Tuesday, May 27, 2025

DIRECTOR: SRIDHAR

 DIRECTOR:  SRIDHAR

இயக்குனர் ஸ்ரீதர்                                                             

                                         ஒரு விளக்கம்

 

இயக்குனர் ஸ்ரீதர் குறித்த தொடர் அமைப்பின் முதல் பகுதி [ஸ்ரீதர்-1] வெளியிடாமலே அதன் அடுத்த பகுதியை [ஸ்ரீதர்-2] தவறுதலாக சென்ற வாரம் வெளியிட்டு விட்டேன் .

ஒரு வாசகர் ஐயோ எனக்கு ஸ்ரீதர் -1 வரவில்லை ஆனால் ஸ்ரீதர்-2 வந்திருக்கிறது கவனிக்காமல் டெலீட் [delete ] செய்து விட்டேன் போலிருக்கிறது தயவு செய்து ஸ்ரீதர்-1 அனுப்பமுடியுமா என்று கேட்டார். இதோ அனுப்புகிறேன் என்று உத்திரவாதம் சொல்லிவிட்டு பக்கத்து வாட்ஸப் இல் இருந்து அனுப்பிவிட்டால் போயிற்று என்று பிற வாட்ஸப் களில் தேட --அப்போது தான் தெரிந்தது ஸ்ரீதர்-1 வெளியிடும் முன்னரே ஸ்ரீதர்-2 வெளியிட்டாயிற்று. எனவே, இப்போது ஸ்ரீதர்-1 இன்றைய பதிப்பாக வெளியாகிறது. வேறு நண்பர்கள் எவரும் இப்போது வரை, ஸ்ரீதர்-1 எங்கே என்று கேட்கவே இல்லை. சூப்பர் வாசகர்கள் -நீ அனுப்பினால் என்ன? அனுப்பாவிட்டால் என்ன? , கைக்கு வந்ததை படிப்போம்,  எனவே ஸ்ரீதர் -15 அனுப்பினாலும் [படித்தாலும்] படிப்போம் . அல்லது வழக்கம் போல் "படிக்க மாட்டம்' என்று இருந்துவிடுவோம் .

மகராஜபுரம் சந்தானம் குரல் ஒலிக்கிறது 'என்ன தவம் செய்தனை? '  என்று

                                                  இயக்குனர் ஸ்ரீதர் 

 ஸ்ரீதர் -1                      

சித்தாமூர் விஜயராகவலு ஸ்ரீதர் கிருஷ்ணன் என்ற சி வி ஸ்ரீதர், அநேக பொது களங்களிலும்,  ஸ்ரீதர் என்றே         அறியப்பட்டவர்

ஸ்ரீதர் குறித்து பேசவோ எழுதவோ தொடங்கினால் என்னால் நிறுத்த இயலாது; அவரைப்புரிந்துகொண்டால் தமிழ் சினிமாவின் போக்கை வெகுவாக மாற்றியவர்.என்பது  முதலில் புரியும். வெளிப்புறத்திற்கு காமெராவைத்தூக்கிக்கொண்டு போனவரே இவர் தான் அவர் தான் என்று பேசும் பலருக்கும் நான் சொல்வது காமராவை தூக்கிக்கொண்டு இந்தியத்திருநாட்டின் விளிம்பிற்கு [காஷ்மீர்] 1960 லேயே வெளிப்புறப்படப்பிடிப்பு செய்தவர் ஸ்ரீதர். திரைப்பட குழுவினர் அனைவரையும் அவரது மனைவி மக்களுடன் அழைத்துச்சென்று முகாமிட்டு உருவானதே "தேன் நிலவு" .ஸ்ரீதர் சொன்னது           " இல்லையென்றால் நிம்மதியாக படப்பிடிப்பு நடத்த இயலாது 10 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு போக வேண்டும் என்ற கோரிக்கை அன்றாடம் கிளம்பும். அதை தவிர்க்கவே இந்த முயற்சி..  

