DIRECTOR SRIDHAR -3
இயக்குனர் ஸ்ரீதர்-3
தங்கரதம் வந்தது [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பாலமுரளிகிருஷ்ணா , சுசீலா
பெயருக்கு ஏற்றார் போல் அருமையான அமைப்புக்களும் பாடல்களும் நிறைந்த காவியம் கலைக்கோயில் அதிலும் 'தங்க ரதம்' மிகுந்த நுணுக்கங்களும் சங்கீத சங்கதிகளும் சொற்சுவையும் கொண்ட அற்புதமான பாடல் . யார் சிறப்பு பாலமுரளியா சுசீலா வா என்ற சர்ச்சையை பாலா முரளியே துவக்கியது போல் அமைந்த நிகழ்வு, பாடல் பதிவானதும் பாலா முரளி எம் எஸ் வியிடம் , இன்னொரு முறை பாடுகிறேன் என்று கேட்க, எம் எஸ் வி வேண்டாம் சிறப்பாக உலகளது போதும் என்றாராம். பா மு சொன்னாராம் சுசீலா என்னை விட நன்றாக பாடியுள்ளார் எனவே என்று இழுக்க எம் எ ஸ் வி இல்லை என்று மறுத்துவிட்டார் இதை பல தருணங்களில்பால முரளியே கூறி யுள்ளார்.
பாடலுக்கு இணைப்பு
KALAIKKOIL - THANGA RATHAM [1964] KD , V R , BMK PS
msv sridhar balamurali p suseelaa
இதே படத்தில் மற்றுமோர் நளினம்
தேவியர் இருவர் முருகனுக்கு , கண்ணதாசன் , வி-ரா , சுசீலா
அதியற்புதமான வேகம் நளினம் ஏற்ற இறக்கம் சொற்கோர்வை நடன தாளக்கட்டுகள் வீணையின் சிருங்காரம் என பன்முகம் கொண்ட அற்புதம். ஆலாபனைகளும் தபலாவின் அதிர்வுகளும் வெகு சிறப்பு
கேட்டு மகிழ இணைப்பு
DEVIYAR IRUVAR KD V R PS
கண்ணன் என்னும் [வெண்ணிற ஆடை 1965] கண்ணதாசன் , வி ரா, பிசுசீலா
ஆண் பங்கு கொண்ட காட்சி
பெண் மட்டும் பாடுகிறாள் . பல்லவியை மும்முறை பாடி காட்சியை வலுவேற்றிய பாடல் அமைப்பு. அன்றைய கொடைக்கானல் கோல்ப் மைதானம் ஒற்றை மரமே சாட்சியாய் நின்று பல பாடல்களை பதிவிட உதவிய நீண்ட மைதானம். பாடலின் சொல் வரிசை அதீத வசீகரம், கண்ணன் அல்லவா குழல் விளையாடும் பாடல் , நோயல் க்ராண்ட் அவர்களின் ட்ரம் துவக்கத்திலும் இறுதியிலும் களைகட்டிய வெகு சிறப்பான வாசிப்பு. எம் எஸ் வியின் அ அ ஆ ஆ ஆ , ல ல ல லா ல்லா ல மற்றும் கொத்தாக ரீங்கரிக்கும் கருவிகள் என எப்போதோ 60 ஆண்டுகளுக்கு முன்னம் உச்சம் தொட்ட இசை
. கேட்டு மகிழ இணைப்பு
VENNIRA AADAI KANNAN ENUM [1965] KD V R , PS
இதே படத்தில் இன்னுமோர் உயரம்
அம்மம்மா காற்று வந்து -கவியரசர் , வி ரா சுசீலா
கும்பக்கரை அருவியில் நீராடி மகிழும் இளம் பாவையின் உள்ளம் சிறகடிக்க கிளர்ந்த பெண் மனக்கவிதை . ஆனாள் எந்நாளும் இல்லை இந்த எண்ணம் என்பது போன்ற கவிதை வரிகள் துள்ளி விளையாட உதவியாக அள்ளித்தெளித்த இசை . மெல்லிசை மன்னரின் இசை ஆதிக்கம் கேட்டு தான் உணர இயலும் பாடலுக்கு இணைப்பு இதோ.
AMMAMMA KD V R PS
என்ன என்ன வார்த்தைகளோ பி சுசீலா
இதுவும் வெண்ணிற ஆடையில் இடம் பெற்ற
இசை வித்தகம்
பியானோவின் இசைக்கோர்வைகளுக்கென்றே அமைத்த ட்யூன் , இடை இசையும் பியானோவிலேயே அரங்கேறிய மஹோன்னதம் இப்போது பாடலுக்கு வயது 60 , இளமை மாறாத துடிப்புடன் மிளிரும் பாடல் . காட்சியில் பியானோவில் குலாவி விரையும் விரல்கள் அந்நாளைய எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் பங்களிப்பே என்றொரு தகவல் உண்டு. பியானோவின் நோட்களுக்கும் விரல்களின் இயக்கத்திற்கும் பொருத்தம் வேண்டும் என்ற அடிப்படையில். நாயகி வெகு நளினமாக அபிநயித்து பின்னர் சில ஆண்டுகள் காலண்டர்களில் இடம் பிடித்த pose இந்தப்பாடல் உருவாக்கிய வசீகரம். பாடல் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
ENNA ENNA KD V R PS
தொடரும்
No comments:
Post a Comment