LET US PERCEIVE THE SONG -38
பாடலை உணர்வோம் -38
மலருக்கு தென்றல்
பகையானால்
[ எங்க
வீட்டு
பிள்ளை
-1965] ஆலங்குடி
சோமு,
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
,குரல்கள்
பி
சுசீலா,
எல்
ஆர்
ஈஸ்வரி
1960 களில் தமிழ் சினிமாவில் திருக்குறள் இசை இசை வெகு பிரபலம் அதிலும் 2 பெண்குரலில் அமைந்த பாடல்கள் அதிகம்.அவற்றில் பல சோகம் , காதல் கைகூடாமை , ஒருவனுக்கு போட்டியிடும் இருவர் அல்லது பங்குகேட்கும் இன்னொருத்தி போன்ற கதைக்களங்கள். அவற்றிற்கு பாடல் புனைதல் சற்று நுணுக்கமானது.
எதிர்வாதங்கள்
அல்லது
தர்க்க
வலிமை
வெளிப்பட
எழுதவேண்டும்.
அவை
பெரும்பாலும்
வெற்றிப்பாடல்களே.
அவ்வகையில்
அன்றைய
இசையமைப்பாளர்கள்
பெரும்
ஆளுமைகள்
என்பதை
இவ்வகைப்பாடல்களைக்கொண்டே
நிறுவிடலாம்.
இப்பாடலின் வலிமை அதன் இசையும் குரல்களில் அமைந்த சோகமிகு பாவமும். விஜயா வாஹினியின் [நாகி ரெட்டி -சக்ரபாணி ] வண்ணப்படம் . விஸ்வநாதன் ராமமூர்த்தியின் உன்னத இசை .
இரவுக்காட்சியில் வின்சென்ட் காட்டிய நளினம் இவ்வனைத்தையும் இந்த ஒற்றைப்பாடலில் அறியலாம் .
அவ்வனைத்தையும் விட அன்றைய மரபில் "தொகையறா" வில் துவங்கிய பாடல். தொகையறாவில் [நாம் சமீபத்தில் விவாதித்த ..” காதல் சிறகை காற்றினில் விரித்து” பாடலின் அமைப்பு சாயல் தென்படக்காணலாம்]
சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில் இசை அ மைப்பின் வலிமை இன்றளவும் மறவாத நிலையில் நாம் இருக்கிறோம். இப்பாடலில் நிறைய வயலின்களும் போங்கோவும் சோகத்தை சுமக்கும் கருவிகள் . அதை பாடல் நெடுகிலும் உணரலாம். ஒவ்வொருமுறை கேட்கும் போதும் சலிப்பு தோன்றாத இசை ஆதிக்கம் , குரல் பிரயோகம் இவை நம்மை ஆட்கொள்வதை உணரலாம் .
ஆழ்ந்து
கேளுங்கள்
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=8rQffVyISYs malarukku thendral
https://www.youtube.com/watch?v=onqrwIP1HV8&list=RDonqrwIP1HV8&start_radio=1 QFR MALARUKKU THENRAL ENGA VEETTU -1965 ALANGUDI , VR PS LRE
No comments:
Post a Comment