Tuesday, July 22, 2025

LET US PERCEIVE THE SONG -31

 LET US PERCEIVE THE SONG -31          

பாடலை உணர்வோம் -31 

ஆயிரம் பெண்மை மலரட்டுமே [வாழ்க்கைப்படகு -1965]  கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , சுசீலா

1965 ல் இப்படி ஓர் இசைக்களஞ்சியமா

ஆம் -1965 ல் தான் இசையில் கோலோச்சிக்கொண்டிருந்த விஸ்வநாதன் -ராமமூர்த்தி , முதல் முதலாக ஜெமினி நிறுவனத்தில் கால் பதித்த ஆண்டு -படம் வாழ்க்கைப்படகு .

கவியரசரின் கீதம் , வி -ரா வின் ஆதிக்க இசை.. இசையில் வடஇந்திய சாயல் தெரிந்தால் -படம் வட இந்திய சூழலில்  நடைபெற்ற கதை..

எந்த சூழலுக்கும் இசை வழங்கும் பேராற்றல் கொண்ட மெல்லிசை மன்னர்கள் இசையால் படத்தை தூக்கிப்பிடித்தனர் என்றால் மிகை அல்ல. இசையின் நளினம் அப்படி.. ஆலாபனைகளும் ஜோடனைகளும் அதிகம் தான். எனினும் கேட்கும்போது ஒரு ஆனந்தம் தரும் வீச்சு பாடலில் விரவிக்கிடக்க காணலாம்.     

முதலில் மெல்ல பயிற்சியாக துவங்கி அதுவே காட்சிக்குள் பிரவேசிப்பதாக அமைந்த காட்சி

இயக்குனராக முத்துராமன் பயிற்சி தர, பெண்கள் பாடி நடனம் புரிய மெல்ல பாடல் கம்பீர இசையில் துவங்குகிறது

முகப்பிசையிலேயே பாடலின் தரம் விளங்குகிறது. தொடர்ந்து இயங்கும் கருவிகளும் , துரத்தி துரத்தி இழையும் வயலின்களும் -கேட்டு ரசிக்கத்தான் இயலும் .

பல்லவி துவங்கியதும் தொற்றிக்கொள்ளும் ராக நளினம். அடுத்தடுத்து ஆண் -பெண் கௌரவ நட்பின் ஆழம் பற்றிப்பேசும் பாடல்.

அதன் முத்தாய்ப்பாக 'காதல் நாயகன் ஒரு பாதி , காதலி தானும் மறுபாதி -இருமனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல்' என்று முழங்கும் பெண் மனம் . அதே போல் 'ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்' என்று சூளுரைக்க , கோமாளி ராஜா செண்டை மேள ம் முழங்க  வரும் காட்சி

அப்போது கிளம்பும் தாள ஒலிகளை  கவனியுங்கள்  - காட்சியின் தன்மை மாறி இருப்பதை உணர்த்தும் இடம் .

மீண்டும் சிலிர்த்து எழும் பெண் மனம் 

"மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் , வாள்முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும் உடலன்றி உள்ளம் உன்னைசேராது என்று கம்பீர ஆலாபனை செய்து --

"தவறு
செய்யாதே அருகில் வராதே நில் நில் நில்" என்று               ஆணையி ட்டுத்தடுக்கும் கம்பீரம்  என்று பயணித்து மீண்டும் 1000 பெண்மை என சரணத்தில் படர்ந்து அடங்கும் பாடல்

பெண்குரல்களே எனினும் கம்பீரம் குன்றாத பாடல். சிறப்பான கவி நயம், வசீகரிக்கும் ஆலாபனை  , வெள்ளெமெனப்பாய்ந்த இசை கேட்டு மகிழ  இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=2fnEp2K9gUs 1000 penmai –V P , KD VR PS

நன்றி அன்பன் ராமன் 

 

1 comment:

NEEM -2 [ Azadirachta indica ]

NEEM -2   [ Azadirachta indica ] If one were to take recourse to proverbial narration, undoubtedly, the neem trees [at least the oldest a...