Sunday, June 22, 2025

AVOIDING MISTAKES -15

 AVOIDING MISTAKES -15   

பிழை தவிர்த்தல் – 15                  

அன்பர்களே

பிற மொழி உச்சரிப்பில் பிழை என்பது ஒரு வகை

சொல்லையே தெரிந்துகொள்ளாமல் ஏதோ பிழை இல்லாமல் பேசுவது போல் பேசுபவர்களைப்பார்க்கும் போது சிரிப்பும் கவலையும் உண்டாகின்றன.. சரி அவன் என்ன பேசினால் உனக்கென்ன ? என்று கேட்கலாம்.

எனக்கென்ன எனக்கென்ன என்று கடந்து போவதனால் சிறிய பிழைகளைக்கூட சொல்லித்தராதசொல்லித்தரத்தெரியாத பெரும் கூட்டம் உருவாகியுள்ளது. பழைய நாளில் தெருவில் போகும் முதியவர் கூட தவறு கண்ட இடத்தில் .  'எனக்கென்ன என்று கடந்து போகாமல், உடனே திருத்துவார், இரண்டு முறை எங்கே திரும்பச்சொல்லு என்று சொல்லவைத்து , மறக்காதே இதை என்று சொல்லி அப்புறம் தான் அங்கிருந்து அகலுவார்.

 இதுபோல் பல தவறுகள் கண்டு களையப்பட்டு வளர்ந்த மக்கள் இருப்பதனால், அவர்கள் பிழை களைய முற்படும்போது "போய்யா உன் வேலையை பார்த்துக்கொண்டு ' என்று எதிர் வாதம் செய்யும் ஜனத்தொகை பெருகிவிட்டது.

சரி, நீங்களாவது சரியாக சொல்லிக்கொடுங்களேன் என்று புதியவர் சொன்னால் ."எல்லாம் எங்களுக்கு தெரியும், நீங்க போங்க என்றே பதில் வருகிறது.        .இது போன்ற கண்டும் காணாத சூழலில் கற்கும் வயதில் முறையாக கற்காமல் பின்னாளில் பேச வேண்டிய தருணங்களில் கூட ,பேசும் தெளிவும், மனோதிடமும் இன்றி மௌனிகளாய் "உம்' என்று நிற்கும் நிலை வந்து விட்டது. அதனால் தான் முகம் தெரியாதவர்களிடம் பேசும் வாய்ப்பும் திறனும் எழுத்துக்கு உண்டு.     எழுத்து வழியில் குறை களைதல் எளிது. ஆனால், நீ எழுதிக்கொண்டே இரு என்று போய்விட்டால் என்ன செய்ய முடியும்? நீ வேலை அற்றவன் , எதையாவது எழுதிக்கொண்டிரு -ஆவதென்ன என்று கடந்து போகும் மாந்தரை ஒன்றும் மாற்ற முடியாது .

குதிரையை நீர் நிலைக்கு கொண்டு செல்லலாம் , அனால் குதிரை தானே நீரைப்பருகவேண்டும்? என்ற ஆங்கில வாசகம் நினைவில் வருகிறது.

என்ன நாங்கள் என்ன குதிரையா? என்றுகுதிக்க வேண்டாம். குதிரை தான் ஞானத்தின் சின்னம் [ஹயக்ரீவர்] எனவே தான் குதிரை மேற்கோள்.                          நீ சமாளிக்கிறாய் என்னை அவமானப்படுத்த முயல்கிறாய் நான் படிக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டு கடந்து போய் விடலாம்.   எப்படியோ,  உங்கள் மனம் போல் செய்யுங்கள். சரி- மனங்கவர் துறையில் இருந்து முயல்வோம்.

நம்மவர் உரையாடல்

அந்த சினிமாவில் பி எஸ் வீரப்பா தான் வில்லன் , எம் என் ராஜம் தான் வில்லி  ஐயோ என்று நாம் அலற வேண்டியது தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை . ஆம் villain என்று சொல் உண்டு ஆனால் வில்லி ?

ஆங்கில நாடக ஆசிரியர்  'வில்லி'யம் ஷேக் ஸ் பியர் ' கூட, வில்லி என்று பேசியதே இல்லையே.               

