LET US PERCEIVE THE SONG -24
பாடலை உணர்வோம் -24
'கர்ணன்' திரைப்படம்
ஒரு "Magnum opus" என சென்ற
பதிவிப்பில் தெரிவித்துள்ளேன். எந்த அளவுகோல் கொண்டு பார்த்தாலும் அதன் வியாபகம் மகத்தானது.
அந்த மகத்தானத்துள் அமைந்த பாடல்கள் அமைந்த இசை சாம்ராஜ்யம் அதுவே இன்னோர் மகத்தானம் , கர்னணனின் பெருமை தானம் எனில் இப்படத்தில் பாடல்கள்
செவிக்கு விருந்தளிக்கும் சுவை தானம் ; இசையிலும்
கருவிகள் தேர்விலும் அவற்றின் மீட்டல்களும் 1964 ல் நிகழ்ந்து இன்றளவும் கோலோச்சும்
கம்பீரம் எழுதி விளக்குதல் எளிதன்று ஆயினும் எழுதாமல் இருத்தல் நல்ல அமைப்புகளைப்பாராட்டாது
முடங்கும் கயமை என்றே எண்ணுகிறேன். உனக்கோ இசை அறிவு சற்றும் இல்லை நீ என்ன பாராட்டுவாய்
? என்றெண்ணுவோருக்கு எனது தன்னிலை விளக்கம் . நான் இசையை விளக்கவோ விமரிசிக்கவோ முயலும்
விபரீத விளையாட்டில் இறங்கிவிடக்கூடிய இறுமாப்பு கொண்ட எழுத்தாளனும்
அல்லன் . பின்?
மனதில் பாடல்கள் தோற்றுவிக்கும் உள்ளார்ந்த இயக்கங்களை பகிர்வதன் மூலம் சிலர்
காணவோ /உணரவோ மறந்த சில தகவல்களை வாசகர் முன் வைத்தாலாவது நீர் பருகும் பறவைகள் போல
சிறிது தாகம் தீர்த்துக்கொள்ள உதவுமோ என்ற சிறு நப்பாசை தான் . எதையும் எழுதி விளக்கும்
அருகதை அற்றவன் தான் ஆயினும் ஆசை -எவரையும் விட்டதில்லை என்னும் உலகில் நான் மட்டும்
விதி விலக்கா என்ன? விதி என்ன என்று விளங்காதவன் -இப்படித்தான் ஏடாகூடங்களில் சிக்கி
அவதியுறுவான் என்பதை அறிந்தும் ...? விதி யாரை விட்டது? ---உங்களைத்தான் சொல்கிறேன். அ அ அ --நாங்க படிக்கமாட்டம்ல
, மாட்டம்ல என்று கொக்கரித்தாலும்’ பல பல என்று பொழுது விடியும் முன் "டொய்ங்"
அண்டராய்டு போன் ஒலி உங்களை கூப்பிடும் போது யாரோ உற்றவர் என்று வாட்ஸாப் பகுதியில் நுழைய
உற்றவர் அல்ல மற்றவர் இவர் என்று நீங்கள் சலிப்படைந்தாலும், அன்றாடம் கடமை தவறாமல் உங்களை வைகறையில் துயில்
எழுப்பும் தூய பணி இது என்றே எழுதுகிறேன் வேறொன்றுமில்லை, சரி சரி நீ எழுதிக்கொண்டே
இரு எனக்கென்ன வந்தது என்போரை நான் என்ன செய்ய இயலும்?.
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை வெல்லாது
ஒருநாளும்---- என்று நன்கறிவேன் எனவே தொடருகிறேன்.
சரி இன்றைய பாடல் கர்ணன் [1964]ம் வருடத்திய படைப்பு]
அதில் இருந்து மற்றுமோர் பாடல் . என்ன ஒரே படத்தில் இருந்து, தொடர்ந்து இரண்டு பாடல்களா?
என்றெண்ண வேண்டாம். பாடல்களின் தரம் அப்படி
கவியரசரும் செவி அரசரும் -உனக்காச்சு எனக்காச்சு என்று
களமிறங்கினால் என்ன நடக்கும்? அப்பாடா நமக்காச்சு நல்ல பாடல் என்று மகிழ்வடையலாம்.,
சரி இன்றைய தேர்வு
கர்ணன்
[1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி,
பி சுசீலா
மற்றுமோர் இலக்கியத்தரம் கொண்ட கவிதை
"என்னுயிர்
தோழி கேளொருசேதி ன் இது தானோ உங்கள் மன்னவன் நீதி " முதல் வரியிலேயே தலைவி தலைவனை வேறுபடுத்தி காட்டுகிறாள் என்னவென்று ? இது தானோ உங்கள் மன்னவன் நீதி? அது
என்ன உங்கள் மன்னவன் ?
