Tuesday, July 1, 2025

DIRECTOR SRIDHAR - 7

DIRECTOR SRIDHAR - 7        

இயக்குனர் ஸ்ரீதர்-7

பூமாலையில் ஓர் மல்லிகை [ஊட்டி வரை உறவு -1967] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ்,            

   பி சுசீலா

இது போன்ற பாடல்கள் எப்போதாவது தான் மலரும் . அதுவும் வெகு நேர்த்தியான ராக அமைப்பு, இசை தொகுப்பு, கௌரவமான சொல்லாடல்  தங்கு தடை இல்லா நீரோட்டம் போன்ற சங்கிலித்தொடர் போன்ற இசை -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . ஆடை கலாச்சாரத்தைப்பாருங்கள் எவருக்கும் குறை தோன்றாது. நடன அசைவுகள் எளிதான வை [ஸ்ரீதர் அமைத்த நடனம் என்றுஒரு பேச்சு உண்டு] காட்சி மிகவும் நிறைவு தரும். எம் எஸ் வி காட்டியுள்ள துவக்க ஆலாபனையிலேயே பாடல் அழியாப்புகழ் கொண்டது.. இவை அனைத்திற்கும் மகுடமாக அமைந்த வண்ண ஒளிப்பதிவு [என் பாலகிருஷ்ணன்] ஊட்டி தாவர  இயல் பூங்காவில்  படமான காட்சி ஆயினும் மாறுபட்ட கோணங்கள் பாடலின் தனிச்சிறப்பு  

POO MAALAIYIL KD MSV TMS PS

https://www.google.com/search?q=POOMAALAIYIL+OR+MALLIGAI+VIDEO+SONG&oq=POOMAALAIYIL+OR+MALLIGAI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMTg0OTlqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:8ffd9e5e,vid:N4F0poJiGok,st:0

QFR 518 இந்த பாடலின் பிற சிறப்புகளை பின்வரும் பதிவில் கேட்டு மகிழ

https://www.facebook.com/watch/?v=542692321114669 QFR 518

மலர் எது [அவளுக்கென்று ஓர் மனம் 1971]கண்ணதாசன் , எம் எஸ் வி, பி சுசீலா

நீச்சல் குள க்காட்சிகளுக்கு பாடல் அமைப்பது ஒரு அலாதி திறமை . அவ்வகை எம் எஸ் வி  வழங்கிய ஒரு சிறப்பு பாடல் வண்ணத்தில் நீச்சல் குள ப்படப் பி டிப்பு . நீர் கீழ் காமெரா இல்லாத காலத்தில் சிறப்பான பேழை அமைத்து அதனுள் இருந்து எடுத்த காட்சிகள், நீர் மட்டம் , நீருக்கு மேல் மற்றும் அடியில் என காட்சி பார்ப்பது தனி அழகு. யூ ராஜகோபாலன் ஒளிப்பதிவு . பாடலின் இசையின் ட்ரம் , ட்ரம் பெட் , , சைலோபோன் , ட்ராம்போன் கருவிகளின் ஒலியுடன் அக்கார்டியன் , காங்கோ என மையென குழைத்த பாடல்  சுசீலாவின் குரலும் இணைய பாடல் ஒரு மாறுபட்ட ரம்மியம் கேட்டு மகிழ இணைப்பு

A O M  MALAR ETHU [1971] KD MSV PS 

https://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw

QFR 649

இந்த பாடலின் பிற சிறப்புகளை பின்வரும் பதிவில் கேட்டு மகிழ

https://www.facebook.com/watch/?v=489374237085175

நன்றி  அன்பன் ராமன்

1 comment:

  1. ஸ்ரீதர் தாசனின்
    சீரான விளக்கம்
    இசையில் இணையற்ற
    பாடல்கள் பற்றி !!

    ReplyDelete

MSV’s APPROACH TO SONG COMPOSITION

  MSV’s APPROACH   TO SONG COMPOSITION    எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள் இன்றைய பதிவின் மையப்புள்ளி திரு எம் எஸ் வி அ...