ஆம், ஆண் பால் பெண் பால் இரண்டிற்கும் பொதுவான சொல் வில்லன் [villain] தான்.      பெண் பால் என்று உணர்த்த வேண்டினால் LADY VILLAIN என்பதே முறை.. வேறொன்று மில்லை தமிழர்களுக்கு சினிமாவில் இருந்து சொன்னால் தான்   ஒரு அன்யோன்யம் தென்படும் அக மகிழ்வார்கள்

சரி நகைச்சுவை நடிகனுக்கு ஆங்கிலச்சொல் comedy actor என்றால் அரைகுறை ஆங்கிலம் தான். முறையான சொல் COMEDIAN..         நகைச்சுவை நடிகைக்கு?      

 ‘COMEDY ACTRESS’ என்றால், மீண்டும் அரைகுறை தான்.  

 நகைச்சுவை நடிகைக்கு, முறையான சொல் COMEDIENNE என்பதே.

மேலும் சில ஆங்கில விநோதங்கள்

கோழியின் உடலில் இருக்கும் சிறகுகளை ஒன்று விடாமல் அகற்றி வைக்கப்பட்ட நிலையில் அதன் பெயர் DRESSED CHIKEN. நியாயமாக அது UNDRESSED என்றிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும். ஆனால்,,சமையலுக்கு  வேண்டாத பகுதிகள் அகற்றப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் 'dressed ' என்கின்றனர். அதுபோன்றே கல்லில் பகுதிகள் சீராக்க பட்டு ஒரு நல்ல அமைப்பில் இருந்தால் அவையும் 'dressed stone '

பலரும், படிக்காமல் ASAAULT ஆக திரிகிறான் என்கின்றனர். ASSAULT என்ற சொல்லுக்கு --அடி / தாக்கு என்று பொருள்.

எனவே, ASSAULT என்றால் -- அடிக்கிறான்/தாக்குகிறான் என்று பொருள் வரும். அதாவது கவலையோ, பயமோ இன்றி என்று சொல்ல 'CASUAL ' அல்லது NON CHALANT என்பதே பொருத்தம்

இன்னும் சில :    

HOUSE க்கு பன்மை HOUSES , ஆனால் MOUSE , GOOSE,  TOOTH , OX முறையே MICE , GEESE , TEETH , OXEN என்று பன்மை உணர்த்துவன..                        GOOSE     முட்டை இடுமா ?  இடாதா ?

முட்டை இடும் வாத்து எது ? முட்டை இடாத வாத்து எது?

                            [ நமது அன்பர்கள் மௌன விரதம் மேற்கொள்வர்]

ஒரு சிறு விலக லாக  தமிழில் பூட்டுகளைக்கூட ஆண் பூட்டு , பெண் பூட்டு என்று பாலின அடிப்படையில் அடையாளம் காட்ட காணலாம் அது முற்றிலும் உருவ அமைப்பில் பேசப்படும் சொல் . 

Special link

  https://www.youtube.com/watch?v=09KxUDwSSY4  LORD Muruga congregation Madurai

  தொடரும்       அன்பன் ராமன்

6 comments:

  1. Goose, geese, gander, singular plural and which is egg laying kindy clarify.


    ReplyDelete
  2. Goose, geese,gander ,singular, plural which is egg laying kindly clarify.

    ReplyDelete
  3. "வில்லி" "comedian" mistakes realized. Thanks.
    "Realised "or "realised" clarification please.

    ReplyDelete
  4. Goose, geese, gander, singular plural and which is egg laying kindy clarify. Please wait fir the next episode
    "Realised "or "realised" clarification please.
    Well in both places only"realised " appears. What clarification to make? My be you meant 'Realized' Vs 'Realised'. Both mean the same. Using 'z' is American way and 's' is British way. C

    ReplyDelete
    Replies
    1. Sorry,
      Typographic error.
      Realized or realised , which is correct was my query.
      Thank you for your reply .

      Delete
    2. Both are valid , using 'z' is American and of 's' is British. I know only that much . Anyone who has any further input may please enlighten us.
      Regards. K R

      Delete

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...