Tuesday, May 20, 2025

LET US PERCEIVE THE SONG -23

 LET US PERCEIVE THE SONG -23

பாடலை உணர்வோம் -23

ஆங்கிலத்தில் "MAGNUM  OPUS " என்று ஒரு சொல் உண்டு. தமிழ் சினிமாவில் கர்ணன் [1964] படத்திற்கு அந்தப்பெயர் சாலப்பொருந்தும்.  எல்லாவகையிலும் அது அந்த அளவிற்கு அமைந்த சூழல் கொண்டது

வண்ணப்படம் , எண்ணற்ற நடிகை நடிகையர் தென்னிந்திய ஜாம்பவான்கள் -சிவாஜி கணேசன் , மற்றும் நந்தமூரி தாரக ராமராவ் [என் டி ராமராவ் ] முக்கிய பாத்திரங் களில் , அன்றைய உயர் நட்சத்திரங்கள், சாவித்ரி, தேவிகா , எம் வி ராஜம்மா, அசோகன், முத்துராமன் என பெரும் நடிகர் பட்டாளம் . பிலிம் தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில் ஈஸ்ட்மன் வண்ண பிலிம் வாங்க அந்நியச்செலாவணி  அடிப்படையில் பணம் செலுத்தி பிலிம் வாங்க வேண்டும் ,மொத்தமாகவும் வாங்க அனுமதி இல்லை. பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு.. 

சில அரங்க நிர்மாணங்கள் அங்கேயே , ஆர்ட் டைரக்டர் [கங்கா] ஜெய்ப்பூரில் முகாமிட்டு அரங்குகளை நிர்மாணித்தார்.    அதற்கு மரம் வாங்கப்போன கங்கா அடியும் வாங்க நேர்ந்தது , 8 அடியில் 6 நல்ல மரம் வேண்டும் என்று ஹிந்தியில் எப்படி கேட்க வேண்டும் என்று மனப்பாடம் செய்து கொண்டு போய் மரக்கடையில் அச்சா லக்டியாங் [ என்பதற்கு அச்சா லட்க்கியாங் [பெண்கள்]  கிடைக்குமா என்று கேட்டு அடிவாங்கினார் கங்கா என்று அந்நாளிலே ஒரு செய்தி உண்டு அதை  திரு கங்கா அவர்களே தெரிவித்திருந்தார்

எதுவாயினும் கர்ணன் படத்தில் அரங்கநிர்மாணம் இன்றும் திரு கங்காவின் புகழ் பாடும் .அந்நாளில் முக்கிய தயாரிப்புகள் அனைத்திலும் கங்காவின் திறமை பளிச்சிடக்காணலாம்.அது போன்ற நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க இந்தப்படம் பாடல்ககளிலும் ஒரு MAGNUM OPUS என்பது ஐயம் திரிபற நிரூபணம் ஆன உண்மை

இப்படத்தின் தயாரிப்பாளர் திரு பி ஆர் பந்துலு, பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் 1 வார காலத்திற்கு 2 பேர் தங்கும் அறை  ஒன்றை  முன் பதிவு செய்து , கண்ணதாசன் -விஸ்வநாதன் இருவரையும் "நீங்கள் நாளை முதல் ஒரு வாரம் பெங்களூர் சென்று , கர்ணன் படத்தின் பாடல்களை தயார் செய்து கொண்டு பின்னர் சென்னைக்கு வாருங்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்" அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்ததால் இவர்களால் மறுப்பு சொல்ல இயலவில்லை."  இந்த சூழலில் "எரடு சோடா பேக்கூ " என்ற வாசகம் புகழ் பெற்றது. கண்ணதாசன் "டேய் விசு , நீ எவன் கிட்டயாவது 2 சோடா வேணும் னு கன்னடத்துல எப்படி சொல்றது கேட்டு வெச்சுக்க நம்ப பெங்களூர் போய் , பந்துலு வுக்கு பாட்டுகளை ரெடி பண்ணியாகணும் " என்று சொல்ல , விசு பக்கத்து ஸ்டூடியோவில இருந்த கன்னட கலைஞர்களைக்கேட்டு    2 சோடா வேணும் னு கன்னடத்துல கேட்பதற்கு "எரடு சோடா பேக்கூ " என்று தெரிந்து கொண்டு அதை பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டாராம்  மறந்துபோனால், கண்ணதாசனிடம் யார் 'பாட்டு" வாங்குவது என்ற பயம் தான் .

