Thursday, July 10, 2025

DIRECTOR SRIDHAR - 8

  DIRECTOR SRIDHAR - 8          

இயக்குனர் ஸ்ரீதர்-8         

மங்கையரில்  மஹராணி [அவளுக்கென்று ஓர் மனம் 1971]  கண்ணதாசன் , எம் எஸ் வி, எஸ் பி பி  பி  சுசீலா

ஒரே பாடலில் காதலின் உற்சாகத்தையும், வேண்டாத தொல்லையின் துயரத்தையும் பிணைத்து பாடல் உருவாக்க முடியும்  என இசை அமைப்பாளர் வகுத்துக்காட்டிய விந்தை/ வித்தை .ஏனெனில் காஞ்சனா -ஜெமினி குதூகலலி க்க அருகிலேயே பாரதி முத்துராமனின் பிடியில் சிக்கி சோகம் மீட்டும் உணர்வு. டுய்ட்டில் சோகம் வெறும் ஹம்மிங் மூலமே காட்டப்பட்டுள்ளது கூர்ந்து கேளுங்கள் இசையின் வலிமை புரியும் இணைப்பு கீழே

 MANGAIYARIL KD MSV SPB  PS  

https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U

 எல்லோரும் பார்க்க [அவளுக்கென்று ஓர் மனம் -1971] கண்ணதாசன், எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி

எல் ஆர் ஈஸ்வரியினால் ஒரு சோகப்பாடல் தர இயலுமா ? ஏன் முடியாது என்ற பதில் .

இதில் எம் எஸ் வியின் பங்களிப்பு மிளிர்கிறது. எப்படி எனில் இசை என்னவோ க்ளப் நடனத்திற்காய் ஆனால் ராகம் ஏற்ற இரக்கம் இவை எல்லாம் உள்ளார்ந்த மனக்கொ திப்பை காட்டும் விதம்.

நான் ஆடும் நிலையில் இலை நான் பாடும் நிலையில் இல்லை ஆனாலும் இங்கே ஆடாமல் ஆடுகின்றேன் பாடாமல் பாடுகின்றேன்.

நூல் கொண்டு ஆடும் பொம்மை போன்ற வரிகளும் , பாரதியின் சோக போதை நடனமும் கமெரா கோணங்களும் அரிதானவை . ஆழ்ந்து கேட்கப்பட வேண்டிய பாடல்.

இணைப்பு இதோ 

       ELLORUMPAARKKA –KD MSV LRE  https://www.google.com/search?q=ellorum+parkka+song+video+song&newwindow=1&sca_esv=9b9e500fc75b63b3&sxsrf=AE3TifO9tIneaOyJQz8zivp51mhQM5IGIg%3A1748420070418&ei=5sU2aIaeGbjG4-EPoI-h-

 

ENGAL KALYNAM CVR INTERVIEW

எங்கள் கல்யாணம் பாடல் படமாக்கியதை சி வி ராஜேந்திரன் விளக்குகிகிறார் , இப்பாடல் பற்றி மேல் நாட்டவர் பார்வை இங்கே தரப்பட்டுள்ளது . ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=cjiAE7rMWRw

நன்றி  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

Oh Language – a changing Scenario -6

  Oh Language – a changing Scenario -6 In the day’s episode we are to consider words with more than just one meaning. One such is ‘RUE’. ...