Saturday, September 20, 2025

APPROPRIATE BOOKS

 APPROPRIATE  BOOKS

பொருத்தமான/ சரியான புத்தகங்கள்

அச்சில் வந்ததெல்லாம் புத்தகம் அல்ல என்பதை மாணவர்களும் புதிதாக ஆசிரியப்பணிக்கு வந்து போதித்தல் தொழிலை மேற்கொள்வோரும் நன்றாக நினைவில் கொள்ளுங்கள் என்பதே எனது ஆழ்ந்த வேண்டுகோள். பலரும் நூலாசிரியர் என்ற நிலைக்கு உயர முயல்வது இயல்பே .

ஆனால் வெகு தெளிவான புரிதல் உள்ளவர்கள் நூல் எழுத தயங்குவர். ஏன் எனில், எவ்வளவு எழுதினாலும் குறை/ பற் றா க்குறை  இரண்டும் தென்படும். ஏதோ ஒரு நிலையில் எழுதியுள்ளேன் என்றுதான் சொல்வார்கள். இந்த புரிதல் இன்றி நூல் எழுத முயன்றால் நிச்சயம் அவமானத்தை சந்திக்க நேரிடும்.

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த துறை தான் நூல் எழுதும் பணி.

இவற்றை அலட்சியம் செய்து ஏதோ ஒரு புத்தகம் என்று ஒன்று நம் பெயரில் வந்தால் போதும் என்று அரைகுறை முயற்சிகளில் விளைந்த நூல்கள் ஏராளம் . நூலின் தரம் உணர்ந்து தேர்வு செய்ய ஒருவன் அந்த பாடப்பகுதியில் ஆழ்ந்த புரிதலும் அனுபவமும் கொண்டிருத்தல் வேண்டும்.. இல்லையேல், தவறான தேர்வு செய்துவிட்டு பின்னர் வருந்த நேரிடும்.  

அப்படி எனில், நல்ல புத்தகம் என்று எதை சொல்கிறோம் என்ற வினா எழும்.

ஆசிரியப்பணியில் பெரும் பெயர் பெற்ற ஆசான்கள்- பெருமளவிற்கு நல்ல ஆக்கங்களை தருவர். பொருள் ஈட்டும் நோக்கில் எழுதும் எவரும், முறையான அணுகுமுறைகளைக்கடைப்பிடிப்பதில்லை என்பது வேதனைக்குரிய தகவல். 

சரி,  நல்ல நூலுக்கு இருக்கவேண்டிய பண்புகள் யாவை.?

எடுத்துக்கொண்ட பகுதிக்கு உரிய முக்கிய  அங்கங்கங்கள் இடம் பெற்றுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.

முறையான விளக்கப்படங்கள் [ILLUSTRATION] உள வா என்று கவனியுங்கள். அவை இந்த நூலுக்கு என்றே வரையப்பட்டவையா?   அன்றி வேறெங்கிருந்தோ பிரதி எடுக்கப்பட்டதா என்று கவனியுங்கள். பின்னவை தரமான எழுத்துக்கு சொந்தக்காரர்கள் தவிர்க்க விரும்புவர்.

சில சூழல்களில் குறிப்பிட்ட ILLUSTRATION மட்டுமே பிரதியெடுத்து பயன்படுத்த வேண்டி வரும். அது போல் நிகழ்ந்தால் அந்த விளக்கப்படத்தின் ஆசிரியருக்கோ/ குழுவுக்கோ நன்றி அறிவிப்பாக "COURTESY " என்று அறிவிப்பு செய்ய வேண்டும்.

தரமான நூலாசிரியர்கள் நிச்சயம் 'COURTESY " அறிவிப்பார்கள்.

சிறப்பான நூல் எனில் மேற்கோள்கள் அவற்றின்மூலம்குறித்த குறிப்புகள் இருக்கும். இவை இருப்பின் அது நல்ல நூல் என்று கொள்ளலாம்.

பொருளடக்கம் மற்றும் INDEX என்னும் தகவல் குறிப்பு பின் பகுதியில் அமையப்பெற்ற நூல்கள் பெரும்பாலும் நல்ல தரமான ஆக்கங்களே என உணரலாம்

மேலும் பல முக்கிய அடையாளங்கள் கொண்டு நூலின் தரம் புரிந்துகொள்ள இயலும். அவை குறித்து பின்னர் விரிவாக அலசலாம்

தொடரும்

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

KALI

KALI காளி அட , நவராத்ரி காலத்தில் காளி , துர்க்கை என்று கிளம்புகிறாயே என்போர் , இது இந்திய பாதுகாப்புத்துறையின் மற்றுமோர் அவ...