Friday, July 4, 2025

KAVERI ENGINE

 KAVERI  ENGINE

காவேரி எஞ்சின்

நம்மில் பலருக்கும் தோன்றாத ஒரு கேள்வி, தொழில் நுட்பம்/ பொறியியல் வளர்ச்சி கண்டும் கூட இந்தியா ஏன் விமானத்தயாரிப்பில் இறங்கவில்லை என்பதே. ஆனால் தொழில்துறையினர் , ராணுவ ஆய்வில் கவனம் கொண்டோர் இது குறித்து பல கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர். 

விமானதயாரிப்பில் மிகவும் இக்கட்டான பகுதி ஜெட் எஞ்சின் களை வடிவமைப்பது தான் . அது மிகுந்த நுணுக்கமும் ரிஸ்க் என்னும் ஆபத்தும் நிறைந்த ஒரு துறை என்கிறார்கள். எண்ணற்ற சாட்டிலைட் வடிவமைத்தவர்களுக்கு இது ஒரு பொருட்டா எனில் --ஆம் நிச்சயம் அப்படித்தான். ஏனெனில் சா ட்டி லைட்  இயங்காது தோல்வியுற்றால் பொருள் செலவோடு போகும். ஆனால் விமானம் அப்படி அல்ல மனித உயிர்களோடு தொடர்புள்ளது. மேலும் பிற நாட்டவர் கூட விபத்திற்குள்ளாகலாம். இது போன்ற எண்ணற்ற சவால்கள் இருப்பதால் ஜெட் எஞ்சின் தயாரிப்பில் பெரும் முன்னே ற்றம்  காண வில்லை.

 அப்படித்தானா எனில் இல்லை 

பின்?

சுமார் 45 ஆண்டுகளாக முயன்றும் ஒரு நம்பகமான ஜெட் எஞ்சின் இறுதி வடிவம் பெறவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் "என்னதான் நடக்கிறது ? " என்ற கேள்விக்கு விடை தேடும் போது , முறையான நிதி ஒதுக்கீடு இல்லாமல் இந்த திட்டம் மூச்சு திணறுவதாக அறியப்பட்டது.. எனவே பொது அறிக்கை மூலம் "காவேரி எஞ்சின் " திட்டத்தில் பங்குகொள்ள வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் வெல்வேறு முயற்சிகள் அரைகுறை வெற்றி கண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இதற்காக FUND KAVERI என்ற வேண்டுகோள் பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு புறம்  இருக்க, இந்த எஞ்சின் செயல் பட தேவை யான நுட்பம் மிக அதிகமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற மிக திறன்வாய்ந்த ஜெட் விமானஎஞ்சின் தேவை . இதன் நுட்பங்களை திரு ஆசிர் சாமுவேல் விளக்ககுகிறார்

மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் கேளுங்கள் பல அறிய தகவல்களை உணரலாம் . மேலும் இந்திய முயற்சி எல்லா துறைகளுள்ளும் பார்வையை செலுத்துவதையும் உணரலாம் . இது போன்ற பிற தகவல்கள் இன்னும் வரும்

India's victory-Indian jet's engine GTX-35VS Kaveri succeeded and when will it fly part-2.#jet #drd

நன்றி       அன்பன்     ராமன்            

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...