ZSU-23-4 UPGRADE
ZSU
ஷில்கா
- 23-4 மேம்படுத்தப்பட்டது
இதுவும் ஒரு பீரங்கி வகை ராணுவ
தளவாடம். எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும்
திறன் கொண்டது . அடிப்படையில் இது ரஷ்ய தயாரிப்பு . ப;ல நாடுகளில் பயன் பாட்டில் உள்ளது.
23-4 என்பது 23 மிமி குண் டுகளை
, 4 குழல்களால் வானில் செலுத்துவதை உணர்த்தும் குறியீடு. இது
மூர்க்கத்தனமாக தாக்கும் -அதாவது எண்ணற்ற குண்டுகளை வானில் பீய்ச்சும்
இதில் முறையான மேம்பாடுகள் செய்துகொள்ளும்
உரிமம் இருப்பதால், இந்திய பாதுகாப்புப்படை இதன் உருமாறுதலில் சிறப்பு கவனம் கொண்டுள்ளது . இந்தியாவின் பரத் எலெக்ட்ரானிக்ஸ்
நிறுவனமும், இஸ்ரேல் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமும் கூட்டாக புதிய சில திறன்
மேம்பாடுகளை செய்துள்ளனர். இதில் முப்பரிமாண
ரேடார் தொகுப்பு இணைக்கப்படுகிறது எனவே எதிரிகளின் எதிர்வினைக்கு பலியாகாமல், சுமார்
15 கிலோமீட்டருக்கு அப்பால் வரும் இடர்களை தாக்கும்,மேலும் உயர் வெப்பநிலைகளில் 40
டிகிரி முதல் 55 டிகிரி செல்சிய ஸ் வெப்ப நிலையிலும் சீராக செயல் படவல்லது.
மேலும் 1500 மீட்டர் முதல் 2500 மீட்டர் உயரத்தில் 450 மைல் வேகத்தில் வரும் ஆபத்து கலன் களை தாக்கும் திறன் பெற்றுள்ளது
இந்த மேம்பாடுகள் மேலும் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேவைக்கு உதவி புரியும் என்று நம்பப்படுகிறது.
இவ்வகை மேம்பாடுகள் மூலம் செலவினங்கள் குறைவதுடன் , நமது தொழில் நுட்ப ஆய்வுத்திறன்களும் வலுப்பெறுகின்றன.
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment