GOOD- BUT LESS KNOWN -9
நல்ல ஆனால் அறியப்படாதவை-9
கனவில் நடந்ததோ [அனுபவம் புதுமை -1968 ] கண்ணதாசன் எம் எ ஸ் வி , பி சுசீலா பி பி ஸ்ரீனிவாஸ்
இது போல் ஒரு பாடல் தமிழ் திரையில் இது ஒன்றே. பாடல் சொல்லிலும், இசையிலும், இடை இசையின் வேகத்திலும், கருவிகளின் தொகுப்பிலும் தனித்துவம் நிறைந்த பாடல். பாடலின் ட்யூன் நிதானமாக மிதக்க, இடை இசையோ வேகம் கொண்டு துடிக்க, பியானோ, ட்ரம்பெட் , அக்கார்டியன் ஒலிகள் நேர்த்தியான கலவையாக நீந்தி வர ராகம் மட்டும் காற்றில் மிதக்கும் உணர்வோடு.
இசையின் தன்மையை உணர்ந்த இயக்குனர் [சி வி ராஜேந்திரன் ] சிறப்பான காட்சி அமைப்பை உருவாக்கி பாடலின் பரிமாணத்தை திரையில் மேம்படச்செய்துள்ளார்.
இந்த பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் பி என் சுந்தரம் வெளிப்படுத்தியுள்ள தொழில் நுட்பம் அலாதியானது. மென் நகர்வு [slow motion ] கருப்பு வெள்ளையில்
1968 களில்
அதுவும்
எப்படி?,
நகரும்
நட்சத்திரங்கள், . கலைஞர்கள் காற்றில் மிதக்க , திரைசீலைகள் நளினமாக அலைபோல் சிலிர்த்து அசைய கமெராவின் விளையாட்டு வெகு சிறப்பு. இது தான் தொழிலில் [ மதி ]நுட்பம் . நன்கு ரசியுங்கள்
இணைப்பு இதோ
Kanavil
nadandhadho kalyaana oorvalam https://www.youtube.com/watch?v=5CdTTqKkVJ8
மான் என்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் [அனுபவி ராஜா அனுபவி- 1967] கண்ணதாசன் விஸ்வநாதன் சுசீலா
பாடலி ல் சுவையும் அதிகம் நகைச்சுவையும் அதிகம்
எம் எஸ் வி யை ஏன் மெல்லிசை
மன்னர் என்கிறோம்? பாடலில் சொல்லுக்கு ட்யூன் அமைப்பில் எவ்வளவு விந்தை புரிந்துள்ளார்.
இளமை துடிப்பு\ வெளிப்பட வைத்த ஆஹா ஹாஹா போன்ற ஒலிகள் மட்டுமின்றி அவ்வப்போது ட்யூன்
ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே அமைந்து துடிப்பு மேலிடவைத்த நகாசு . அதே வேளையில்
அழகாக என்று பாடும் போது விசேஷ கவனம் அழகாகவே
வெளிப்பட்டுள்ளது. பாடல் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது. அன்றைய சத்யசாயி நகரில் .
ஒரு புறம் திருப்பரங்குன்ற மலை , பசுமலை , தனி வீடுகள் [பங்களாக்கள்] , ஆளில்லா சாலை
, மற்றும் மீனாக்ஷி அம்மன் கோயிலின் மேற்கு வாயில் என்று வேறு படங்களில் காணாத காட்சிகள்.
மொட்டை மாடியில் பாடும் ராஜஸ்ரீ /ஜெயபாரதி, தெருவில் சர்வ சாதாரணமாக நாகேஷும், முத்துராமனும்
பட்டம் விடுகிறார்கள். விளம்பரமே இல்லமால் ஷூட்டிங்கை முடித்துள்ளனர் என்பது காட்சியில்
வேற்று மனிதர்களே இல்லை என்பதில் இருந்து உணர முடிகிறது.
என்று கேட்டாலும் குன்றாத
இளமை பாடலின் சிறப்பு. கேட்டு மகிழ இணைப்பு
MAN
ENRU PENNUKKORU https://www.youtube.com/watch?v=2NIPMHNPwmg
**************************************************************************
No comments:
Post a Comment