மறுநாள் சொன்ன இடத்தில் கண்ணதாசனும் விசுவும் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில்பாடல் தொகுப்பு  வேலையில் இறங்கினர் . படத்தில் 10 பாடல்கள் , அத்தனையும் ஆழ்ந்த கவிதை நயம் வெளிப்பட. கவிஞர் எடுத்த வேகத்துக்கு ஈடாக விஸ்வநாதன் ட்யூன் அமைத்து டேப்பில்  பதிவாயிற்று. அநேகமாக 60-65% வேலை முதல் நாளில் முடிந்து விட்டது. டே  விசு  கொஞ்சம் வெளிய போய் சுத்திட்டு வரலாம் டா என்றார் கவிஞர். எவனாவது பாத்துட்டான்னா அப்புற பந்துலு மாமா கிட்ட இவனுக ஊர் சுத்திக்கிட்டு இருக்கானுங்க னு மாட்டிவிட் போறான் என்றார் விசு . இருடா  என்று கவிஞர் ஆளுக்கு ஒரு முண்டாசை தலையில் சுற்றிக்கொண்டு கிராம வாசிகள் போல மெஜஸ்டிக் [கெம்பே கௌடா பகுதி ] ஏரியாவில் ஊர் சுற்றி வந்தனர்.

35%  இருந்த இதர வேலைகள் முடிந்து விட , சத்தம் போடாமல் இருவரும் சென்னைக்கு திரும்பி  விட்டனர் . மூன்றாம்  நாள் எவனோ  பந்துலுவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான் கவிஞரும் விஸ்வநாதனும் வி எம் ஏதோ பாட்டு       போட்டுக்கிட்டுஇருக்காங்க என

பந்துலு பொங்கி எழுந்தார்  நேரேபோய் பிலு பிலு என்று பிடித்து உலுக்கத்துவங்கினார்

கவியரசர் " உங்க வேலை முடிஞ்சிருச்சு 

பந்துலு "என்ன முடிஞ்சுருச்சா" 10 பாட்டு ய்யா -என்ன சொல்றீங்க , எங்க பாட்டு?

கவிஞர் : விசு சொல்லுடா  ;   விசு : வீட்டுல இருக்கு பாட்டு  பந்துலு கொந்தளிக்கிறார் இப்பவே பாட்டையெல்லாம் கொண்டு வாங்க , நான் நம்பலை என்கிறார். சிறிது நேரத்தில் டேப்பை கொண்டுவந்து எல்லா பாடலையும் விசு குரலில் கேட்டு  அசந்து போனாராம் . 2 நாள் கூட ஆகல்லை ஐயோ அசுரங்க இவங்க என்று. பின்னர் இசை சேர்ப்புகளை க்ககே ட்ட பின்  பந்துலு என்ன எவருக்கும் பெரும் வியப்பை உண்டாக்கும் ஏனெனில் காட்சிக்கேற்ப இந்துஸ்தானி வகையில் அமைந்த இசைக்கோர்வைகள். அந்த Magnum opus தொகுப்பில் இருந்து ஒரு பாடல் "கண்கள் எங்கே ?"

கண்கள் எங்கே [கர்ணன் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் பி .சுசீலா குழுவினர்

கண்கள் எங்கே 

இது என்ன குரலா, மனமா, ஏக்கமா , ஏக்கத்தில் கலந்த மனதின் குரலா , தோழியரின் கிண்டலா , சீண்டி விளையாடும் அரண்-  மனை ப்பாவைகளா என்று அடுக்கிக்கொண்டே போனாலும் விடை ஒன்று தான் .

அது தான் ஆம் என்பது.  மேலே உள்ள அனைத்து சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து புறப்பட்டு துரத்திவர தப்பிக்க எண்ணி ஓடும் தலைவி சுபாங்கி.  காதல் பிடியில் சிக்கி விரகத்தின் வீச்சில் பிடிபட்டு தன் நிலை எண்ணி தானே ஏக்கமும் விளக்கமும் வெளிப்பட பாடுகிறாள்

அவள் எங்கே பாடுகிறாள் ? கவியரசு கண்ணதாசன் சொற்களை சுசீலாவின் ஆளுமையில் சுபாங்கி தரும் அதியற்புதமான பாடல். இந்தப்பாடலில் எல்லாமே அற்புதம் தான். ஏன் எனில் குரல், கூட்டொலி [கோரஸ்] , ஆலாபனை, கூடவே தொடர்ந்து வரும் எண்ணற்ற இசைக்கருவிப்பட்டாளம்   , எனினும் எல்லாம் தழுவிச்செல்லும் ஒலிகளாக அதியற்புதமான அடுக்குகளாக அமைத்த விஸ்வநாதன் ராம மூர்த்தி .  அவற்றை நிர்வகித்து பாடல் பதிவிற்கு உறுதுணையாய் நின்ற கோவர்தனம், ஹென்றி டானியல், எவ்வளவு நினைவுகூர்ந்தாலும் குறைவே.  

இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தபின்னரும் இது போல ஒரு பாடல் பதிவு செய்வது எளிதல்ல என்றே திரை ஜாம்பவான்கள் உறுதியாக நம்புகிறார்கள், இவற்றை விளங்கிக்கொள்ள பின் வரும் அமைப்புகளை நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். .

பல்லவியின் சொற்கள் தனித்தனியேதான் பேசுவது போல் ஒலிக்கும்  முன்  டங் டங் டங் என்று மென்மையாக சித்தாரும் , குழலும் துவங்க  கண்கள் எங்கே என்று நிதான நடையில் பாடலின் துவக்கம் உடனே நெஞ்சமும் இங்கே , கண்ட போதே ஏஏஏ சென்றன அங்கே  ["கண்ட போதே" ஏன் நீட்டி பாடுகிறாள் ? 'அவனை' கண்டதை மகிழ்வுடன் அசை போடும் மனம் எனவே அந்த நிகழ்வை சிறிதுமனதில் ஓட விடும் உள்ளார்ந்த குதூகலம் -கவிஞனை, இசை அமைப்பாளர் தன்  வழியில் எதிர் கொள்கிறார். [உனக்கு தான் எழுதத்தெரியுமா? அதைவிட நாங்க மெருகேத்துவம் ல்ல என்று செயல் வடிவம் பெற்ற இடம்]  

கால்கள் எங்கே மேனியும் எங்கே   கா…......வலின்றி வந்தன இங்கே  உடனே அதே குரலில் என்று சுமார் 9 வினாடிகள் ஆலாபனை வெவ் வேறு உச்சநிலைகளில் பயணித்து இறங்க  வடஇந்திய ஷெனாய் முன்னெடுக்க பிற நரம்புக்கருவிகள் ஆதரவுடன் தபலா மிருதங்க தாளங்களுடன் கூடவே குரல்கள் கோரஸாக ஒலிக்க ஒரே அதகளம் ; இவ்வளவு ஒலிகளை குழப்பமில்லாமல் அமைத்து ப்பதிவிட்டது சாமானிய நிகழ்வன்று இப்பகுதியில் ஆஅ ஆலாபனை துரத்துகிறது. . .

இதற்குப்பின்  ஏக்கத்தை உணரும் /உணர்த்தும் சொல்லாடல்

மணிகொண்ட சரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்

துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும்

துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்  [ இந்த சரணம் சுசீலா வின் திறமையை முற்றாக பயன்படுத்திக்கொள்ள தேவிகாவிற்கு கிடைத்த அறிய வாய்ப்பு . ஒவ்வொரு சொல்லுக்கும் முகபாவம் காட்டி உணர்ச்சிகளை மிதக்கவிட்டுள்ளார் தேவிகா. பாடலை ஊன்றி கவனியுங்கள் .]

இதனைத்தொடர்ந்து வரும் இடையிசையில் சாரங்கியின் ஆளுமை வெளிப்பட பிற கருவிகளின் தோழியரின் கோரஸும்  சேர்ந்தொலிக்க பாடல் கந்தர்வ உலகில் மிதக்கிறது , மிகவும் ஆணித்தரமான ஆளுமை கவிஞரும் இசையமைப்பாளரும் ஒருவரை ஒருவர் [வா பார்ப்போம்  என்று கோதாவில் இறங்கும் வல்லமை பளிச்சிடுகிறது]

இவ்வளவு ஏக்கத்தின் நீட்சியாக நாயகி "நான் இப்படி ஆனேன் ?" என்று தன்னிலை விளக்குகிறாள்

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் [அதாவது -'அவனது' -இப்படித்தானே பலரும் ?]

