Saturday, July 19, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING -2

 UNABLE TO UNDERSTAND ANYTHING -2

                                     POSTING NO. 1400

ஒன்றும் புரியவில்லை -2

LEARNING LANGUAGES [ BASICS]

மொழிகள் அறிதல் [அடிப்படை]

மொழியறிதல் என்பது இப்போது உலகளாவிய தேவையாக உருவெடுத்து வருகிறது. விவரம் புரியாமல் அல்லது புரிந்துகொள்ள மனமில்லாமல் [அனைத்தும் அறிந்தோர் போல] என் மொழி மூத்தது -நீ யார் எனக்கு சொல்ல? என்ற விதண்டா வாதங்கள் பரவி வருவதை அறிவோம்..

 இப்போது ஒரு சந்தேகம் - அவ்வளவு பழமையான மொழி உலகெங்கணும் பரவாமல் இருக்க, மிக பிந்தைய ஆங்கிலமும் பிரெஞ்சும் கோலோச்சுவதெப்படி?  . இதை பற்றி பேச முனைந்தால் விவாதம் இல்லாமலே ஏதேதோ விளக்கம் தருவார்கள்.

. உண்மை என்ன எனில் பிற மொழிகள் கற்க வெவ்வேறு ஒலிகளை தெளிவாக புரித்து உணர்த்தும் உச்சரிப்பு முறைகளையும் இலக்கண ரீதியாக தாய் மொழி, பிற அண்டை மொழிகளிலிருந்து எவ்வாறு வேறு படுகிறது என்ற தெளிவும் இருப்பின் பிற / மொழிகளை பயிலுதல் எளிது. .

ஐரோப்பிய மொழிகளில் வாக்கிய அமைப்பு இந்திய மொழி வழக்குகளில் இருந்து மிகவும் விலகி நிற்பது. இவற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ளாமல், மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதில் வெற்றி அடைய வாய்ப்பில்லை.

எனவே, மொழியறிய முற்படும் எவரும் சில அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்வது அவசியம். அவற்றில் முக்கியமானது, பெயர்ச்சொல், வினைச்சொல், காலம் குறித்த தெளிவு -நிகழ், இறந்த மற்றும் எதிர்கால நிலைகளை வினைச்சொல்லில் தெளிவுபடுத்தும் முறைகளை நன்கு அறிதல்..

நமது மொழி அடிப்படையில்,   பிறமொழிகளின் சொல்லாடல் வகைகளை   புரிந்து கொள்ள முயலுவதை விட நமது மொழி வழக்குகளில் இருந்து பிற எந்த மொழியும் எவ்வாறு வேறுபடுகிறது என்று வித்தியாசங்களை கற்றுக்கொண்டால் பெருமளவு குழப்பம் தவிர்க்கப்படும். அதாவது நாம் அறிந்த மொழியும் -அறியமுயலும் மொழியும் காட்டும் வேறுபாடும் எவை எவை என்ற அணுகுமுறை  நல்ல உதவி புரியும்.

எனவே , உயர்ந்தது  பழமையானது போன்ற உண்மைகளை ஏற்கும் அதே நேரத்தில் , பிற மொழிஅமைப்புகளை புரிந்து கொண்டால் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும் .

அதாவது புரிந்த ஒன்றிலிருந்து புதிய ஒன்றை அறிய முற்படுவது என்ற அடிப்படை மொழியறிதலுக்கு  உதவும்.

உங்களுக்கு தெரியுமா?            தமிழ் நாட்டில் 1960, 70 களில் ஆங்கில மீடிய கல்வி இருந்ததில்லை. . 99.9% தமிழ் வழிக்கல்வியே.  6 ம் வகுப்பில் தான் ஆங்கில எழுத்துகள் [ABCD] அறிமுகம்  .  

அன்றைய பள்ளிக்கல்வி 11ம் வகுப்புடன் நிறைவடைவது.

ஆனால் வெறும் 6 ஆண்டுகள் ஆங்கிலம் பயின்ற அன்றைய பள்ளிக்கல்வியின் பயனாக பலர் சரளமாக ஆங்கிலமொழியை கையாண்டனர்.

பின்னர் வந்த அணுகுமுறையி ல் ஆங்கில மீடிய கல்வி நோய் போல் பரவி பட்டி தொட்டியெங்கும் ஆங்கிலக்கல்வி முறை -அதாவது PRE -KG முதல் +2 வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆங்கிலமும் ஆங்கில வழிக்கல்வியும் பெற்ற பின்னும் கூட பலர் உளறுவதையும் தடுமாறுவதையும் காணலாம்..  இந்த நிலை ஏன் ?

அன்றைய அணுகு முறையில் தாய் மொழி 5 ஆண்டுகள் பயின்று பின்னர் 6ம் வகுப்பில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் அறிவைக்கொண்டு ஆங்கிலம் பயின்றனர்..புரிதல் எளிதாயிற்று.

இன்றைய நிலை என்ன?

தமிழோ தாய் மொழியோ சரியாக அறியாத வயதிலேயே , தாய் மொழி, ஆங்கிலம் வேறு மொழி என்று பல மொழிகளை கற்க முயலும்போது  அனைத்து மொழிகளுமே -அறியாதக மனம் எதிலிருந்து எதைப் புரிந்து கொள்ளும் ?  அதனால் தான் 15 ஆண்டு ஆங்கில பரிச்சயம்  வெறும் பரிச்சய நிலையிலேயே உழல்வதைக் காண்கிறோம்..

ஒன்றிலிருந்து ஒன்றை அறிதல் எளிது  என்பதே எனது புரிதல். பிழை எனில் மன்னித்தருள்வீர்.                                                                 அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MSV PROFILE 7

  MSV PROFILE 7 MSV’s DIMENSIONS திரு எம் எஸ் வி யின் பரிமாணங்கள் https://www.youtube.com/watch?v=0T9x4XFntaY msv https://ww...