தமிழ் சினிமாவில் புதுமை என்று பிற்கால மாந்தர் அடையாளம் காட்டும் எதையும் அந்நாளிலே செய்து விட்டவர் ஸ்ரீதர். காமெராவை பேசவைத்து காட்சியை விளக்குவதில் கை தேர்ந்தவ.ர் அவரின் அசாதாரண பரிமாணங்களை என்னால் வெகுவிரிவாக அலசி விளக்க முடியும்

ஆனால் நம்ம வாசகர்கள் நீ விளக்கிக்கொண்டிரு என்று அமைதியாக விலகிச்சென்று விடுவார்கள். சரி இதை ஆர்வ இன்டெக்ஸ் [CURIOSITY INDEX] என்று நான் உணருகிறேன்.     . உங்கள் ஆர்வ இண்டெக்ஸ் எதுவாயினும , எனது முயற்சி தொடரும். மற்றுமோர் ஸ்ரீதர் முத்திரை பாடல் காட்சிகளை அமைப்பதிலும் அவற்றில் நல்ல பாடல்களை அரங்கேற்றுவதும் அவற்றை காமெராவின் வாயிலாக  திரையில் கொண்டுவருவதும். அவ்வகையில் நல்ல ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்தி தனி முத்திரை பதித்தவர் . 

 அவருக்கு முதல் படம்   கல்யாண பரிசு  . எம் ராஜா வை இசை அமைப்பாளராக உயர்த்தினார்.

துள்ளாத மனமும் துள்ளும்[ஜிக்கி பாடிய பட்டுக்கோட்டையாரின் பாடல்]. காட்சி அமைப்பின் தேர்ந்த தன்மையை அப்போதே [1959] காமெரா பேசியுள்ளதை                             [ வின்சென்ட்] யோசியுங்கள். காட்சிக்கு இணைப்பு .         

THULLAADHA MANAMUM [KALYAANA PARISU 1959] P K AMR JIKKI

https://www.google.com/search?q=kalyana+parisu+movie+thullatha+manamum+song+video+download&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zoSucUiKkmU-

துயிலாத பெண் ஒன்று [மீண்ட சொர்கம் 1960]  எம் ராஜா சுசீலா குரல்களில் சல பதி ராவ் இசையில் எழுந்த வெகு ரம்மியமான பாடல் . நிதானமான ராக அமைப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் குரல் அனுசரணைகள் இசையின் மென் நடனம் என்று நல்ல கட்டமைப்பு கொண்ட பாடல். இவ்வனைத்தையும்  சுவை குன்றாமல் ஒளிப்பதிவு செய்த வின்சென்ட்-சுந்தரம் என்று உழைப்பின் பெருமையை உணர்த்தும் காட்சி. ரசிக்க இணைப்பு இதோ  

THUYILAADHA-- MEENDA SORGAM [1960] KD CHALAPATHI RAO AMR PS

https://www.google.com/search?q=thuyilaadha+pen+ondru+kanden+meenda+sorgam+video+song&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zpNIFmDtTIVeJBG5K7tk9chw4r8Og%3A1747382896962&ei=cPImaIa9OqCIjuMPk7a5- li

பண்ணோடு பிறந்தது [ விடிவெள்ளி 1960] எம் ராஜா இசையில் பிபி ஸ்ரீனிவாஸ் -ஜிக்கி குரல்களில்

வெகுநேர்த்தியான தாலாட்டு போன்ற பாடல். இது போன்ற பாடல்களை கேட்கவே கூடாது. கேட்டால் எவ்வளவு தொலைத்து விட்டு  ஓட்டாண்டிகளாய்  திரிகிறோம் என்ற துக்கம் கவ்விக்கொள்ளும். கேட்டால் இசை என்பார்கள். சரி நல்ல மேன்மைக்கு இணைப்பு இதோ 

PANNODU [VIDI VELLI 1961]  KD,  AMR – PBS- JIKKI

https://www.google.com/search?q=vidivelli+movie+pannodu+pirandhadhu+song+video&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zor63P5dxhIl9uNxdvadOFWXZVYqg%3A1747383930122&ei=evYmaOOdB5yK4-EPyq-K2AY&oq=vidivelli+movie&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiD3ZpZGl2ZWxsaSBtb3ZpZSoCCAAyBxAjGLADGCcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGL

சொன்னது நீதானா [நெஞ்சில் ஓர் ஆலயம் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா 

