IN OUR SKIES -2
நமது வானில்-2 ..
[ THE ‘AKASH’ MISSILE SYSTEM ]
இந்த வடிவமைப்பின் தலைவர் நிலையில்
இருந்து படிப்படியாக ஒவ்வொரு தேவைக்கும் வடிவமைப்பில் மாற்றங்களை செய்து அனைத்து துறையினரின்
விருப்பங்களுக்கும் ஈடுகொடுத்து வடிவமைக்கப்பட்ட ஏவுகணை திட்டத்த்தின் இயக்குனராக செயல்
பட்டவர் தான் திரு ப்ரஹலாதராமராவ்.
சமீபத்திய குங்குமப்பொட்டு [operation sindhoor] செயல் நிகழ்வுக்குப்பின் இந்திய
நாட்டின் பல ஊடகங்கள் திரு ராவ் அவர்களின் பேட்டியை வெளியிட்டன. அதில் இருந்து திரட்டிய தகவல்கள் இப்பதிவின்
அங்கங்களாக வெளியிடுவது மன நிறைவையும் மகிழ்வையும் தருவதை உணர்கிறேன்.
இதுபோன்ற ஒரு திட்ட வடிவமைப்பின்
காலகட்டத்தில் திரு ராவ் அவர்களை இந்த உருவாக்கத்தை "நீங்கள் செய்யுங்கள்"
என்று வேண்டுகோள் வைத்தவர் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கள் என்பதை நன்றிப்பெருக்கோடு
நினைவு கூறுகிறார் திரு ராவ் அவர்கள்.
மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் சோர்வடையாமல்
இடர்களைந்து முன்னேற உரிய ஆலோசனைகளையும் திரு.கலாம் வழங்கிக்கொண்டே இருந்தார் என்று குறிப்பிடுகிறார் திரு ப்ரஹலாதராமராவ்.
இப்பணிகள் 1990 ம் ஆண்டு வாக்கில்
துவங்கி 15 ஆண்டுகள் நடந்ததாக பதிவிடுகிறார் திரு ராவ்.
இந்த ஏவுகணை
[-மிஸ்ஸைல்] ஆகாயத்தை ஆளும் என்று இப்பெயர் [ஆகாஷ்] வைத்தனர் என்று புரிகிறது. அப்படி 'ஆகாஷ்' ஏவுகணைக்கு என்ன சிறப்பு ?
திரு ராவ் சொன்னது இது சிந்தித்து செயல் படும் மிஸ்ஸைல் .
என்னது மிஸ்ஸைல் சிந்திக்குமா என்கிறீர்களா ?
ஆம் இந்த மிஸ்ஸைல் சிந்திக்கும். இதில் நுண்ணறிவு வழங்கும் தொழில் நுட்பம் உள்ளது. எதிரியின் இலக்கை [டார்கெட்டை] பார்த்ததும் அதில் உள்ள ரேடார் அமைப்பை முதலில்[JAMMING
செய்து] முடக்கிவிடும். எனவே அவ்விலக்கின் ரேடார் எந்த எதிர்வினைக்கும் தன்னை இயக்கிக்கொள்ள முடியாது. எதிரியின் திறன் முடங் கி விடுவதால் அக்கருவிகள் பயன் தராது
அதாவது ஆகாஷ் கருவியின் எந்த சிக்னலையும் உணரும் முன் அதி பயங்கர வேகத்தில் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கி அழித்துவிடும். [ADVANCED SENSORS இதன் அதி வேகச்செயல் பாட்டிற்கு உதவுகின்றன]
வேறு எந்த ஏவுகணையும் போல இல்லாமல் ஆகாஷ் எப்போதும் ஒரே சீரான வேகத்தில் முன்னேறி ப்பாயும் என்கிறார் திரு ராவ். இதன் ப்ரொபல்ஷன் என்னும் உந்து சக்தி[
integrated Ramjet rocket] வேறுவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்தித்து இயங்க வசதியாக மென்பொருள் [S/W] மற்றும் அமைப்பின் H/W இவை விசேஷமாக உருவாக்கப்பட்டதால் இதன் செயல்பாடு வேகம், துல்லியம் இரண்டும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள முடியாத வீரியத்தைக்காட்டும். சொல்லப்போனால் வெகு நேர்த்தியான வடிவமைப்பு என்று புரிந்து கொள்ளலாம்
.பயணிக்கும் பாதையில் தேவைப்பட்டால் விலகிச்சென்று இலக்கைத்தாக்கும் வகையில் இந்த ஆகாஷ்
சிஸ்டம் அதிநவீன ஆற்றலுடன் சிந்தித்து செயல் படும். இது இப்படி செய்ய வேண்டும் என்றுஎண்ண, என்ன உணர்வு தோன்றியது?-
கேள்விக்கு திரு ராவ் சொன்ன பதில் . ஏவுகணை
தயாரிப்பில் நமது பங்களிப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு பயன் தர வேண்டும் . எனவே பாதுகாப்பு
குறித்த தேவைகளை முப்படையினரின் தேவைக்கேற்ப அமைக்க வேண்டியது அவசியம் . அனைவருக்கும்
பொதுவான தேவை எதிரியின் திறனை முடக்கி அழிப்பது தான். ஆனால் வான் வெளி / தரைவழி [infantry] மற்றும் கப்பற்படை மூன்றிற்கும் பிரத்தியேக நுணுக்கங்கள்
தேவைப்படும் .
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment