SIBLING EMOTION
உடன் பிறப்புகள்- உணர்ச்சிகள்
மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் [பாசமலர் -1961] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி டி எம் எஸ்
அண்ணன் தங்கை உறவின் பாசத்தில்விசேஷ இடமும் கவனமும் பெறுவது. ஏனெனில் பாடலின் சொல்லாடல் அவ்வளவு இயல்பும் நேர்த்தியும் கொண்டது. பல தருணங்களில் அண்ணன் தனது தங்கையின் வாழ்வு எதிர்காலம் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பதாக சித்தரிக்கப்பட்டு, தங்கை அமைதியாக உறங்குவதும் இவன் கற்பனைத்தேரில் பறப்பதுமாக பாடல் பயணிக்கிறது. இசை அமைப்பில் பெரும் ஆளுமை செலுத்தி வி-ரா அசைக்கவொண்ணா இடத்திற்கு முன்னேறிய காலமும் களமும் இந்தப்படத்தில் தான். எப்போது கேட்டாலும் ஒரே நேரத்தில் அமைதியும் சஞ்சலமும் தரவல்ல பாடல் . கேட்டு உணர இணைப்பு இதோ.
https://www.youtube.com/watch?v=or5UrvlXWPo
PASAMALAR MALARGALAIPPOL
இந்த மன்றத்தில் ஓடிவரும் [போலீஸ் காரன் மகள் -1963] கண்ணதாசன் விஸ்வநாதன் ராம மூர்த்தி , குரல்கள் எஸ் ஜானகி பி பி ஸ்ரீனிவாஸ்
கண்ணதாசனின் சொல்லாட்சிக்கு எல்லையே இல்லையா என சிந்திக்க வைக்கும் பாடல். ஏனெனில் தங்கை தனது காதலனுக்கு தென்றல் மூலம் தூது விடும் செய்தி இப்பாடலில்.
பாருங்கள் "வண்ண மலர்களில் அரும்பானாள் உன் மனதுக்கு கரும்பானாள் ,
அலை
கடல்
துரும்பானாள்
அனலிடை
மெழுகானாள்
என
ஒரு
மொழி
கூறாயோ
என்று
அவள்
ஏக்கம்
காட்ட
மறைந்திருந்த
அண்ணன்
, தங்கையைப்பிடித்துவிட ஐயோ மாட்டிக்கொண்டு விட்டோமே என்று தங்கை தவிக்கும் தவிப்பு எழுத்தில்விளக்கமுடியாது . காட்சியில் ஊன்றி கவனியுங்கள் . மேலும் அண்ணன் தன பங்கிற்கு தங்கையை கேலி செய்ய " தன் கண்ணனை த் தேடுகிறாள் , மனக்காதலை க்கூறுகிறாள்,
இந்த
அண்ணனை
மறந்துவிட்டாள் என ஒரு மொழி கூறாயோ என்று பாட இதை எப்படி விளக்குவது? இது போன்ற மென்மையான உணர்வுகளை தமிழ் சினிமா தொலைத்து தலை முழுகிவிட்டதால் நமது சமகால அன்பர்களும் அதற்கு [சினிமாவிற்கு] தலை முழுகி விட்டனர்
என்பதே
இன்றைய
நிலை.
அன்பும்
பாசமும்
இல்லாமல்,
பார்த்தவளெல்லாம் எனது உடமை என்னும் மனோ பாவம் மேலிட அமைக்கப்படும் கதா பாத்திரங்கள் இருக்கும் வரை மன முதிர்ச்சி கொண்ட எவரும் சினிமாவை நினைத்துப்பார்க்க வாய்ப்பில்லை என்பதை திரை உலகத்தினர் கருத்தில் கொள்வது நலம். [“அலை கடல் துரும்பானாள் அனலிடை மெழுகானாள் --இதே கருத்தை கவிஞர் வாலி பின்னாளில் வந்த ‘அழகன்
முருகனிடம்’(பஞ்சவர்ணக்கிளி) பாடலில் கையாண்டுள்ளார் என்பது இந்த சொல்லாடல் மிக உயர்ந்தது
என்பதற்கு சான்று] அதியற்புதமான குரலும் இசையும் உணர்வும் ஒளிப்பதிவும் இப்பாடலின் சிறப்புகள் இதோ இணைப்பு
INDHA
MANRATHTHIL [POLICEKAARAN MAGAL-1962 ] v
r SJ PBS
https://www.youtube.com/watch?v=eUQA0xLA7G8
ஒளிமயமான எதிர்காலம் [பச்சை விளக்கு 1964] கண்ணதாசன் டி எம் எஸ்
மற்றுமோர் அண்ணன் -தங்கை பாடல். தங்கை
உயர்ந்த
படிப்பு
படிப்பதால்
அண்ணன்
மன
நிறைவுடன்
பாடும்
பாடல்.
வெகு
புனிதமான
சொற்கள்,
பாடல்
நெடுகிலும்
மங்கல
உணர்வு
மேலோங்கவைக்கும் நாதஸ்வர -தவில் இசை பாடும் களமோ ரயில் எஞ்சின் ஆயினும் அன்புக்கும் பெருமைக்கும் குறைவில்லாத பாடல் சிறப்பான இசை எப்போதும் ரீங்கரிக்கும் வன்மை கொண்ட இனிய பாடல். இணைப்பு இதோ
OLIMAYAMAANA
[PACHAI VILAKKU] https://www.youtube.com/watch?v=jeVyBf4767Y
பூ முடிப்பாள் [நெஞ்சிருக்கும் வரை 1967] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ். கம்பீரக்குரலில்
அமைந்த
பாடல்.
உடன் பிறவா உறவு தான் எனினும் உள்ளம் நிறைந்த பேரு வகையில் வாழ்த்தும் அண்ணன் ஸ்தானத்தில் ஒரு ஆண் . தங்கையின் மண
நிகழ்வினை பாடலாக வெளியிட்ட 'அண்ணன்'. . பாடலே பத்திரிகை வடிவில் எழுதப்பெற்று
, கேட்பவர்
மனங்களை
ஆட்கொள்ளும்
வர்ணணை.
இல்லத்தில் ஏழ்மை , உள்ளத்தில் அன்பும் மகிழ்ச்சியும் இப்பாடல் , இலக்கிய தரமான மங்கள சொற்கள், ஒப்பனை இல்லாத ஆ னால் ஒப்பில்லாத முகபாவம் காட்டிய நடிப்பு ஸ்ரீதரின் இயக்கத்தில்
நிகழ்வுகள் கோர்வையாக அமைய மேலோங்கிய நாதஸ்வர -தவில் கூட்டில் அமைந்த இசை. கேட்கும் போதெல்லாம் மனம் நிறையும் மகத்துவம் பாடலின் சிறப்பு. இசையின் மேன்மை அலாதியானது கேட்டு மகிழ இணைப்பு
POO
MUDIPPAAL [NENJIRUKKUM VARAI ] KD MSV
TMS
https://www.youtube.com/watch?v=mV4r6SUlO3I
தங்கச்சி சின்னப்பொண்ணு [கருப்பு பணம் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
எல்
ஆர்
ஈஸ்வரி
/ சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்..
இதுவும் ஒரு கேலிப்பாடல் ஆனால் உள்ளூர அன்பை சுமக்கும் மனம் , எண்ணற்ற பெண்கள் பங்கு கொண்டதால் கோரஸ் மற்றும் கிளாப் வகை தாளம் பாடலில் பெருமளவில் இடம் பெற்றுள்ளது. அதியற்புத ட்யூன் மற்றும் குரல்களின் சங்கமம் + கோரஸ் பாடல் முழுவதிலும் ஒலிக்க , கேட்கவே பரவசம் தரும் அற்புதமான தொடர் கிளாப் எப்படித்தான் மேற்பார்வை செய்து பதிவிட்டனரோ . சிறிதும் தொய்வே இல்லாத நீண்ட நெடும் பயணம் செய்யும் நேர்த்தியான உள்ளங்கவர் பாடல் மனதை விட்டு அகலாத இசை சிறப்பு. சிறப்பான இசைத்தொகுப்பு . கேட்டு மகிழ இதோ இணைப்பு
THANGACHI
CHINNAPPONNU –KARUPPUPPANAM 1963 KD VR
LRE SG +
https://www.youtube.com/watch?v=GWB8ESx2bMY
நன்றி
அன்பன் ராமன்
Great picks from MSV treasure.
ReplyDeleteVariety of feels in a brother sister relationship thro tunes and music !!
Only MSV can do.
A good combo, Prof.
My mobile ring tone now is the
prelude of Thangachi chinna pennu !!!