Sunday, September 7, 2025

ATAGS --- ANOTHER DEMON

 ATAGS   ANOTHER DEMON  105 mm X 52=[9m]        

ATAGS என்னும் மற்றுமோர் அசுரன் 

மற்றுமோர் பெருமைகொள்ளத்தக்க இந்திய தயாரிப்பு -இந்த ATAGS வகை பீரங்கி. அதாவது இது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு /வடிவமைகப்பு என்று கூட சொல்லலாம் .. இதன் சிறப்பு -தானியங்கி திறனும் இழுத்து சென்று பயன்படுத்தக்கூடிய எளிமையும் என்பதையே இதன் பெயராக அமைத்துள்ளனர்.

அது

AUTOMATIC TOWED ARTILLERY GUN SYSTEM [ATAGS ] என்பது.

இதன் குண்டு பீய்ச்சும் குழல் 105 மி மி சுற்றளவும் [சுமார் 6 1/4 அங்குலம்]  மற்றும் 9 மீட்டர் நீளமும் கொண்டது. . எந்த கோணத்திலும் 90 டிகிரி கோணம் உள்பட எதிலும் சிறப்பாக செயல்படும் .

வலிமையான சக்கரங்களால் எங்குவேண்டுமானாலும் இழுத்து சென்று போர்க்களத்தில்     2 நிமிடங்களில்  நிறுவி வைத்து எதிரி இலக்குகளை தாக்கலாம்

இன்றைய நிலையில் இந்த குண்டுகள் 48 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தாக்கும் திறமையும் துல்லியமும் கொண்டது.

எதிர்காலத்தில் 100-120 கிலோமீட்டர் வரை பாயக்கூடிய பீரங்கிவகை ஆயுதங்கள் உருவாக்கப்ப்பட்டு வருகின்றன. இதில் பெருமைமிக்க நிலை யாதெனில் இதுபோன்ற அமெரிக்க பீரங்கி குண்டு வீசும் திறன் 40 கிலோமீட்டர் அளவிலேயே உள்ளது.

மற்றுமோர் சிறப்பு பொதுவாக பீரங்கிகள் ஹைடிராலிக் உந்துதல் மூலம் குண்டு வீசும் , ஆனால் இது எலெக்ட்ரானிக் நுணுக்கத்தில் இயங்குவது . மட்டுமல்ல இதன் வழிநடத்தும் [NAVIGATION தொழில் நுட்பம் ] எலெக்ட்ரானிக்  முறையில் இயங்குவது.  இழுத்து செல்லப்படும் செயல்தவிர ஏனைய அனைத்தும் எலெக்ட்ரானிக் வடிவமைப்பு என்பதால் வேகமும் துல்லியமும் மிக அதிகம்

நிமிடத்திற்கு 3 குண்டுகளை பிற பிரங்கி கள்  வீசும் நிலையில், இந்திய தயாரிப்பு நிமிடத்திற்கு 5 குண்டுகள் என்ற வேகத்தில் செயல் படும் . இது தொடர் தாக்குதல் புரியும் என்று பொருள் கொள்ளலாம் . பிற தயாரிப்புகளுக்கு விலைஅதிகம் இதன் விலை யும் குறைவு திறனும் அதிகம்  . எனவே போர்தளவாட சந்தையில் ATAGS ஒரு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதன் துல்லியம் ஒரு மிகப்பெரிய சாதகம் மற்றும் எலெக்ட்ரானிக் நுணுக்கத்தின் உதவியால் , பகல் இரவு, பனி, மழை , பனிப்பொழிவு , காற்று என எந்த பருவநிலையிலும்  திறன் குன்றாமல் தாக்கும். மட்டுமல்ல, மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் முதல் +50 டிகிரி வெப்பத்திலும் அசராமல் இயங்கி பலமான தாக்குதல் தொடுக்கும்..

இது இவ்வளவு செயல் திறன் கொண்டு வடிவமைக்க மேக் இன்  இந்தியா  திட்டம் பேருதவி புரிந்து, பல நிறுவனங்கள் முறையான பாகங்களை வடிவமைத்து பெரும் பெருமையை ஈட்டியுள்ளனர் இந்திய பாதுகாப்பு துறையினர்.

இதன் சிறப்பு உலகை மிரள வைத்துள்ளது  இதனை வாங்க பல நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. இதே திறன் கொண்ட எடை குறைந்த பீரங்கிகளை உருவாக்க இரும்பிற்கு பதில் டைட்டானியம் உலோகத்தை கொண்டு பீரங்கிகள் வடிவமைப்புக்கான முயற்சிகள் நடந்தேறி வருகின்றன என்ற தகவல் உண்டு.. டைட்டானியம் பீரங்கிகஃளை ஹெலிகொப்டர் உதவியில் தூக்கி சென்று விடலாம் என்பது மற்றுமோர் ஆர்வம் இதன் வேறு பல முக்கிய தகவல்களை திரு ஆசிர் சாமுவேல் வழங்குகிறார். கேட்டு புரிந்து கொள்ள இணைப்பு கீழே  .

Indian Artillery (ATAGS) sets world record, surpasses USA and Russia.#india #atags #artillery #army

 

************************************************************

No comments:

Post a Comment

BOOK CHOICE -3

  BOOK CHOICE -3 நூல் தேர்வு -3 ISBN – EXPLAIN இப்படி ஒரு வினா சென்ற பதிவின் விளைவாக வாசகர் ஒருவர் எழுப்பியிருந்தார் INTERN...