Friday, July 4, 2025

LET US PERCEIVE THE SONG -30

 LET US PERCEIVE THE SONG -30           

பாடலை உணர்வோம் -30  

ஜில் என்று காற்று வந்ததோ [நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ், சுசீலா

சில தினங்கள் முன்  ஒரு நீச்சல் குள க்காட்சியை பார்த்தோய்ம். இதோ மற்றொன்று ஆனால் இது தான் தமிழ் சினிமாவில் நீச்சல் காட்சி ஒளிப்பதிவில் புரட்சி செய்த படம் . புரட்சியாளர் இருவர் .

1 சி வி ராஜேந்திரன் [இயக்குனர்]  2 பி என் சுந்தரம் [ஒளிப்பதிவாளர்] நீருக்கடியில் பிரத்தியேக கமெரா இல்லாமலேயே ஒரு பேழையை தயார்செய்து அதற்குள் நின்று கொண்டு படம் பிடித்த சுந்தரம் கட்டிய வழியில் பின்னர் சிலர் பயணிக்க ஆங்கிலப்படங்களுக்கு இணையாக இந்திய படங்களிலும் காட்சிகள் அரங்கேறின .,

1969 இல் வெளிவந்த "நில் கவனி காதலி " படம் எட்டிய பரிமாணம் அதிகம் தான் .

வசதிகளே இல்லாவிடினும் கடும் உழைப்பைக்கொட்டிய கலைஞர் கள் .

நீர் அழுத்தம் தாங்காமல் படீரென்று பேழை சிதறி சுந்தரம் காலில் பலமாககண்ணாடி  கிழித்து விட , 3 வார ஓய்வு தேவைப்பட்டது பி என் சுந்தரத்திற்கு.. இப்போது கண்ணாடிக்கு பதில் perspex என்னும் பிளாட்டிக் போன்ற பொருளால் செய்த கூண்டினுள்  மீண்டும் சுந்தரம். நீரின் ஆழம்- நீர் மட்டம்- நீருக்கு மேல் என்று தெளிவாக படம் பிடித்த நேர்த்தியை என்னென்று சொல்ல? காட்சியை கவனித்து ப்பாருங்கள் உண்மை தெரியும் .

வாலியின் வரிகளுக்கு எம் எஸ் வி யின் இசை. இதை போன்ற சூழல்களுக்கு எம் எஸ் வி கையிலெடுக்கும் உத்திகள் மாறுபட்டவை . அக்காடியன் , சைலோபோன் , சாரங்கி, ப்ரஷ் ட்ரம் என்று கருவிப்பட்டாளம் ஒரு புறம்.. பாடலில் குஷி கிளம்பியதன் அறிகுறியாக அவ்வப்போது டாடட் டா    என்று மாறி மாறிப்படி குதூகலம் காட்டும் குரல்கள் டி எம் எஸ் /சுசீலா . சையில் இனம் தெரியாத வசீகரம் ஊடுருவ விடுவதில் எம் எஸ் வி தனி முத்திரை பதிப்பவர். இப்போதும் அதை திறம்பட தந்துள்ளார். இது போன்ற காட்சிகளை படமாக்க அசாத்திய பொறுமையும் விடா முயற்சியும் தேவைப்படும் . இம்மி பிசகாமல் அதை ஈடேற்றியுள்ளார் திரு சி வி ராஜேந்திரன் அவர்கள். இவ்வகை காட்சியில் ஆசானுக்கே [ஸ்ரீதர்] முன்னோடி அவர் . பாடலை கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=u-fdak01sn4&list=RDu-fdak01sn4 JIL ENRU

இந்த பாடலில் இசையின் ஆழமும் பரிமாணமும் எந்த அளவுக்கு பரவியுள்ளன என்பதை தனக்கே உரிய வகையில் மெய்மறந்து விளக்குகிறார் திரு அமுதபாரதி [இசை அமைப்பு[பாலர்] பாடலை அவர்  அணு அணுவாக ரசித்து விளக்குவதை நீங்களும் கேளுங்கள் , எம் எஸ் வியின் வியாபகம் தெளிவாகும் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=N7d9TaOm5mI jillendru amudhabarathi

நன்றி அன்பன் ராமன்.

 

 

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...