Saturday, June 28, 2025

LET US LEARN THESE TOO

 LET US LEARN THESE TOO

இவற்றையும் அறிவோம்

GOOSE     முட்டை இடுமா ? இடாதா ?

முட்டை இடும் வாத்து எது ? முட்டை இடாத வாத்து எது? என்று சென்ற பதிவில் கேட்டிருந்தேன் . வழக்கம்போல் பதில் இல்லை -போ ய்யா மதுரையில் முருகபக்தர் மாநாடு இருக்கு என்று ஒரு சாக்கு கிடைத்துவிட்டது

GOOSE                                           GANDER

GOOSE =பெண் வாத்து , முட்டை இடும்

ஆனால் ஆண் வாத்து = GANDER சிலர் MALE GOOSE என்று பேசி சிரிப்பை வரவழைப்பார்கள்.  

What suits the GOOSE can suit the GANDER என்ற சொல்லாடல் உண்டு. ஆதாவது பெண்ணுக்கு பொருந்தும் எந்த விதிமுறையும் ஆணுக்கும் பொருந்தும் என்ற பொருள் உணர்த்துவது.

GOOSE      /GANDER      இவை போன்றதே SHEEP மற்றும் RAM .

 SHEEP = GENERAL NAME .   OF THEM FEMALE ,=EWE [Rhymes with you ]

ஆங்கிலத்தில் ஒரு ஜோக் சொல்வார்கள் .

ஒரு பெண் தன் கணவரிடம்  பெண் ஆட்டிற்கு ஆங்கிலப்பெயர் என்ன என கேட்க அவர் 'யூ' என்றாராம் . இவள் YOU என்றெண்ணி கோபம் கொள்ள அவர் சொன்னதோ EWE     [உச்சரிப்பினால் வந்த எரிச்சல் இது].

RAM = MALE      RAM என்பது முற்றிலும் தகுதியான ஆண் வகை ஆடு                            [ இனப்பெருக்கத்திற்கு உதவும் ஆண்  இன  ஆடு]

TEACHER-  IS IT MASCULINE OR FEMININE?  Also DRIVER /PILOT

ஒரு இந்திய சொல்லாடல்

 டீச்சர்= [TEACHER], எனில் பலரும் பெண் பால் பெயர் என நினைக்கின்றனர். TEACHER - என்பது தொழில் வகை பெயர் -ஆசிரியப்பணிக்கான பொதுப்பெயர்.

இதை புரிந்துகொள்ள DRIVER என்ற சொல்லைப்பாருங்கள் -ஆணோ பெண்ணோ இருக்கலாமே . அது போன்றதே ஜட்ஜ் [JUDGE ]=நீதி மான் ஆனால்   ஒரு நபரை குறிப்பிட ஜஸ்டிஸ் ஜார்ஜ் /ஜஸ்டிஸ் சாந்தா என்றே குறிப்பிடக்காணலாம் .

STALLION, GELDING   and COLT –What are these?

இவை எல்லாம் குதிரையின் பெயர்கள் . ஆனால், அவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு.

STALLION

என்பது ஆண் குதிரையின் பெயர் , இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண் குதிரை என்று பொருள்

COLT   என்பது ஆண் குதிரைக்குட்டியின் பெயர் பொதுவாக 4 வயதுக்கு குறைவான ஆண் "கோல்ட்" என்பது .

GELDING என்பது, ஆண் குதிரையின் பெயர்.  ஆனால் அதன் இனப்பெருக்க தகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன  [மலடு ஆக்கப்பட்டது]

HORSE, DONKEY  அனைவருக்கும் தெரியும் . ஆனால், அதையும் கடந்து பல பெயர்கள் உள்ளன.

அவை பின் வருமாறு

MARE  , DONKEY, MULE, JENNIES

MARE  = 3 வயதிற்கு மேல் ஆன ஆண் குதிரை

MULE= பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த கலப்பினக்குட்டி

JENNIES = என்பன இளம் வயது பெண் கழுதைகள்.  போதுமய்யா கழுதை புராணம் என்றொருவர் அலறுகிறார் . பின்னர் வேறு தகவல்களுடன்

  தொடரும்       அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -29

  LET US PERCEIVE THE SONG -29            பாடலை உணர்வோம் -29 இது போன்றே ஒரு டூயட் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன ? பாடலை சொல்வ...