GOOD- BUT LESS KNOWN -3
நல்ல ஆனால் அறியப்படாதவை-3
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
[ரகசிய போலீஸ் 115] கண்ணதாசன் எம் எஸ் வி சுசீலா
அற்புதமான இசை தொகுப்புகக்ள்
இந்துஸ்தானி இசையின் சாயல் அதிகம் ஆயினும் கர்னாடக இசையின் ஆலாபனை, இசைத்தொகுப்பு என
பயணித்த பாடல். தாள நடைகள் பாடலின் சிறப்பு.
நடிகை நிர்மலாவின் நடனம் ஒருபுறம் ,எம் ஜி ஆர் ஜெயலலிதாவின் ஊடல்கள் ஒருபுறம் என பல
சிறப்புகள் கொண்ட பாடல் . இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=3hLCRm7_GQc&t=32s unnai enni
ragasiya police 115 vali msv ps
கல்யாண பந்தல் அலங்காரம் [தட்டுங்கள் திறக்கப்படும் -1966]கண்ணதாசன் , எம் எஸ் வி, பி சுசீலா
மிகவும் பாராட்டுப்பெற்ற பாட.ல் கவிநயமும் இசை நயமும் வெகு நேர்த்தியாக கை
கோர்த்த
இப்பாடல்
அந்நாளில்
வெகு
பிரபலம்.
காலப்போக்கில்
மெல்ல
மங்கியது.
ஆயினும்
நல்ல
பாடல்.
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=GY7NYfcalH8 kalyaana pandhal thattungal thirakkappadum KD MSV PS 1966
தித்திப்பது-- எது
[தட்டுங்கள் திறக்கப்படும் -1966] கண்ணதாசன் , எம் எஸ் வி , சுசீலா
பாடலின் சொல்லும் இசையும் உச்சரிப்பும் இது ஒரு கவர்ச்சிப்பாடல் என்று பறை சாற்ற காணலாம். வியப்பு யாதெனில் சுசீலா , எல் ஆர் ஈஸ்வரிக்கு போட்டியாகக்கிளம்பிவிட்டாரோ என்று திகைக்க வைக்கும் விசேஷ முயற்சி., உச்சரிப்பு , துடிப்பான இசை மற்றும் கே ஆர் விஜயாவின் நடனம் உடை என பல்நோக்கு கவர்ச்சி அம்சங்கள் பாடலின் தனி அமைப்பு. கேட்டு மகிழ இணைப்பு இதோ.
https://www.youtube.com/watch?v=Zo-o0QLX-JA
SUSEELA –THITHTHIPPADHU
கண்மணி பப்பா [தட்டுங்கள் திறக்கப்படும் -1966 ] கண்ணதாசன் , எம் எஸ் வி, ஜே பி சந்திரபாபு
மேற்கத்திய பாணி
இசையில்
அருமையான
தத்துவப்பாடல்.
குழந்தைகள்
நடுவில்
சந்திரபாபு
பாடி
குதூகலித்த
காட்சி,.
என்று
கேட்டாலும்
சுவை
குன்றாத
இசை
, பாபுவின்
குரல்
மற்றும்
நடனம்
, கருத்தாழம்
என
பல
பரிமாணங்களைக்கொண்ட பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு.
https://www.youtube.com/watch?v=7HOiunYGAZ4 kanmani papa KD MSV JP C
வேறு பாடல்களுடன் பின்னர் சந்திப்போம்
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment