IN
OUR SKIES -3
நமது வானில்-3 ..
[ THE ‘AKASH’ MISSILE
SYSTEM ]
வான்
வெளி / தரைவழி [infantry]
மற்றும் கப்பற்படை மூன்றிற்கும் பிரத்தியேக நுணுக்கங்கள் தேவைப்படும் இவற்றை
நிறைவேற்ற தேவையான நுண்ணறிவு கருவிகள் அமைத்து பின்னர் அதன் [ஏவுகணையின்] செயல் திறன்
மேம்பட பல்வேறு உள் அமைப்புகள் உள்நாட்டிலேயே
ஒவ்வொன்றாக வடிவமைக்கப் பட்டது .
ஆகாஷ் சிஸ்டத்தின் சிறப்பு
ஒரே நேரத்தில் 12 டார்கெட் களை எதிர்கொண்டு அழிக்கும் வல்லமை கொண்டது
.
அது என்ன 12 என்பது ?
அதாவது நமது பாதுகாப்பு துறையினர் [defence agencies] நமக்கு 12 இலக்குகளில் இருந்து
ஒரே நேரத்தில் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உண்டு
என்று அவை எப்படி நிகழலாம் என்று template ஒன்றை
அமைத்து விளக்கியதன் பேரில் , நமது ஆகாஷ் defence
system அதற்கேற்ப
உருவாக்கப்பட்டுள்ளது என்று திரு ராவ் விளக்கினார்.
அதாவது , ஒரே ஒருங்கிணைப்பாக [ platform ] ரேடார் , சர்ஜிக்கல்
defence மற்றும் கவுண்டர் அட்டாக் [எதிர்த்தாக்குதல்] ஒன்றை ஒன்று அனுசரித்து கூட்டியக்கமாக அசுரபலத்துடன் தாக்க வல்ல ஏவுகணை தொகுப்பு ஆகாஷ் .
ஆங்கிலத்தில் customized என்று சொல்வார்கள் [அதாவது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது.. அப்படி ஆகாஷ் ஏவுகணை திட்டவடிவம், தரைப்படை, வான் படை , கப்பற்படை மூன்று தேவைகளுக்கும்
customized வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் எதிர் கால முன்னேற்றங்களுக்கு எதுவாக அடிப்படைவடிவம் [design] உருவாக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் சிஸ்டத்தின் ராடார் முற்றிலும் வேறு வகையானது. அதி விரைவாக எலக்ட்ரானிக் பிராஸஸிங்
செய்து [தகவல்களை நொடிக்கும் குறைவான நேரத்தில் பகுத்தாய்ந்து] ,எதிரே இருக்கும் தற்காப்பு ராடார்களை முடக்கி அழிக்கும்
[Electronic warfare integrated ]மின்னணு போர்முறைகளுக்கு ஏற்ற செயல் பாடுகள் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இப்போது பலரும் அச்சம் கொள்ளும் அதி நவீன போர்க்கருவியாக கம்பீர கோரதாண்டவம் புரிகிறது இந்த ஏவுகணை.
அதாவது ஓடினாலும் ஒளிந்தாலும் துரத்தி துரத்தி அடிக்கும். வளைந்து நெளிந்து , கவிழ்ந்து எழுந்து
, புரண்டு திரும்பி விடமாட்டேன் உன்னை என்று அடித்து நொறுக்கும் என்கிறார் திரு ராவ் அவர்கள்.
https://www.youtube.com/watch?v=dMza3spOKbU PRAHALADARAMARAO
INTERVIEW
தொடரும் அன்பன் ராமன்
டாக்டர் கே வெங்கடராமன்
ReplyDeleteஉமது செய்தி தொடரட்டும்