அவ்வளவு விலகி நிற்கிறான் மனைவியிடம் இருந்து.. சென்ற
பதிவில் நாம் உணரமுயற்சித்த பாடலில் கண்கள் இங்கே கால்களும் இங்கே என்ற தனது நிலை தடுமாறி
காதலனை நோக்கி தான் படையெடுத்ததை சொன்ன பெண் அவள். இந்தப்பெண்ணோ அரசனை மணந்த அரசி.
காதலன் காதலி நெருக்கம் மணம் முடிந்த ஆன் -பெண் இடையே இருப்பதில்லை என்ற கள யதார்த்தம் தொன்று தொட்டி நிலவி வருவதை கவியரசர்
குறிப்பிடுகிறாரோ அல்லது காட்சியின் தேவை கருதி இது போன்ற சொல்லாடலைக்கையில் எடுத்தாரா
கண்ணதாசன்? நீண்ட தேடுதலுக்கான சூழல் இது என்ற அளவில் நிறுத்திக்கொள்வோம்
பாடலில் துவக்கம் பல்லவி, பல்லவியிலேயே மன்னவன் நீதியின்
நிலை குறித்து- ஐயம் எழுப்பும் அரசி அதுவும் எப்படி? தன்னுயிர் போல மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே? தலைவன் என்றாயே [நீ சொன்னாய்
அவன் அப்படி, இப்படி, அவன் போல் எவர் என்றவாறெல்லாம் –ஆனால்,]அவன் அப்படி இல்லையே என்ற
பொருள் உள்ளடங்கி இது இலக்கிய நிலைக்கு உயர்ந்த
சொல் ஆளுமை.
அப்போதும் அவள் மீது பழி சொல்லாமல் --'என்றாயே "தோழீ " ,என்று அவளுக்குரிய மரியாதையைக்குறைக்காமல்
வாதிடும் அரசி. பாடலில் இரண்டே சரணங்கள் தான்
, பொதுவாக அன்றைய பாடல் அமைப்பில் மூன்று சரணம் அமைப்பது இயல்பு. ஆனால் இங்கே சற்று
விலகல்.
ஏன் எனில் சுற்றி வளைத்துக்கொண்டிருக்காமல் நேரடியாக, அரசி --சொல்ல வேண்டியதை கௌரவம் குறையாமல் வெகு நேர்த்தியாக 'புட்டு புட்டு
வைக்கும் 'திறன் மேம்பட பாடுகிறாள் இல்லை இல்லை குற்றப்பத்திரிகை வெளியிடுகிறாள் ;
எப்படி எனில்
சரணம் 1
அரண்மனை அறிவான் , அரியணை அறிவான் , அந்தப்புரம் ஒன்று
இருப்பதை அறியான் ,
வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் , மனைவியின் வழக்கை
மனத்திலும் நினையான் [இவ்விடத்தில் சாவித்திரியின் ஏளனப்புன்னகை நொடியில் தோன்றி மின்னலென மறைவதை கூர்ந்து கவனியுங்கள்.
இந்த முதல் சரணத்தில் தான் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர்
இசையின் வலிமையை கட்டமைக்கிறார்
அரண்மனை அறிவான் , அரியணை அறிவான் என்ற சரணவரியின் முதல்
படியில் ஒரு ஆலாபனையை கட்டவிழ்த்து பாடலை உச்சம் தொட வைத்துள்ளார் . ஆதனை சிலர் "ஆ " கார வரிசை என்பர் என்
போன்றோர் ஆலாபனை என்று சொல்லி விளங்கிக்கொள்ள
முயல்வோம். அதாவது ஆ அ அ ஆ ஆ
அ ஆஆ என்று தொடர்ந்து 30 வினாடிகள் இது ஏற்ற இறக்கங்களுடன் அருவியெனப்பாய சொல்
இல்லாமலே சூடும் சுவையும் துடிப்பும் வியப்பும் அதிகரிக்க பாடல் பயணித்து பின்னர் அந்தப்புரம்
ஒன்று இருப்பதை அறியான் என்று முதல் சரணத்தை நிறைவு செய்கிறார் சுசீலா மீண்டும் இரு முறை பல்லவியை இசைத்து இறுதிசரணத்தில்
பாடல் நுழைகிறது.
இப்போது சரணம் 2
இன்றேனும் அவன் எனை அவன் நினைவானோ , இளமையைக்காக்க துணை
வருவானோ
நன்று தோழி நீ சேதி சொல்வாயோ , நங்கையின் துயர சேதி சொல்வாயோ”
என்று உரிய பாவத்துடன் பாடி மீண்டும் பல்லவியில் என்னுயிர்
தோழி ' ல் துவங்கி -- “இது தானோ உங்கள் மன்னவன் நீ ஈ ஈ தி என்று கோபம் கொப்பளிக்க பாடும்
அரசி . பாவங்களை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் கவிஞர்/இசை அமைப்பாளர்/ பாடகர் என
தத்தம் பங்குக்கு கொடையென வழங்கி நம்மை இசை வெள்ளத்தில் அமிழ்த்துகிறார்கள்.
கவியின் ஆதிக்கம், இசை அமைப்பாளர் மற்றும் இசையின் ஆதிக்கம்.
பாடகியின் ஆளுமை என சிலவற்றை காண்போம். . கவியின் ஆளுமை/ ஆதிக்கம்
தெளிவாக அரசியின் மன நிலையை கவியரசு பல்லவியின் சொற்களிலேயே
வெளிப்படுத்தியுள்ளார் . மன்னவனை உங்கள் மன்னவன் என்று வேறுபடுத்தியவள் , முதல்சொல்
"தோழி " அதை/அவளை "என்னுயிர் தோழி" என்று தன் பகுதியினளாக சொல்லுகிறாள் . இது ஒரு நயம்
அரண்மனை, அரியணை இவற்றை அறிவான் ஆனால் அந்தப்புரம் ஒன்று
இருப்பதை அறியான் .இரண்டாம் பகுதியில் அந்தப்புரம் ஒன்று என்று "ஒன்று" என்று
குறிப்பிட்டு அவன் அங்கு வருவதே இல்லை என்று உணர்த்துகிறார். மேலும் மன்னவன் சில அறிவான்,
சில அறியான் [ஒரு சொல் வேறுபாட்டில் அறிவதையும் அறியாததையும்] சொல்லி, மனைவியின் வழக்கை
மனதிலும் நினையான் என்று இவளை கிட்டத்தட்ட மறந்தே போனான் மன்னவன் என்ற நிலைக்கு கவிதையில்
பெண் மன உளைச்சலை துல்லியமாக உணர்த்துகிறார். அடுத்த நிலையில் மென்மையான உணர்வை மேன்மையான
சொல்லாடல் மூலம் விளக்கும் நயம் "இன்றேனும் அவன் எனை நினைவானோ? இளமையைக்காக்க
துணை வருவானோ? என்று மிகுந்த நயமாக விரசம் தோன்றாமல் அரச கம்பீரம் குன்றாமல் சொல்லில் விளையாடியுள்ளார்
கண்ணதாசன்
இசை
கர்ணன் படத்தின் இசை எளிதில் மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ இயலாத சிறப்பான கம்பீரமும், நளினமும் , ஒலிகளின் கூ ட்டியக்கமும் கேட்கக்கேட்கத்தெவிட்டாதவை. பாடலின் பயணம், பாவவெளிப் பாடுகள், மற்றும் தாள நளினங்கள், கடந்து சோகத்தைக்குழைக்கும் சாரங்கி , சிலிர்த்து ஒலிக்கும் சித்தார் வீணை மற்றும் தென் இந்திய மிருதங்கம் என பலவண்ணக்குழைவு இப்பாடலின் இசைக்கூறுகள். மெல்லிசை மன்னன் காட்டியுள்ள இசை விளையாட்டு காலத்திற்கும் ஒலிக்கும் .
இசை அரசி சுசீலா என்பார்கள் நானோ அவரை இசை அரக்கி என்றே கருதுகிறேன். பாடலை உள்வாங்கி, பொருத்தமான குரலில் ஆர்வமும் நளினனமும் மேலோங்கப்படுவதில் தன்னிகரில்லாத திறமை. அங்கோ ஒரு தேவிகா தோன்ற இங்கோ சாவித்ரி , நம்மால் சுசீலாவை கேட்க இயலவில்லை. மொத்தத்தில் அற்புத காவியப்பாடல் .
Ennuir thozhi Karnan
`964 kd msv-tkr ps
இதே பாடலை QFR குழுவினர் பாடியுள்ள இணைப்பும்
உள்ளது
qfr 461 https://www.youtube.com/watch?v=NFE0o7FTCpk
எம் எஸ்
வி
ஒரு
நேர்காணலில்
பேசிய
இணைப்பும்
உள்ளது
அவரது
கருத்துகளையும்
கேளுங்கள்.
நீண்ட
பதிவு
26 நிமிடங்களுக்கு
பின்
கர்ணன்
பற்றிய
கருத்து
உள்ளது.
அனைத்தையும்
கேளுங்கள்
ஊன்றி
கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=E-7Cj767cz4&t=665s
MSV ON KARNAN 26th minute
மீண்டும் வேறு
பாடலுடன்
சந்திப்போம்
நன்றி
அன்பன் ராமன்
What a wonderful writing, Prof on one of the many great sons of Karnan !! your explanation on how the tune, sangathis, orchestration, voice aptly fit to the situation, feel, storyline etc is amazing.. Feel like listening to.the song again..I will do right now and get mesmerised.
ReplyDelete