Thursday, May 22, 2025

DIRECTOR : CVSRIDHAR – 2

 DIRECTOR : CVSRIDHAR – 2

இயக்குனர் ஸ்ரீதர் -2

கண்ணிலே நீர் எதற்கு [போலிஸ்காரன் மகள் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி டொவிந்தராஜன் , எஸ் ஜானகி ,

கேள்வியை விட நெஞ்சில் தைக்கும் முள் போன்றே சுரீர் என உரைக்கும் முள் பதில். இப்படத்தில் அமைந்த அனைத்துப்பெண் குரலுமே -ஜானகி தான் [ஆண்டு-1962 ] ஜானகியை கண்டு பிடித்தவர்கள் கவனிக்க. உணர்ச்சி மிக்க ம் --வஞ்சிக்கப்பட்ட தங்கையை எப்படி தேற்றுவது எதையோ கேட்க பளீர் பதில் . அதியற்புத இசை கோலங்கள். கேட்டு தவிக்க இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=QrhwfQhZTl0  poliskaran kannile

https://www.google.com/search?q=kannile+neer+edharku+video+song&oq=kannile+neer+edharku+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRifBTIHCAUQIRifBTIHCAYQIRiPAtIBCTQ3NzQwajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:cd47e590,vid:njLdGD__hb4,st:0  

துன்பத்தில் சிக்கியவனின் மனசாட்சியின் குரலாக  பாடல் மயக்கமா கலக்கமா [சுமை தாங்கி -1963]  கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி -பி பி ஸ்ரீனிவாஸ்

சு ஆறுதல்  வழங்கும் மனம் , குழம்பிய நாயகன் . படிப்படியா விடை வழங்கியபடி மன ஆறுதல் நோக்கி பயணிக்கும்மனிதன். அவனது குழம்பிய நிலையை ஒளிப்பதிவு வெவ்வேறு வகைகளில் காட்டுகிறது. ஒரே காட்சியில் 3 உருவங்கள் 1 நிழல் 2 உயிர் ஓவியங்களாக. ஆனால் ஒளி அமைப்பில் பிரமிக்க வைத்த காட்சி ஒளியும் நிழலும் கைகோர்த்த உன்னதம் இசையும் கவிதையும் உயர் தரம் கேட்டு உணர இணைப்பு இதோ.

mayakkamaa [sumai thaangi -1962] kd vr pbs

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0

நாளா ம் நாளா ம் [கா நேரமில்லை 1964] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா

இது இலக்கிய வகை சொல்லாடல் -நம்பி, நங்கை , இந்திரன் தேர், நாமும் இன்றொரு காவியம் என்ற அறிவிப்பு , இசையின் வியாபகம் இசை விமரிசகர் சுப்புடு அவர்களையே யோசிக்க வைத்தது எனில் சொல்ல என்ன இருக்கும். இசைக்கருவிகளை நர்த்தனம் -குறிப்பாக தபலாவின் அதி விரைவு நடைகள்,  குரல்களின் இயல்பான பயணம் இவை ஒரு புறம் , இருக்கிறதா என்று கேட்கத்தூண்டும் மெல்லிய மேக் அப் , உடை தேர்வு, அமைதியான சூழலில் வெகு சிறப்பான ஒளிப்பதிவு என்று மிளிரும் மார்க்கண்டேய வகை இது. கேட்டு மகிழ இணைப்பு. 

நாளாம் நாளாம் [காதலிக்க நேரமில்லை ] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி எஸ் , சுசீலா

https://www.google.com/search?q=naalaam+naalaam++thirunaalam+video+song+download&newwindow=1&sca_esv=376a3409f9ec4160&sxsrf=AHTn8zqXFPK6aOMXS0daiRZrkpmi10FNHA%3A1747488812507&ei=LJAoaLLZHr6gseMPpaLPmAs&ved=0ahUKEwiyn6yPz6qNAxU-UGwGHSXRE7MQ4dUDCBA&oq=naalaam+naalaam++thirunaalam+video+song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMG5hYWxhYW0gbmFhbGFhbSAgdGhpcnVuYWFsYW0gdmlkZW8gc29uZyBkb3dubG9hZDIIECEYoAEYwwRI8VtQ-xxYgElwAXgAkAEBmAG7AqAB6xWqAQcwLjUuNy4xuAEMyAEA

என்ன பார்வை [கா. நே .1964]  சுசீலா ஜேசுதாஸ்

திரு ஜேசுதாஸ் அவர்களுக்கு வண்ணப்படத்தில் கிடைத்த முதல் டூயட். அன்றைய சென்னையின் அன்றைய தெய்வீகத்தலம் மெட்றாஸ் யூனிவர்சிட்டி ஒருபுறம் எதிர் புறத்தில் நீண்டு விரிந்து அகன்று பரந்த துப்புரவான மெரினா கடற்கரை , தூரத்தில் நீலக்கடல் என்று பட்டப்பகலில் அமைந்த பாடல். கவிதை நயம் இசை நளினம் ஒய்யார நடனம், வேறெவருமே இல்லாத சூழலில் விளைந்த காதல் [இப்போது போல் 300 பேர் அல்ல]. என்று கேட்டாலும் இளமையும் இனிமையும் பின்னி கிளர்ந்தெழும் இசைப்புரட்சி மண்டோலின் பியானோ துவக்கம் வெளிநாட்டு கார் [அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாச்சலம் அவர்களின் வாகனம்] , கண் கவர் ஆடைகளுடன் வெகு நேர்த்தியான வண்ண ஒளிப்பதிவு கண்டு மகிழ இணைப்பு இதோ  

ENNA PAAR4VAI  KJJ PS

https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0

நன்றி

அன்பன் ராமன்

 

 

 

1 comment:

  1. Wonderful film, Matchless Music, Everringing Songs..
    CVs KD MSV ..wow..
    MSV's contribution is fabulous.

    ReplyDelete

EDUCATION AND SOME HURDLES -8

EDUCATION AND SOME HURDLES -8                     [Collective effort-6] TEACHING INVOLVES AUGMENTATION.-III It stands opportune to tel...