Wednesday, June 11, 2025

AVOIDING MISTAKES -14

 AVOIDING MISTAKES -14                                                                       

பிழை தவிர்த்தல் – 14 

SCISSORS என்று சென்ற 12ம்  பதிவிற்கு ஒரு உதாரணம் காட்டியிருந்தார் டாக்டர் வெங்கட்ராமன் அவர்கள். ஆம், கத்தரிக்கோல் என்பதனை SCISSORS என்றே சொல்ல வேண்டும். ஏன் எனில் அதில் 2 கால்கள் உண்டு.  எனவே ஒரு கத்தரிக்கோல் எனினும் அதுவும்  SCISSORS தான். அதே போல ஆண்கள் அணியும் பான்ட் [ PANT ] , உண்மையிலேயே 'PANTS 'என்றே சொல்லவேண்டும் . ஒவ்வொரு PANT க்கும் 2 கால்கள் உள ; ஆகவே PANTS என்பதே சரி.

அது போலவே தமிழில் குறிப்பாக செய்தித்தாள்களில் டவுசர் என்று உலகிலேயே இல்லாத ஒரு பொருளைக்குறிப்பிடுகின்றனர்..

அது TROUSERS என்ற அறை கால் PANT இன் பெயர். அந்தப்பெயரும் 2 கால்களின் அடிப்படையிலேயே அமைந்து TROUSERS எனப்படுவது. டவுசர் அல்ல..

மற்றும் சில

FISH

மீன் என்று அறிவோம் . எத்துணை மீனகள் இருந்தாலும் FISH என்றே சொல்லவேண்டும் . சிலர் FISHES என்பதை பன்மைச்சொல்லாக உபயோகிக்கின்றனர். உண்மையில் FISHES என்றால் பலவகையான மீன்களுக்கு மட்டுமே பொருந்தும் . ஒரே  வகையில் 500 மீன்கள் இருப்பினும் FISH என்பதே சரி.

மற்றுமோர் சொல் PEOPLE [மக்கள் ] பன்மைக்கும் PEOPLE என்ற சொல்லே போதும்  சிலர் PEOPLES என்று வாய் நிறைய சொல்லக்கேட்கலாம் . ஆனால் PEOPLES என்ற சொல் கலாச்சார பண்பாட்டு அடிப்படையில்வேறுபட்ட மக்கள்  இருக்கும் தொகுப்பினை குறிக்கும். அது பன்மைச்சொல் என்பதை காட்டிலும் வேறுபட்ட கலாச்சார மக்கள் என்று குறிப்பிட பயன்படும் 

இவற்றிற்கு சற்றும் குறையாத பிழை- தமிழில் உலாவரும் 'நூக்கல்' /நுக்கல் என்ற பெயர். 

பல உணவகங்களின் வாயிலில் இன்றைய ஸ்பெஷல் என்ற அறிவிப்பில்      நுக்கல் சாம்பார் என்றிருக்கும் .

உண்மையில் அது, KNOLKHOL [நூல்கோல்] என்ற மலை பிரதேச கிழங்கு வகை. இதில் கொடுமை என்னவெனில் தாவர இயல் பயில்வோர் பலரும் நுக்கல் .   என்று பேசக்காணலாம்.

[உண்மையில் நுக்கல் /நொக்கல் என்பது ஒரு விசேஷ தின்பண்டம் முந்திரிப்பருப்பை சூடான சர்க்கரை கலந்த மாவில் பிரட்டி உலர வைத்து பல நிறங்களில் திருமண சீர் வைப்பது முன்னாளில் பழக்கம் . அது இல்லை என்றால் திருமணம் செய்து கொடுப்பவன்   வெறும் ஓட்டாண்டி என்ற ரேஞ்சுக்கு கேவலமாக விமரிசிப்பார்கள். அந் நாளைப்போல் இப்போது தட்டு தட்டாக நொக்கல் சீர் வைத்தால் , இறுதியில் அவர் ஓட்டாண்டிதான். 

அதைப்போல் BROCCOLI என்ற பூ வகை வெஜிட்டபிளை .தாறு மாறாக    ப்ராக்கோளி  , புறக்கோழி /புறாக்கோழி என்று ஏதோ அசைவ பொருள் போல எழுதி கிலோ 40/- ரூபாய் என்று பட்டியல் எழுதுவதையும் காண்கிறேன். அதே போலவே CAULIFLOWER என்ற பூவகை வெஜிடபிளை காளி புலவர், காலிபிளவர் என்று எழுதி ஏதோ தெய்வக்குத்தம் வந்து விடுமோ என்று அச்சுறுத்தும் வண்ணம்    காளி புலவர் பிரைட் ரைஸ் என்று விளம்பரம்.   எழுதுகின்றனர்..

இந்த ஜென்மத்தில் ஈடேற இயலாத மற்றுமோர் அறிவிப்பு வெண்ணிலா கேக் /வெண்ணிலா ஐஸ்க்ரீம் . உண்மையில் அது வனிலா கேக் /வனிலா ஐஸ்க்ரீம் . வனிலா என்பது ஆர்க்கிட் இனவகை தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு வாசனை பொருள் [எசன்ஸ்]

அது போலவே சௌகரியத்தை முன்னிலைப் படுத்தி பேச /எழுத முற்படுவதால்  சில சாதாரண            சொற்களை க்கூட பிழையாகவே உச்சரிப்பதும் எழுதுவதும் நடக்கக்காணலாம் . உதாரண ம் : CRICKET [க்ரிக்கெட் ] விளையாட்டு தமிழ்நாட்டில் 99% இதை கிரிக்கெட்  என்று ஆங்கில உரையாடலில் கூட பிழையாக உச்சரிக்கின்றனர் .

பங்க்சர் [PUNCTURE ] என்பதை பஞ்சர் என்கிறோம். சென்னையில் ஒரு கடையில்  PANCHAR DONE HERE என்று அறிவிப்பு. அந்த வாசகம் "இங்கு பஞ்சர் செய்யப்படும்" என்று எச்சரிக்கை விடுப்பது போல் இருக்கிறது. 

இது போல் பல கவனக்குறைவுகள் நமது உரையாடல்களில் அமைகின்றன. குறிப்பாக சைக்கிள் போன்ற வாகனங்களில் சிறிய இரும்புக்குண்டுகளை முக்கிய சுழலும் பகுதிகளில் மிக எளிய செயல்பாட்டிற்கென அமைத்திருப்பர் . அவை கோள வடிவில் இருப்பதால் பந்துகள் /பால்ஸ் என்று பெயர் ஆனால் பழுது பார்க்கும் ஊழியர் பால்ரஸ் போச்சு சார்; நாமும் அப்படியே பேசி அந்த அமைப்பே பால்ரஸ் என்றே எண்ணத் துவங்கி விட்டோம். இன்னோர் தவறு ஓவராயில்  செய்வது. உண்மையில் அது ஓவர்ஹாலிங் [OVERHAULING] என்றே சொல்லப்படவேண்டும் .

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TURKEY BERRY -2

  TURKEY BERRY -2 Solanum torvum [Tam: Sundaikkaai] -2 Fresh fruits of Solanum torvum [Sundaikkaai] [per 100 gm] are reported to contain  ...