GROUP RAGGING-2
கூட்டமாக கிண்டல்-2
திரு சின்னப்ப தேவரின் நிறுவனம் தயாரித்த
"மாணவன்" படத்தில்
[1970] வந்த
விசிலடிச்சான்
குஞ்சுங்களா
பாடல்
வாலி,
இசை
சங்கர்
கணேஷ்
, குரல்கள்
டி
எம்
எஸ்,
பி
சுசீலா
வழக்கமான கூத்தும் கும்மாளமும். இடம் பெற்ற காட்சி . ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் சின் சினாட்டி , ஜான் முஸ்தபா என்ற 'நிரப்பல்'சொற்கள் மற்றும் இருபாலரும் கேலி செய்து பாடகுட்டி பத்மினி /அன்றைய கமல் ஹாசன் தவிர பல 'பெரியவர்கள் 'பங்கேற்ற பாடல் . காண இணைப்பு .
Visil
adichan [manavan -1970 – vali Shankar ganesah tms ps
https://www.youtube.com/watch?v=BHo_801oJSo
மாமா மாமா மாமா [குமுதம்-1961] டி எம் எஸ் , ஜமுனாராணி இசை கே வி மஹாதேவன்
பெரும் "அட்ரீனலின்"
சுரக்கவைத்த
பாடல்
என்ற
பெருமை
கொண்ட
காட்சி,
அதிலும்
மாமா
மா
மா
என்ற
சொல்லாடல்
அந்நாளில்
கே
வி
எம்
அவர்களுக்கு
சினிமாத்துறையில் நிலவி வந்த பெயர். அதனால் பாடகர்கள் அதிக உற்சாகத்துடன் பாட,, தாளம் வெறி கொண்டு நர்த்தன மிட இப்பாடலை ஒலியின் வசீகரத்தினால் கேட்போர்/கேட்டோர் அதிகம். பிற சொற்களை பலரும் அறிந்திருந்தனரா எனில் --சந்தேகமே. பாடலுக்கு இணைப்பு இதோ
maa ma maa maa maa kunudham kvm
tms jamunaraani
ஏமாறச்சொன்னது நானோ [நானும் ஒரு பெண் -1962] கண்ணதாசன் இசை
ஆர் சுதர்சனம் , குரல்கள் டி எம் எஸ்/சுசீலா
ஏ வி எம் ராஜன் புஷ்பலதா இடம் பெற்ற ஆரம்ப கால பாடல் . பாடலில் ஒரு ஒழுங்கு தென்படும் NCC வகை அமைப்பு எனவே ஒழுங்கு இருப்பதில் வியப்பில்லை. இது
இருவரின் தனிப்பட்ட கிண்டல் வகை சார்ந்தது. பாடலுக்கு இணைப்பு இதோ
yemara chonnadhu naanum oru pen 1962 kd r sudharsanam tms
ps
முத்துபொண்ணு பாமா [வல்லவன் ஒருவன்
1972] கண்ணதாசன் , வேதா , டி எம் எஸ், சுசீலா
கும்பல் கூடி எதிர் பாலினத்தவரை வம்பிழுக்கும் பாடல் காட்சி. முற்றிலும் ஹிந்திப்பாடலின்
தழுவல் ஆனாலும்இம்மி தவறாம;ல் ஒலிக்கும் தாளம் . அதுவும் எண்ணற்ற
மாற்றங்களுடன்; முக்கிய
முன்னெடுப்பு தவிலில்- மற்றும் பாடல் நெடுகிலும் படபடத்து ஒலிக்கும் தாள
ஜீவன்கள்.
அமைதியான மனதில் கேட்டால் பாடலில்
உள்ள பல இசைக்கூறுகள் நம்மைப்பிரமிக்க வைக்கும். நமக்கு தான் எந்த நுணுக்கமும் பொருட்டல்லவே
; உடனே ஜெய்சங்கர் /ரவிச்சந்திரன்/ சிவகுமார் என்று ஆரம்பித்துவிடுவோம். அப்படிப்பட்டவர்களைக்கூட எங்கடா பார்க்குறீங்க இங்க பாருங்கடா என்னும் விதமாக
விரைவான அசைவுகளுடன் நளினமாக ஆட்டம் காட்டிய எல் விஜயலக்ஷ்மி -பின்னி
எடுத்துள்ளார். . ஒவ்வொரு முறை தாள மாறுபாட்டிற்கும்
எல் வி காட்டியுள்ள அதீத சீரான ஆட்டம் உண்மையிலேயே நடனம் பயின்றவர் என்று விண்டுரைக்கும் வேகம். சொல்லப்போனால் ஒவ்வொரு
நிலையிலும் பாடலை செம்மைப்படுத்தி உள்ளதே நடனம் தான். கிண்டல் /வம்பு பாடல் வகையில் -நடனம் இடம் பெற்றிருப்பது சிறப்பு. கண்டு ரசிக்க இணைப்பு இதோ
MUTHUPONNU BAAMAA [VALLAVAN
ORUVAN] KD VEDHAA TMS PS LV’S SUPERB DANCE
https://www.youtube.com/watch?v=H4kf6Angx7U&list=RDGMEMCMFH2exzjBeE_zAHHJOdxg
சித்தாடை கட்டிக்கிட்டு [வண்ணக்கிளி
-1960] மருதகாசி, இசை கே வி மஹாதேவன் குரல் :எஸ் சி கிருஷ்ணன் /சுசீலா
இது கிராமீய பாடல், நையாண்டி பாடல் டப்பாங்குத்து என்று
பலவாறு அழைக்கப்பட்ட பாடல். பாடலில் மேலோங்கி
நிற்பது சொல்லால் வரும் சுவை மற்றும் எளிமையான குழு ஆட்டம் , இரு பிரிவுகளாக ஆண்
குழு தலைமை கள்ள பார்ட் நடராஜன் [அந்நாளில் வில்லன் என்பவரை கள்ளபார்ட் நடிகர் என்றழைப்பர்].இந்த
கள்ளபார்ட் கொஞ்சம் குள்ள பார்ட் வேறு ஆனாலும் விரைந்து ஆட்டம்.
பாடலின் சுவையே மேள வகை தரும் சுவையால் மேம்படுகிறது இது
நையாண்டி மேள வகை.
கே வி எம் அவர்கள் இடமறிந்து இசை அமைத்துள்ளார். இந்தப்பாடல் ஒலிக்காத ஊரோ
, நாளோ இல்லை எனலாம். கேட்டு மகிழ இணைப்பு இதோ
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment