DIRECTOR SRIDHAR -5
இயக்குனர் ஸ்ரீதர்-5
Mullil rojaa
முள்ளில் ரோஜா [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி
கலைக்கோயில் பல கலை த்திறன்கள் கொண்டு உருவான படம். பாடல்கள் எல்லாம் தனித்துவம் பெற்று ஈடில்லா வகை யை சார்ந்தன.
சங்கீத வித்வான்
போதையின் பிடியில் பாட நேர்ந்தால் எப்படிப்பாடுவான் என்ற டெமோ இந்தப்பாடல் வெறும் ஸ்வரம் மட்டுமே பாடுவான் அவ்வப்போது பல்லவியை பாடுகிறான். பெண்மணி அனாயாசமாக மேற்கத்திய வகையில் பாடிக்களிக்கிறாள். இதற்கான இசையில் மேற்கத்திய கருவிகளே வீரியம் காட்டும் அமைப்பு.
விதவித மான இசைத்தொகுப்புகள், கிட்டார், மாண்டலின் ,அக்கார்டியன்,ட்ரம் போங்கோ ஒருபுறம் அவ்வப்போது ஒலி த்துப்பறக்கும் குழல் ஓசை, அனைத்தும் விரைந்து ஓடும் வகை . அதிலும் பாடலை விரைவு செய்யும் பகுதி அலாதி வித்தகம் காட்டிய விந்தை. . பாடல் அகற்றப்பட்டுவிட இப்போது ஆடியோ மட்டுமே கிடைக்கிறது எனினும் 1964 இல் இசையின் பங்கு எந்த உயரம் தொட்டிருந்தது என்றே உணரலாம் . இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=qBakNvIE4fs mullil roja
QFR 321
https://www.youtube.com/watch?v=q9l28YBtFt8 qfr stage performance
மௌனமே பார்வையால் [கொடிமலர் 1966] கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன், பி பி ஸ்ரீனிவாஸ்
வாய் பேச இயலாத மனைவி க்கு ஊக்கம் தரும் கணவன். பின்னாளில் வந்த 'வீணை பேசும்' பாடலுக்கு தாய் இப்பாடல். வெகு நேர்த்தியான மென்மை
பாடலின் சிறப்பு. இது போன்ற பாடல்கள் \வெகு சொற்பமே. சொற்பமே எனினும் சொர்க்கமே இவை
'KODIMALAR [MOUNAME
PARVAIYAAL-1966] KD MSV PBS
முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை -1967] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா
அரிதினும் அரிதான டூயட். அற்புத சொல்லாடல் , ஒரு எழுத்தை மாற்றி விளக்கும் விந்தை மற்றும் வேறெங்கும் இல்லாத சொற்கோர்வை . சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை , விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன, கைகள் மாலையாவதென்ன ? கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட [வேறு எந்த பாடலிலும் இல்லாத நளினங்கள்] . இதற்கெனவே வகுக்கப்பட்ட இசையின் பாதை இந்தப்பாடலை ஈடில்லா நிலைக்கு தூக்கி நிறுத்தியது. நடிகர்கள் ஒப்பனை இன்றி பாடிய டூயட் ஸ்ரீதருக்கு மட்டுமே சாத்தியம் . இணைப்பு இதோ
NENJIRUKKUM VARAI MUTHUKKALO [1967] KD TMS PS
QFR EPISODE 367
நெஞ்சிருக்கும் எங்களுக்கு [நெஞ்சிருக்கும் வரை 1967] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் குழுவினர்.
அவசரத்துக்கு உதவும் ஆபத்பாந்தவன் வாலி எழுதிய பாடல் , இந்தப்படத்தில் இது மட்டுமே . தன்னம்பிக்கையுடன், வறுமையையும் வயிற்றுப்பசியையும் எதிர்த்துப்போராடும் படித்த இளைஞர் மூவர் பங்கு கொண்ட காட்சி. மொட்டை வெயிலில் வண்டி இழுத்துக்கொண்டு மவுண்ட் ரோடு , பீச் ரோடு பகுதிகளில் இன்றைய நடிகன் நடிப்பானா [டூப் போடுவான்] . அன்று நடந்தது . வறுமையை உணர்த்த எச்சில் இலையை காட்டி அமெரிக்க விருதுக்கு அலையாத சினிமா / இயக்குனர் ஸ்ரீதர் நடந்த ராஜபாட்டை . பாடலுக்கு இணைப்பு இதோ
NENJIRUKKUM ENGALUKU VALI MSV TMS
தொடரும்
அன்பன் ராமன்
Again a honour to Sridhar, the great and his team. Each is a different genre and how beautifully MSV has composed is something we keep wondering endlessly !! Thanks Prof.
ReplyDelete