.....டொ ன்றும் கேளாமல்  எனை  அங்கு கொடுத்தேன்**

**இவ்விடத்தில் தேவிகாவின் விழி அசைவைப்பாருங்கள் 

கொடை கொண்ட மதயானை உடல் கொண்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்       என்று ஏக்க ஆலாபனை. இப்போது அனைத்து ஒலிகளையும் தழுவிப்பாய , பாடல் திடீரென்று அடங்கி விட இனி             கேட்டவ னி /ளி ன் மனக்குரங்கு பாடலையே சுற்றிச்சுற்றி check இல்லாத செக்கு மாடு போல் இனி சில நாட்களுக்கு அலையும். அதுவே இந்த composition நமக்கு தரும் தகவல். இதை  காம்போசிஷன் என்று சொல்லக்காரணம் , கவிதையின் இலக்கிய கம்பீரம் , பெண் மனவியல் குறியீடுகள், நிலைப்பாடுகள், எண்ணற்ற தோழியர் குழாம் , கூட்டிசை [கோரஸ்] இடைவிடாத ஆலாபனை , குரலில் தோன்றும் உணர்வினை நேர்த்தியாக வெளியிட்ட பாடகி சுசீலா, இவ்வனைத்தையும் இசையின் வசீகரித்தில் புதைத்த விஸ்வநாதன் , இந்த உணர்வுகளை தெளிவாக காட்டி நடித்த தேவிகா , இசைக்கருவிகளின் நேர்த்தியான ஒலி தரும் ரம்மியம் -எனவே இது ஒரு காம்போசிஷன் என்று சொல்வது ஒற்றைச்சொல் விளக்கம் எனக்கொள்க பொதுவாகவே இந்தப்பாடல் நிதானமாகவே பாடப்பட்டுள்ளது , ஏனெனில் குழைவுகள் மற்றும் பாவங்கள் அதிகம் ஆனால் ஆலாபனை மற்றும் கூடவே பயணிக்கும் கோரஸ் குரல்களும் சற்று விரைவானவை. இவற்றை சிறப்பாக ஒருங்கிணைத்திருப்பது, பாடலை மேலும் வளப்படுத்தியுள்ளதாக நான் உணருகிறேன்.

இவற்றிற்கெல்லாம் வலு சேர்க்கும் விதமாக ஆர்ட் டைரக்டர் திரு கங்கா அமைத்திருந்த காட்சிகள், திரு வி ராமமூர்த்தியின் ஒளிப்பதிவில் ஒரு montage என்ற இணைப்பு காட்டப்படுகிறது .இனமென்ன குலமென்ன குணமென்ன  அறியேன் என்ற பகுதியையொட்டிய தருணத்தில் தேவிகா கைப்பிடிசுவற்றில் அமர்ந்திருக்க கீழே தோழியர் கோரஸ் பாடியபடி ஓடுவதாக அமைத்து 1964 ல் கம்பியூட்டர் , zooming ratio monitor  / blinder /merger  போன்ற உபகரணங்கள் இல்லாமலேயே மனக்கணக்கில் செய்துள்ளனர். எவ்வளவு உழைப்பை இந்த ஒரு பாடலில் பார்க்கிறோம் . அதுமட்டுமா

அன்றைய பம்பாய் திரைத்துறையில் இருந்து சிறந்தகலைஞர்கள் [நாராயண், பிஸ்மில்லா கான், யூனுஸ்] போன்றோர் வரவழைக்கப்பட்டு பாடல் பதிவிட்டுள்ளார் அந்நாளில்.  பாடலுக்கு மூன்று  இணைப்புகள்  கொடுக்கப்பட்டுள்ளன மூன்றையும் நிதானமாகக்கேளுங்கள் நான் சொல்லாத அல்லது எனக்கு சொல்லத்தெரியாத பல வியப்பூட்டும் நளினங்கள் உங்களை பீடிக்கும். ஆகவே கடந்து போகாமல் நிதானமாக கேட்டு உணருங்கள்

Kangal enge karnan 1964 kd v r ps , a chorus song

https://www.youtube.com/watch?v=1_6asN_lz9o KANGAL ENGE PS

KANGAL ENGE QFR -224

Quarantine from Reality | Kangal Enge Nenjamum enge | Karnan | Episode 224

https://www.youtube.com/watch?v=373i3xoTOlk FARIDHA

நன்றி அன்பன் ராமன் 

1 comment:

  1. அற்புதமான வர்ணனை .. காலத்தால் அழியாத காவியப் பாடல் பற்றி... மெய் மறந்து ரசிக்க மட்டுமே கூடிய பாடலை எப்படி மெய் மறக்காமல் ஆராய முடிந்தது ? தங்கள் எழுத்துக்கும் நான் ஒரு ரசிகன்.

    ReplyDelete

UNABLE TO UNDERSTAND ANYTHING -6

  UNABLE TO UNDERSTAND ANYTHING -6 ஒன்றும் புரியவில்லை -6 LEARNING [ BASICS -5] அறிதல் [ அடிப்படை-5 ] ஆசிரியரின் பிற செயல் தேவ...