Wednesday, July 23, 2025

DIRECTOR SRIDHAR - 9

 DIRECTOR SRIDHAR - 9         

 இயக்குனர் ஸ்ரீதர்-9        

ஒரு ராஜா ராணியிடம் [சிவந்த மண் -1969] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ், சுசீலா

1969 ல் தமிழில் ஒரு வண்ணப்படம் , ஐரோப்பிய நாடுகளில் [இணையாக அதே இடங்களில் ஹிந்தியிலும்] படப்பிடிப்பு -ஸ்ரீதர் என்ற துணிச்சல் காரருக்கே சாத்தியம். படத்தின் பாடல்கள் அனைத்தும் மெருகு குலையாத இளமையும் இனிமையும் கொண்டவை.

பாடல் வெவ்வேறு இடங்களில் [நாடுகளில்]என்று ஸ்ரீதர் சொல்லிவிட்டார் போலும் , எம் எஸ் வி இந்த ஒரே பாடலுக்கு ஐந்து வித டெம்போ எனப்படும்                      விறுவிறு ப்பில் பாடலை அமைத்துள்ளார். அதுவும் அவை ஒவ்வொன்றும் அடுத்ததுத்து தொடர கேட்பவருக்கு பரவசம் தரும்.. அது மட்டுமல்ல, அதற்காக எம் எஸ்வி களமிறங்கிய இசைக்கருவிகளின் வரிசையும் தொகுப்பும் வேறு பாடல்களில் கிடைக்காது. ஆகவே ஒரு பாடல் எங்கே படமாக்கப்போகின்றனர்   என்ற தகவல் இருந்தால் அதற்கேற்ற கருவிகள் மற்றும் இசை சாயல்களை நேர்த்தியாக அமைத்து , அந்த ஊர் பகுதி இசை சேரும் போது ஒரு கள யதார்த்தம் தென்படும். இப்பாடலில் ஐரோப்பா வகை இசைமேலோங்க வேறு பாடல்களில் எகிப்திய / மெக்சிகன் வகை இசைக்கோர்வைகள் என வலம் வந்த நாட்கள் பசுமையானவை. எண்ணற்ற சுற்றுலாத்தலங்களை பாடல் நெடுகிலும் காணலாம் . கேட்டு, கண்டு ரசிக இணைப்பு இதோ.  

SIVANDHA MAN  ORU RAAJA KD MSV TMS PS

https://www.youtube.com/watch?v=aI119bFa4tU

பட்டத்து ராணி [சிவந்த மண் -1969] கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் , எல் ஆர் ஈஸ்வரி

நான் பலமுறை எல் ஆர் ஈஸ்வரி , பாடகிகளில் ஒரு ராட்ஷசி என குறிப்பிட்டு வந்துள்ளேன். அவ்வகையில் இந்தப்பாடலில் எல் ஆர் ஈஸ்வரியின் பரிமாணம் பல மடங்கு உயர்ந்து மெகா ராட்ஷசி என்ற வடிவம் அடைந்தது எவராலும் மறுக்க ஒண்ணாதது. ஏனெனில் இப்பாடல் பல வித பரிமாணங்கள் கொண்டு எகிப்திய இசை வடிவ அமைப்பும் கருவிகளின் ஆதிக்கமும் , இசை நடையும் போக்கும் கொண்டு உலா வந்த இசை பிரம்மாண்டம். ஆர்கெஸ்டரேஷன் என்னும் கட்டமைப்பில் வெகு சில பாடல்களே பெரிதும் மக்களைக்கவர்ந்தவை. அவ்வகையில் இது தனக்குவமை இல்லா தனி ஆக்கம் எனில் மிகை அல்ல. இதில் இசை மற்றும் கருவிகளின் உன்னதம் ஒரு புறம் எனில் , மனித முயற்சிகளாக வெடித்துச்சிதறிய ஈஸ்வரியின் குரலும் . சவுக்கு அடியின் தாக்கலும்   அதன் தாக்கமும் இப்பாடலில் நேர்த்தியாக பின்னிப்பிணைந்த ஒருங்கிணைப்பு பிறிதொருமுறை களப்படுத்த இயலுமா எனில் கேர்ள்விக்குறியே.

சவுக்கடி தான் பல முக்கிய திருப்பங்களுக்கு அளவு கோல் . இத்துணை சவுக்கடிகளுக்குப்பின் அரங்கம் இருள் மயமாகவேண்டும், இருளில் திவான் சுடப்படவேண்டும்  என்று கணக்கிட்டு குழு செயல் பட பாடல் பயணிக்க வேண்டும் . இசை அமைப்பாளனின் கவலையை கவனியுங்கள் குறிப்பிட்ட கால அளவிற்குள் கடைசி சவுக்கு ஒலிக்க டுமீல் என்று ஒலிக்க வேண்டும் ஒன்று சவுக்கு மற்றது துப்பாக்கி தோட்டா , வெவ்வேறு வகை ஒலிகள்.

துப்பாக்கி தோட்டா ஒலி இசை அமைப்போருக்கு அன்றாட செயல்களில் ஒன்று.

இப்போது புதிய சிக்கல் ஆம் சவுக்கடியின் ஒலி , குறிப்பிட்ட தருணத்தில் பாடலில் ஒலிக்க வேண்டும். சரி என்ன செய்யலாம்.  என்னென்னவோ செய்தார்கள்.. தலையணை மீது குச்சியால் ஓங்கி அடித்தார்கள், கைககளால் படீரென்று அடித்து பார்த்தனர். , தொடையில் ஓங்கி அறைந்து கொண்டு ஒலி  எழுப்பிப்பார்த்தனர்  . ஏதேதோ ஒலி  கிளம்பியதே  ஒழிய   சவுக்கு என்று தோன்றவில்லை.. என்ன செய்யலாம்?

[சங்கர்] கணேஷ் வெளியே சென்று வடபழனி சாலையில் நடக்க பட்டாசுக்கடை தென்பட, திடீரென்று ஒரு ஐடியா. தீபாவளி கேப் சில பெட்டிகளை வாங்கிப்போனார். ஸ்டுடியோவில் 5-6 கேப்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து சுத்தியலால் ஓங்கி கேப்பின் மீது அடிக்க  - மைக்கில் துல்லியமாக சாட்டை ஒலி  கேட்க , இசைக்குழுவினருக்கு குதூகலம். பாடலில் சவுக்கு ஒலி எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். அதை சரியான இடத்தில் செயல் படுத்திய [சங்கர்]கணேஷ்  பங்களிப்பு முக்கியமானது. அதை விட பெரும் பங்களிப்பு எல் ஆர் ஈஸ்வரி மூச்சுத்திணறி என்று திக்கிப்போய் உடனே பாடுயுள்ளாரே அது எளிதல்ல , ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் , இரண்டையும் செய்ய முடியாது என்று ஜகா வாங்கினார் என்றால் பாருங்கள்.அனைத்தையும் ரசிக்க இணைப்பு இதோ

PATTATHTHU RAANI  KD MSV LRE

https://www.youtube.com/watch?v=vBiirfYyDro

இப்பாடலின் வேறு பல சுவாரஸ்யங்களை கேட்டு ரசிக்க இணைப்பு இதோ  .

 LR Eswari | பட்டத்து ராணி பார்க்கும் பார்வை... எல்ஆர். ஈஸ்வரி

OH CINEMA

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

DIRECTOR SRIDHAR - 9

  DIRECTOR SRIDHAR - 9             இயக்குனர் ஸ்ரீதர்-9          ஒரு ராஜா ராணியிடம் [ சிவந்த மண் -1969] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்...