Sunday, June 1, 2025

AVOIDING MISTAKES -12

 AVOIDING MISTAKES -12

பிழை தவிர்த்தல் – 12

இப்படி பிழைகளை நீக்கி விட்டு பார்த்தால் நமக்கு பேசவோ எழுதவோ ஒன்றும் தேறாது போலிருக்கிறதே என்று நண்பர் ஒருவர் அச்சம் தெரிவித்தார்.. ஆனால்,   40 எழுதி 37 பிழை என்பதை விட பிழையே இன்றி 4 , 5  எழுதினாலும் கௌவரமாக இருக்குமே என்றேன் ; சரிதான் என்று அரை மனதாக ஒப்புக்கொண்டார்.

எனவே, பிழையில்லா மொழி ஆளுமை அனைவரையும் ஈர்க்கும் என்பதைக்கடந்து பலருக்கும் பயன் தரும்.. மேலும் பட்டதாரி என்ற அந்தஸ்து பிழை இல்லா ஆளுமையினால் அதிக வளம் பெறும் என்பதே கல்வியின் சிறப்பு. நமது பிழைகளால் நமது கல்வித்தகுதிக்கே அவப்பெயர் விளைந்தால் என்ன பலன்?. இப்போதே சமூகத்தில் படித்தவனெல்லாம் எதற்கும் லாயக்கில்லை என்ற பரவலான விமரிசனம் உலா வருவதை அறிவோம். 

ஆங்கில மொழி வழக்கில்,  ஒருமை/ பன்மை நிலைகளை விளக்க எளிய நடைமுறையாக பன்மை சொற்களுக்கு 'S' என்ற எழுத்தை சேர்த்து எழுதும் வழிமுறை உண்டு. ஆனால் அது எல்லா சொற்களுக்கும் பொருந்துமா எனில் வினாவிற்குரியதே . எண்ணிக்கை அளவில் கணக்கிடக்கூடிய , மற்றும் கணக்கி இயலாத  சூழல்கள் என்று சில விதிமுறைகளைப்பின்பற்றி ஒருமை பன்மை வேறுபடுத்துதல் உண்டு . எனவே, இதுபோன்ற நடைமுறை அறியாமல் எழுதுவதோ பேசுவதோ முறை அல்ல. அது போன்ற சிலவற்றை இன்றைய பதிவில் காண்போம்.

INFORMATION  

எவ்வளவு தகவல்கள் ஆயினும் INFORMATION என்றே சொல்ல வேண்டும் INFORMATIONS என்பது தவறு. சரி அதுபோன்ற அதிகமான தகவல்கள் என்று குறிப்பிட SEVERAL  PIECES OF INFORMATION என்று குறிப்பிடுவர்.. ஒரு தகவல் வேண்டுமாயின் I NEED A PIECE OF INFORMATIONஎன்பது சரி     [ I NEED AN INFORMATION  என்பது தவறு ].

ஒன்று எனக்குறிப்பிட A PIECE OF என முன் சொல் அமைத்தல் சரியான முறை. இதே போல மர சாமான்கள் FURNITURE  என்றால் ஒருமை பன்மை இரண்டிற்கும் பொருந்தும். FURNITURES என்ற சொல் இல்லை. அவற்றில் சில /பல என்ற திசைக்கு முறையே SOME மற்றும் LOT OF FURNITURE என்பதே சரி.

RESARCH

மற்றுமோர் சொல்  RESEARCH  இதற்கும் பன்மை நிலை RESEARCH  தான் . பன்மை நிலை குறித்து சொல்ல RESEARCH FINDINGS  என்பது நடைமுறை.

SLEEP

தூக்கம் /ஓய்வு  இரண்டினையும் SLEEP / REST  எவ்வளவு நேரம் ஆனாலும் SLEEPS  /RESTS  என்றுஉளற  வேண்டாம்.. HAD  A  DEEP  SLEEP / HAD  A  LONG REST என்று குறிப்பிடலாம். 10 பேர் ஆனாலும் ALL HAD DEEP SLEEP  , பலர் என்பதனால் SLEEPS என்று எண்ண  இடமில்லை

EQUIPMENT

EQUIPMENT [உபகரணம் /உபகரணங்கள் இரண்டையும் EQUIPMENT என்றே சொல்ல வேண்டும் .இதே போல உள்கட்டமைப்புகள் என்பதை INFRASTRUCTURE என குறிப்பிடவேண்டும்.

HOMEWORK

குழந்தைகளுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாட வேலைகள் அனைத்துமே HOMEWORK தான் HOMEWORKS அல்ல.

 HELP

உதவி எவ்வளவு ஆயினும் HELP தான். THEY GAVE LOT OF HELP   [NOT LOT OF HELPS ]

PROGRESS

முன்னேற்றம் /வளர்ச்சி / மேம்பாடு  இவை எத்துணை ஆயினும்  PROGRESS தான்

DEVELOPMENT/ GROWTH/ IMPROVEMENT  HAVE NO ‘S’ TO INDICATE PLURALITY.

 POETRY

எத்துணை பாடல்கள் ஆயினும் POETRY தான் [பாடல் தொகுப்பு ] அதையே எண்ணிக்கை அளவில் குறிப்பிட

HE TAUGHT SEVEN POEMS UNDER POETRY என்பதே மரபு.

TRAFFIC

எவ்வளவு போக்கு வரத்து நெரிசலும்  TRAFFIC என்றே பெயர் பெறும். Heavy traffic என்று போக்குவரத்து அடர்த்தியை குறிப்பிடுவர்.

 பின்னூட்டல்

FEEDBACK என்று கருத்துகளை பொதுவாக குறிப்பிடுவர். 100 கருத்துகள் எனினும் feedback என்ற சொல்லில் அடங்கும் 

FEEDBACK  FROM SEVERAL MEMBERS  OR  SOURCES என்றே குறிப்பிடுவர்.

தொடரும்

 அன்பன் ராமன்

1 comment:

MSV SPECIAL -2

  MSV   SPECIAL -2 எம் எஸ் விஸ்வநாதன் -- சிறப்பு பதிவு -2 மீண் டு ம் ஒரு   சிறப்பு பதிவின் மூலம் எம் எஸ் வி அவர்கள் குறித்த...