Monday, June 9, 2025

IN OUR SKIES-4

IN OUR SKIES-4  

நமது வானில்-4 ..      

[ THE ‘AKASH’ MISSILE ]

அன்பர்களே

இன்றைய   பதிவு  பல   .முக்கியமான நுணுக்கங்கள் பற்றியது ; எனவே மேலோட்டமாகப்படிப்பவர்கள் இப்பகுதியை படிக்க வேண்டாம் . மனம்  ஒன்றி கருத்தூன்றி படித்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள இயலும். அம்முயற்சிக்கு தங்களை ஈடுபடுத்த இயலாதவர்கள் , விலகி நில்லுங்கள். ஆகாஷ் ஏவுகணை என்பது ஒரு முழுமையான உள்கட்டமைப்பு ,இயக்ககம் [DIRECTORATE] அவற்றின் தகவல் / சமிஞை பரிமாற்ற அமைப்புகள் அனைத்தும் கொண்டதே ஆகாஷ் சிஸ்டம்.  இவற்றை வடிவமைத்த குழுவினர்  D R D O [பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்] . இவ்வடிவமைப்பை செயல் படுத்தி ஏவுகணை சிஸ்டம் தயாரித்தோர் BHARATH DYNAMICS LTD -ஹைதராபாத் .

இது போன்ற செயல்களில் வெகு துரித நொடிக்கு நொடி மாறும் நிகழ்வுகளை கணித்து மின்னல்வேகத் தாக்குதல் நடத்த வேண்டும். எனவே நோட்டமிடும் கருவி [ரேடார்] வெகு சிறப்பான வேகம் துல்லியம், இலக்கு நிர்ணயம்  அனைத்தையும் செயல் படுத்த வேண்டும்.  இக்கருவிகள் என்னவெல்லாம் செய்யும் ?

எதிரியின் போர் விமானங்களுடன் போரிடும் [engage Fighter air  crafts], ஹெலிகாப்டர் களை தாக்கும், UAV எனும் ஆளில்லா வான் ஊர்திகளை எதிர்கொண்டு அழிக்கும் CRUISE MISSILES எனும் பறந்து வரும் ஏவுகணைகளையும் , பாலிஸ்டிக் மிஸைல் [BALLISTIC MISSILE ] களையும் துல்லியமாக வீழ்த்தும் [ஒரு வளைவுப்பாதையில்[பெரிய ஆர்ச் போல] பயணித்து தனது மொத்த எடையையும் புவிஈர்ப்பு விசையினால்  எதிரியின் இலக்கின் மீது வீழ்த்தி [விழுந்து] நிர்மூலமாக்கும் மிஸைல் தான் பாலிஸ்டிக் மிஸைல்[ BALLISTIC MISSILE]  எனப்படுகிறது.  . இதற்கு உதவும் ரேடார் 12 இலக்குகளை தாக்கும் என்பதை முன்னம் பார்த்தோம் ஆனால் 64  இலக்குகளை [TARGET]  கண்காணித்துக் ககொண்டே   12 இலக்குகளை தாக்கும் செயலியை இயக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்..

தேவைக்கேற்ப ஏவுகணைகளை இயக்க வேண்டும் என்பதால் "ஆகாஷ்" என்ற ஒரே பெயரில் வெவ்வேறு வகை ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஆகாஷ் ஏவுகணை அவதாரங்கள் [AVATARS] என கருதலாம்     

அளவிட இயலாத திறன்களை கொண்ட வெவ்வேறு வகையான ஆகாஷ்  ஏவுகணைகள்   உள்ளன, அவை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய செயல் திறன்  கொண்டவை எனவே அவற்றை இயக்கும் கட்டுப்பாட்டு செயலி [DIRECTORATE]  இவற்றின் செயல்பாடுகளுக்கு தேவையான உறுதுணையாய் இயங்கும் படி தகவல் தொடர்புக்கு உதவும் . முதலில்  ஆகாஷ் ஏவுகணை வகைகளை பார்ப்போம். 

AKASH  1S,  AKASH Prime ,  AKASH –NG

AKASH 1S

இது 100 மீட்டர் தொடங்கி 20 கிலோமீட்டர் உயரம் விண்ணில் பாயும் திறன் உடையது . RAMJET ராக்கெட் எஞ்சின் [இவ்வகை எஞ்சின் ஏவுகணை வேகம் குன்றாமல் ஒரே சீராக உந்தும் பண்பு உடையது]. உதவியால் 4.5 கிலோமீட்டர் முதல் 25 KM எல்லைக்குள் தாக்கும்  திறன் உடையது  இந்த ஏவுகணையில் இருக்கும் வசதி INDIGENOUS SEEKER என்ற அமைப்பு. அது RF [ரேடியோ FREQUENCY ] அலைகளை அனுப்பி அவை மீண்டு வரும் தன்மை கொண்டு இலக்கினை கண்டு அறிந்து துரத்தி தாக்கும் . இதனால் துல்லியமாக தாக்கும் திறன்  படைத்தது. 

AKASH Prime

இது ஆகாஷ் 1S அமைப்பிற்கு அண்ணன்  வகை . இதில் அதிக திறன்கொண்ட [REFINED RF SEEKER ] அல்லது ENHANCED RF SEEKER என்னும் மேம்பட்ட தேடுதல் திறன் உள்ளது . எனவே உயரமான பனி மலைப்பகுதிகளில் வெகு சிறப்பாக எதிரி நிலைகளை தாக்கி அழிக்கும். பல கருவிகள் குளிரில் முடங்கும் நிலையிலும் இது அசராமல் இயங்கும் வடிவமைப்பில் உருவாக்கியுள்ளனர் நமது விஞ்ஞானிகள் .

AKASH –NG

AKASH -New Generation

நமக்கு ஆகாஷ் என்ற ஏவுகணையே NEW GENERATION தான். ஆனால் பாதுகாப்பு பணியில் சுணக்கம் கூடாது  என்பதால் மேலும் திறன் கொண்ட ஏவுகணை ஆகாஷ்-NG வடிவமைக்கப்பட்டுள்ளது.  25KM  உயரத்தில் பறந்து தாக்கும் 350 கிலோ எடை உடையது .இதன் உந்து விசை 2 பல்ஸ் .ராக்கெட் மோட்டார் சாலிட் [திட] எரிபொருள் மூலம் இயங்குவது.  இதன் சிறப்பு அசுர வேகம் மற்றும் மேலும் அதிக துல்லியம் என்கின்றனர் 

இவை அனைத்துமே வழி நடத்தப்படும் மிஸைல் வகையின. அதாவது ஏவுகணை பயணிக்க தொடங்கிய பின்னரும் , இப்படி போ அப்படி போ என்று ரேடார் சிஸ்டம் வழிநடத்துவதால் இவை GUIDED MISSILES என்ற வகையின.

இந்த கருவிகளை செயல் படுத்த உதவும் கட்டமைப்பே ரேடார் மற்றும் கண்காணிப்பு சிஸ்டம் [RADAR and TRACKING SYSTEMS ] என்றழைக்கப்படுகிறது.

RAJENDRA 3D  P E S A   RADAR 

PESA = Passive Electronically Scanned Array அதாவது பல ஆன்டெனாக்களின் தகவல்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதன் மூலம் விரைந்து செயல் படும் .

இதன் கண்காணிப்பு 360 டிகிரி யும் உள்ளதால் எதிரி தப்பித்தல் எளிதல்ல.

64 இலக்குகள் நிலைகள்,-- உள்ள [ RANGE =இடை வெளி தூரம் ] , HEIGHT [எவ்வளவு உயரத்தில் ] AZIMUTH [ நமது இடத்தில் இருந்து உள்ள கோணம் ANGLE ] இவற்றை இந்த ரேடார் கணக்கிட்டு ஏவுகணைகளை அனுப்ப உத்தரவிடும். இந்த ஏவுகணைகள் தனித்தனியாகவோ [AUTONOMOUS MODE ], குழுவாகவோ [GROUP MODE ] கட்டவிழ்த்து விடப்படும்

3 D CAR [CENTRAL ACQUISITION RADAR ]

இதன் செயல் திறன் வெகு தூரத்து எதிரி நிலைகளை [சுமார் 200 வரை]  கண்காணிக்கும். ஏவுகணைகளை இறுதி வரை வழி நடத்தும் உதவி [GUIDANCE SYSTEM ] மற்றும் உத்தரவு வழிகாட்டுதல் [COMMAND GUIDANCE ] என்ற நுணுக்கமான செயல் நுட்பங்கள் இருப்பதால் இவ்வகை ஏவுகணைகள் செயல் திறன் வெகு சிறப்பானது.

ECCM வசதிகள்.

பொதுவாக தற்காப்பு அமைப்புகளில் ECM எனும் ELECTRONIC COUNTER MEASURE அமைப்பு  எதிரியின் கருவியை செயலிழக்க வைக்க உதவும்  ஆனால் நமது அமைப்பில் எதிரியின் ECM செயல்களை தடுக்க ECCM என்ற ELECTRONIC COUNTER COUNTER MEASURE உள்ளது  COUNTER MEASURE கருவியை முடக்க உதவிட COUNTER COUNTER MEASURE என்ற எதிர் வினைக்கு எதிர் வினை ஆற்றும் அமைப்பு இருப்பதால் ஏவுகணைகள் புகுந்து தாக்குவது விரைவாக நடக்கிறது.

பழைய கால வில் வித்தை வீரனுக்கு போர்க்களத்தில் ஆசான் [ஆச்சாரியார்] பின்னல் இருந்து அறிவுறுத்துவது போன்ற செயல் பாடுகள் அமைந்துள்ளது ஆகாஷ் ஏவுகணைக்கான ரேடார் சிஸ்டம்.

 ஒரு லாரியின் மேல் இருந்து சுழலும் ஆண்டெனா போன்ற கருவிகளே இந்த ராடார் சிஸ்ட த்தின்  கண்கள் காதுகள் எல்லாம் .

https://www.youtube.com/watch?v=t5JJwdBOvcU  on opsindhoor

தொடரும்   அன்பன் ராமன்.

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...