும் -பொருள் சற்று மாறுபட்டதாக இருக்கும் . சில சூழல்களில் முற்றிலும் எதிர்பாராத பொருளைக்கூட தோற்றுவிக்கலாம் பின் வரும் சொற்பிரயோகங்களை ப்பாருங்கள்.

 UP என்ற சொல் மேலே என்ற பொருள் தரும்.   GIVE = கொடு அல்லது வழங்கு என்ற பொருளில் வருவது   இரண்டையும் இணைத்து GIVE UP  என்றால் முற்றிலும் எதிர்பாராத பொருள் [கைவிடு அல்லது நிறுத்திவிடு என்று பொருள் தரும்] .

இதே போல KEEP = வைத்திரு  UP =மேலே /உயரே  ஆனால் KEEP UP = பராமரி /காப்பாற்றி வை என்ற பொருள்

சரி UP KEEP = முறையாக  பராமரித்தல் 

BEAT = அடி அல்லது வென்று விடுதல்.  INDIA BEAT AUSTRALIA =இந்தியா ஆஸ்திரேலியா வை வென்றது.                  சரி UP BEAT = மிகுந்த களிப்பு /உற்சாகம் கொண்ட நிலை [UP BEAT =மேலே ஏறி அடிப்பது அல்ல ]

BRING =கொண்டு வருதல் UPBRING = பண்புகளோடு வளர்த்து வருதல் , இதன் இறந்தகாலசொல் [PAST TENSE ]= BROUGHT UP . இதை தமிழில் சொல்ல பலரும் அவனுடைய BROUGHT UP அப்படி என்கிறார்கள். ஆனால் முறையாக சொல்லவேண்டுமெனில் 'அவனது, 'UP BRINGING' அப்படி- என்பதே சரி. இவ்விடத்தில்  'UP BRINGING' என்பது அவன் வளர்க்கப்பட்ட விதம் என்று பொருள் தரும் 

LOCK /LOCK UP

LOCK=

என்றால் பொதுவாக பூட்டு அல்லது அடைத்து வைப்பது                                 LOCK UP என்ற சொல்அமைப்பில் அது காவல் நிலையத்தில் உள்ள இடத்தில் சந்தேகத்தின் பேரில் அடித்து வைக்கும் இடம் என்று பொருள் தருகிறது. இப்படி ஒரு சொல்லுடன் 'UP’' சேரும்போது வேறு வகையான பொருள் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

HILL = மலை, UPHILL என்பது மலை மேல் அல்ல மாறாக கடினமான செயல் என்று உணர்த்துவது; UP THE HILL என்றால்  மலை மேல் / மலை மீது என்று பொருள் தரும்.  இந்தப்பொருள் மாற்றம், இடையில் நுழைந்த 'THE' ஏற்படுத்தும் விளைவு. 

SHUT = என்பது  மூடுவதை குறிக்கும் SHUT THE DOOR = கதவை மூடு .ஆனால் SHUT UP என்பது கொச்சை மொழியில் பேசாதே என்று சொல்வது. ஆங்கில மொழி எழுத்து வழக்கில் SHUT UP என்பது தரக்குறைவான சொல்லாடல்

MEANWHILE / IN THE MEAN TIME, [IN THE MEANWHILE?]

ஆங்கில மொழி வழக்கில் ஒரே பொருளை உணர்த்தும் இரண்டு சொல் அமைப்புகள் MEANWHILE மற்றும்            IN THE MEANTIME , இரண்டிற்கும் "இதற்கிடையே அல்லது இடைப்பட்ட காலத்தில் " என்ற ஒரே பொருள் தான் .

இதை புரிந்து கொள்ள TIME = நேரம் / கால அளவு கிட்டத்தட்ட அதே பொருள் தான் WHILE என்ற சொல்லுக்கும்

MEANWHILE = இடைப்பட்ட காலத்தில் , MEAN TIME =இடைப்பட்ட நேரம் , இடைப்பட்ட நேரத்தில் என்று சொல்ல IN THE MEAN TIME  என்று சேர்க்கிறோம். IN  THE MEANWHILE என்பது தவறு MEANWHILE = இடைப்பட்ட காலத்தில் என்பதால்  'IN THE ' தேவை இல்லை . இதைப்புரிந்து கொள்ளாமல், அநேகர்               IN  THE MEANWHILE  என்று கம்பீரமாக உளறக்காணலாம் .

வளரும்

அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

MAKE LEARNING –A PLEASURE -4

   MAKE LEARNING –A PLEASURE -4 Any special activity like sewing, painting, acting, driving, carpentry turns pleasurable if the learner enjo...