Thursday, June 5, 2025

PEER RAGGING -2

PEER RAGGING -2

நட்புகளின் கிண்டல் -2

கண்ணாடி மேனியடி [கொடி மலர் ]1966 கண்ணதாசன் , விஸ்வநாதன் பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

தோழிகள் கிண்டல் செய்து கூட்டமாக ஆற்றில் நீந்தி குதூகலித்து மகிழும் பாடல் இப்பாடலின் சிறப்பே பால் குவளை யில் கம்பியைக்கட்டி தாளமிட்டு ஒலி  எழுப்புவது தான் . மிகவும் நுணுக்கமாக மீட்டி தாள ஒலி உருவாக்குவது திரு மீசை முருகேஷ் அவர்களின் பங்களிப்பு. பாடல் முழுவதும் பிசிறில்லா கூட்டு ஒலிகள். சுறுசுறுப்பான ராக நடை , தாள  ஒற்றுமை கொண்ட பயணம். கேட்டு மகிழ இணைப்பு

KANNAADI MENIYADI

https://www.google.com/search?q=KANNAADI+MENIYADI+%5BKODIMALAR+%5D+VIDEO+SONG&newwindow=1&sca_esv=3f7494e869ebe89e&sxsrf=AHTn8zqSt_W39gVPNYt0EPwOhdfz0St8zg%3A1747912862176&ei=nggvaLfECoLn1e8PmN6BqAk&ved=0ahUKEwi3i_7p-raNAxWCc_UHHRhvAJUQ4dUDCBA&oq=KANNAADI+MENIYADI+%5BKODIMALAR+%5D+VIDEO+SONG&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKUtBTk5BQURJIE1FTklZQURJIFtLT0RJTUFMQVIgXSBWSURFTyBTT05HMggQIRigARjDBEiAlQFQtSZYjIIBcAF4AJABAJgBgQOgAf4ZqgEHMi4xLjQuNrgBDMgBAPgBAZgCDaACvxjCAgoQIxiwAhiwAxgnwgIIEAAYsA

அடி  ஏண்டி அசட்டுப்பெண்ணே [கன்னிப்பெண்-1969]  

கண்ணதாசன் விஸ்வநாதன் சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

இரு தோழியர் இடையே உலவும் நெருக்கமும் பேதமும் நிகழ்த்தும் வாதங்களே பாடல் . யாரையோ நினைத்து இருக்கிறாள் போலும் என்று நினைத்து பேசப்படும் வாதங்களும் எதிர் வாதங்களும்  விறு விறுப்பாக பயணித்த காட்சி. வெகு இயல்பான சொல்லாடல் கவிதை நயம் மிக்க பாடல் . பாடலுக்கு இணைப்பு இதோ 

ADI YENDI ASATTU PENNE KANNI PENN 1969 KD MSV PS LRE

https://www.google.com/search?q=ADI+ENDI+ASATTU+PENNE+VIDEO+SONG&oq=ADI+ENDI+ASATTU+PENNE+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRiPAtIBCTIzODU5ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:b83058cb,vid:tXXJrVDxtyo,st:0

ஏடி பூங்கொடி [மறுபிறவி 19 73]  கண்ணதாசன் டிஆர் பாப்பா , குரல் எம் ஆர் விஜயா . நட்பின் வெளிப்பாடாக வந்த மேடைப்பாடல்  திரு பாப்பாவின் இசையில்  எம் ஆர் விஜயா பாடியுள்ள பாடல் . ரசிக்க உகந்ததாக அமைந்த கார்ச்சி. கண்டு மகிழ இணைப்பு

 yedi poongodi  maru piravi  1973 kd tr papa, mr vijaya

https://www.google.com/search?q=yedi+poongodi+video+song+download&oq=yedi+poongodi+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIJCAAQRRg5GJ8FMgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgKGKAB0gEJMTE2MDJqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:266ee977,vid:Cs0F8zK4tDE,st:0

அடி  போடி பைத்தியக்காரி  [தாமரை நெஞ்சம் 1972] கண்ணதாசன் , எம் எஸ் வி, சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

உற்ற தோழிகள் இருவரும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள விரும்பாத நிலை:  சொல்வதைக்கேள் என்று ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு சொல்ல, நான் சொல்வதை நீ சற்று கேள் என்று தொடரும் விவாதம் ஆனால் முற்றிலும் பூடக விவாதம் மறை பொருள் உணர்த்தும் உத்தி பாடல் எங்கும் கண்ணதாசனின் சொல்லாடல். இரண்டு உவமைகள் கவி அரசரின் ஆளுமையில்

1 கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையைப்பார்த்ததில்லை , இந்த உவமை கொஞ்சம் புதுமை இன்னும் உனக்கேன் புரியவில்லை [நீ உற்ற தோழிதான் ஆனால்என்னை சரியாக   புரிந்துகொள்ளவில்லை ]

பின்னவர் மற்றவள் விளக்கின் ஒளி யாய் நீ இருப்பாய் , விழுந்த நிழலாய் நான் இருப்பேன் [எப்போதும் உன்னுடன் தொடர்வேன்]

எதிர்வாதம்

2 நிழலும் ஒளியும் சேர்வதில்லை [நீ வேறு நான் வேறு] நிலவும் வானும் பிரிவதில்லை [ஒன்றைப்பார்த்தால் மற்றது தெரியும் -ஆனால் நிலவு வேறு வானம் வேறு என்று ஒற்றுமையில் வேற்றுமை காட்டும் கவித்துவம் . அதியற்புதமான உச்சரிப்பில் சுசீலாவும் ஈஸ்வரியும் ABSOLUTE MATCH என்பதாக பந்தயக்குதிரைகள் போல் முழு வீச்சில் பயணிக்க  தாளமும் குழலும் பாடலை உயர்த்திப்பிடிக்க கேட்கவே ரம்மியம். நட்பில் ஒரு மாற்றம் சொல்லும் பாடல் . கேட்டு மகிழ இணைப்பு

ADI PODI PATHTHIYAKKAARI [THAAMARAI NENJAM  KD MSV PS LRE

https://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

தொடரும்      அன்பன் ராமன்

1 comment:

  1. Great songs, Prof. KannadiMeniyadi is a song I often play Dholak along.
    Now AdiYendi is a great song for Dholak. Thanks.
    How much of Treasure MSV has left behind for us !! Enough of multiple janmam !!!

    ReplyDelete

MAKE LEARNING –A PLEASURE -4

   MAKE LEARNING –A PLEASURE -4 Any special activity like sewing, painting, acting, driving, carpentry turns pleasurable if the learner enjo...