Wednesday, June 11, 2025

IN OUR SKIES -5

 IN OUR SKIES -5                          

நமது வானில்-5 ..

[ THE ‘AKASH’ MISSILE  SYSTEM]

இவ்வளவு நுணுக்கமான செயல் திறன் கொண்ட அமைப்பினை வடிவமைத்தல் என்பது "டிசைனிங்' [DESIGNING] என்ற பூர்வாங்க நடவடிக்கை அதை நிறைவேற்ற , திரு ராவ் பணியாற்றிய DRDO , பிற தொழில் வித்தகம் கொண்ட ISRO [இஸ்ரோ] பிற DEFENCE PLANNING அமைப்புகள், மிஸ்ஸைல் சோதனை நிறுவனங்கள், உலோக அமைப்புகளை துல்லியமாக செய்து தரும் DEFENCE CORRIDOR FACILITIES , இவை அனைத்தும் தேவை. எனவே மனித வளம் [MAN POWER] நல்ல தரமான தொழில் நுட்பக்கல்வி பயிற்சி கொண்ட இளைஞர்கள். இதற்கென பல கல்வி நிலையங்களில் நேரடியாக நேர்காணல்  செய்து   திறமை கொண்ட சுமார் 300 பேர்களை திரு ராவ் அவர்களே அரசு ஆதரவுடன் பணியமர்த்திக்கொண்டாராம்.. இத்துணை முயற்சியும் ஒரு நல்ல பொருளை உருவாக்க என்பதை நாம் அனைவரும் நன்றிப்பெருக்குடன் நினைவில்  கொள்ள வேண்டும். 

வடிவமைக்குப்பின் தேவையான அளவில் இவ்வாயுதங்களை துல்லியமாக தயாரிக்க ஆக்கமும் ஊக்கமும் வழங்கியது மேக் ன்  இந்தியா வின் ஆத்ம நிர்பார்  செயல் முறை. எண்ணற்ற குழுக்கள், சிறிதும் பெரிதுமான நிறுவனங்கள் , இளைஞர் குழுக்கள் , ஸ்டார்ட்-அப் வகை முனைவோர் என 1000 கணக்கான பங்களிப்புகள் மூலம் உருவான இந்த சிஸ்டம் தான்  "ஆகாஷ்" ஏவுகணை module [தொகுப்பு].. திரு ராவ் அவர்கள் சொன்னது -

"இன்னொரு பெருமை -இவ்வகை ஆயுதம்வெளியே  வாங்கப்போனால் நமது செலவு 10-15 மடங்கு அதிகரிக்கும். அதாவது சந்தை விலையை விட நாம் 1/10 -1/15 செலவில் தரமான பொருளை உருவாக்கியுள்ளோம்"

பிற அம்சங்கள் -இதனால் நம் நாட்டில் தொழில் வளமும் உயர்நிலை தயாரிப்புகளும் விரைவாக வளரும் . நுண்பொருள் தயாரிப்பில் நமது நாடு வெகுவாக முன்னேறும் . GDP உயரும் .நமது பெருமை உலக அரங்கில் மதிப்பு பெறும் என்று விளக்கினார் திரு ராவ்.

ஆம் உள்ளபடியே நமது தளவாடங்கள் ஏவுகணைகள் ஆகாஷ்   , ப்ரம்மோஸ் இரண்டும் உலகை திரும்பிப் பார்க்க வைத்ததுடன் , புதுவகை போர் உத்திகளில் இந்தியா எட்டியுள்ள உயரம் பல நாடுகளுக்கும் ஆர்வம் ஆச்சரியம் மற்றும் அச்சம்  அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளன.. இரண்டு தினங்கள் முன்னர் வரை சுமார் 17 நாடுகள், நமது ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க விண்ணப்பித்துள்ள தாக தகவல்.

சமீபத்திய குங்குமப்பொட்டு நிகழ்வு குறித்து திரு ராவ் குறிப்பிட்டது

நேற்று இரவில் 1.00 மணி வரை ஏவுகணை தாக்குதலை TV இல் பார்த்தேன். நமது குழந்தை [ஆகாஷ்] பெரியவனாக வளர்ந்து எதிரிகளை துவம்சம் செய்கிறானே  என்று கண்ணீர் பெருகி பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது கலாம் அவர்கள் இருந்திருந்தால்     எவ்வளைவு மகிழ்ந்திருப்பார்  என்று நியாயமான பரவசம் கொண்டார்.

அன்பர்களே நமது குழந்தைகளுக்கு பல்வேறு வகை தொழில் நுட்ப கல்விகளுக்கு  இருக்கும் வாய்ப்புகளை புரிய வையுங்கள் . மார்க்கைத்துரத்தியது போதும்.

https://www.youtube.com/watch?v=PGv8LAizbkk defence INFO NARAYANA IYENGAR    

நன்றி       அன்பன்     ராமன்            

No comments:

Post a Comment

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...