கேள்விக்கணைகளை வைத்து பாடலை ஆக்க முடியுமா? முடியும் என்று சவால் விடும் பாடல்.. புண் பட்ட மனத்தின் தவிப்பையும் அதிர்வையும் விளக்குவது எளிதா எனில் --ஏன் இல்லை இயலும் என்று களமாடிய சிதாரும் தபலாவும் . சரி பாவம் வெளிப்பட வேண்டுமே ? பிழிந்துபிழிந்து பொழிந்தாரே சுசீலா . இனி ஒரு ஆக்கம் இது போல் தென்படுமா ? இறைவனுக்கே வெளிச்சம். இறைவன் கூட முயல்வாரா என்பது ஐயப்பாட்டிற்குரியதே -ஏனெனில் இதுநிகர்த்த ஆக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை. பாடலை அதன் உணர்வை சிதார் மீட்டல் அறிவித்தாலும் , பெண் குரல் சோகங்களை அபுபடியே வெளிப்படுத்திய தபாலாவின் வெகு நேர்த்தியான களமாடல். ஒவ்வொரு சொல்லுக்கும் கூடவே தபலா பயணிப்பதை கேட்டு தான் உணர இயலும். எனவே பாடலை ஆழ்ந்து அமிழ்ந்து புலன்களை ஒருபுள்ளியில் நிறுத்திக்கேளுங்கள். அதான் எனக்கு தெரியுமே என்று கடந்து போனதால் தான் எதை கொடுத்தாலும் கேட்பார்கள் என்று பாடல் என்ற பெயரில் அவலங்களின் அரங்கேற்றம் அமோகமாக நடைபெறக்காண்கிறோம் . இவை ஒரு புறம் இருக்க       10 x 8 அறையில் கமெராவின் பயணம் காட்சிக்கு உயிரூட்டியுள்ளதை கவனியுங்கள். இவ்வனைத்தும் 1962 இல் கருய்ப்பு வெள்ளையில். டெக்னாலஜி   வந்து விட்டது தொழில் திறமை எனும் மனித வளம் துவண்டுவிட்டது. பாடலுக்கு இணைப்பு இதோ      

SONNADHU NEETHAANAA [NENJIL OR ALAYAM 1962] KD  VR PS

https://www.google.com/search?q=nenjil+or+aalayam+movie+sonnadhu+nee+thaanaa+video+song+download&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zrXMjxbyvCZxt6bwunkMK6cBPihJg%3A1747384507453&ei=u_gmaKq4G7-a4-EP08-fsAw&oq=nenjil+or+aalayam+movie+SONNADHU+NEE+THAANAA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOG5lbmppbCBvciBhYWxheWFtIG1vdmllIFNPTk5BREhVIE5FRSBUSEFBTkFBIFZJREVPIFNPTkcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkjXiwFQhQd

பொறந்தாலும் ஆம்பிளையா [போலீஸ்காரன் மகள் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , ஜே பி சந்திரபாபு , எல் ஆர் ஈஸ்வரி

ஒரு நகைச்சுவைப்பாடல் , எல் ஆர் ஈஸ்வரியின் குரல் மனோரமாவுக்கு நல்ல  பொருத்தம் .பாடலின் உட்கரு 'பிரசவ வைராக்கியம் /மயான வைராக்கியம்' போன்ற விளக்கம் கேட்டு மகிழ இணைப்பு இதோ

 PORANDHALUM [POLICEKARAN MAGAL 1963 KD  VR JPC LRE

https://www.google.com/search?q=police+karan+magal+movie+PORANDHAALUM+AAMBILAIYAA+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zq9QtnzYNXSwrxZgQJM_ZCAap3sMw%3A1747385221051&ei=hfsmaKHwAo2p4-EPvbHNuAE&ved=0ahUKEwjhxoubzaeNAxWN1DgGHb1YExcQ4dUDCBA&oq=police+karan+magal+movie+PORANDHAALUM+AAMBILAIYAA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiPXBvbGljZSBrYXJhbiBtYWdhbCBtb3ZpZSBQT1JBTkRIQUFMVU0gQUFNQklMQ  

வளரும்

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. Very nice write up on CVS !!!

    ReplyDelete
  2. டாக்டர் வெங்கடராமன் எழுதியுள்ளார்
    "ஸ்ரீதரை பற்றி நீர் மட்டும் தான் புகழ முடியுமா? இந்த உலகமே புகழுமய்யா .'சொன்னது நீதானா' பாடலும் காட்சியும் போல இனி எடுக்க முடியாது

    ReplyDelete

MSV SPECIAL -2

  MSV   SPECIAL -2 எம் எஸ் விஸ்வநாதன் -- சிறப்பு பதிவு -2 மீண் டு ம் ஒரு   சிறப்பு பதிவின் மூலம் எம் எஸ் வி அவர்கள் குறித்த...