Friday, July 4, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING

UNABLE TO UNDERSTAND ANYTHING

ஒன்றும் புரியவில்லை

இதே பேச்சு பல இடங்களில், மற்றும் நிலைகளில் குறிப்பாக பயில்வோரிடையே.. என்ன புரியல?  இது தந்தை

ஒண்ணும் புரியல -இது தனயன் ..

புரியல்லைனா படிதகப்பன்.    படிச்சாலும் புரியல - தனயன் ,

இப்போ என்ன செய்யணும் -தந்தை.   ட்யூஷன் வெய் -மகன் .

வெச்சா கிழிச்சுடுவ -தந்தை .

இது பல வீடுகளில் பல ஆண்டுகளாய் தமிழ் நாட்டில் உலவும் உரையாடல் . இவை தவிர தந்தை-மகன் உரையாடுவது வருடத்தில் 2 முறை -- ப்ராகிரஸ் ரிப்போர்ட் இல் கையழுத்து வாங்க முயலும் போ து கிளம்பும் புயல்.

இதெல்லாம் ஏன்?

 அடிப்படை ப்புரிதல் இன்றி அடுத்தவர் சொல்லும் விளக்கங்களை நம்பி ஏமாறுவது, பக்கத்துவீட்டு சார் சொன்னார் என்று ஏதேதோ நியாயங்கள். இவற்றை முற்றாக தவிர்க்க, வகுப்பறையில் முழு கவனம் செலுத்துங்கள் . தவறு திருத்துபவரை பைத்தியம் என்று முடிவெடுக்கும் மனோநிலையை கைவிடுங்கள். மேலும் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனையாக எந்த மொழியை யும்  புரிந்து கொள்ள முயலாதீர்கள் . இப்படித்தான் அப்படித்தான் என்பது புரிந்து கொள்ளாதவன் பிறர் முன் வைக்கும் வாதம் . அவற்றை விலக்கிவிட்டு முறையாக புரிந்து கொள்ளுங்கள். "புரியவே இல்ல" என்று புலம்பும் அவலம் தேவையே இல்லை. 

 

மனம் விட்டு சிரித்தான்= LAUGHED HEARTILY   

மனம் நிறைந்த /நிறைவானவிருந்து= HEARTY TREAT     

LITTLE MONEY =    கொஞ்சமும் பணம் இல்லை            

 A LITTLE MONEY = கொஞ்சம் பணம் இருக்கிறது

YOU HAVE LITTLE BRAIN = உனக்கு மூளை இல்லை

YOU HAVE A LITTLE BRAIN =உனக்கு கொஞ்சம்  மூளை இருக்கிறது

இதே போல் HARD  மற்றும் HARDLY  இரண்டிற்கும் பொருள் வேறுபாடு அதிகம்

HE WORKS HARD =அவன் கடினமாக உழைக்கிறான்

HE WORKS HARDLY = அவன் வேலை செய்வதே இல்லை

மற்றுமொரு பிரபலமான நாராச உளறல்

I CAN’T BE ABLE TO  என்று சிறப்பாக சொல்லிவிட்டதாக எண்ணி ஓரப்பார்வை பார்க்கும் நபரை ஓங்கி அறைந்தால் என்ன என்றே தோன்றும். 

ஆம் = CAN’T BE ABLE TO  என்று ஒரு வாசகம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில்          இயலும்  = ABLE TO , இயலாது = UNABLE TO .

ஏன் என்றால்    CAN = ABLE TO என்று பொருள் தரும் ,  என்றால் CAN’T= UNABLE TO என்று பொருள் தரும். CAN’T BE ABLE TO என்பது மடமையின்  உச்சம் . [இந்த உளரலு க்கு பெருமை வேறு -அறைந்தாலும் பாவம் இல்லை ]

தாய்மொழி பயிற்சி கொண்டு ஆங்கிலம் பேச முயன்றால் வினோதமான ஒலி தோன்றும் . உதாரணம் வட இந்தியமக்கள்  அக்ஸன்ட்  என்னும் ஒலி அழுத்தத்தை தவறாக கையாளக்காணலாம்.

 பயாலஜி  என்பதை பயலா ஜீ , சோஷியாலஜி என்பதை சோஷியலா ஜீ , பிசியாலஜி என்பதை பிசியலா ஜீ ,

மார் பாலாஜி  [MORPHOLOGY  ] மார் பலா ஜீ

இதே போல லிவர்[LIVER] என்பதை லீவர்[LEVER]  என்பார்கள் மற்றும் லிவிங் [LIVING] என்பதை லீவிங்[LEAVING]  என்பர்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...