Saturday, October 4, 2025

BOOK CHOICE -2

 BOOK CHOICE -2

நூல் தேர்வு -2

Periodic Revision [Edition]  / Reprint frequency

புதிய பதிப்பு / புதிய அச்சு

கல்விக்கென எழுதப்படும்  நூல்கள் முறையான புதிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். அறிவியல் [Science] வணிக நூல்கள் [Commercial law /Taxation] போன்றவை ஆண்டுதோறும் மாறக்கூடியவை. எனவே, புத்தம் புதிய நூல்கள் மட்டுமே உதவும்.

எனவே, நூல் தேர்வு என்பது சில அடிப்படை தகவல்களை நன்கு புரிந்துகொண்ட பின்னரே நடை பெறவேண்டும்.

அவை நூலின் தலைப்பு [Title of the book ] சில தலைப்புகளே நூலின் புதிய அமைப்பை விளக்கும். உதாரணம் LATEST GUIDE LINES / CONTEMPORARY PRINCIPLES, LAWS FOR THE CURRENT YEAR 2025-26] என்பன. ஆனால் அறிவியல் பாட நூல்களில் பாடப்பகுதிமட்டுமே தலைப்பாக இருக்கும், CHEMISTRY, Stereochemistry  ,Biochemistry , பிஸிக்கல் கெமிஸ்ட்ரி, Atomic Physics, Thermodynamics , Biotechnology , ஜெனெடிக் இன்ஜினியரிங் ,Medicinal plants ,      Physiology என்பன.

இவை எப்போது வெளியிடப்பட்டன என்றறிய வெளியீட்டு ஆண்டு [Year of publication] முகப்பு அட்டையின் உள்ளே இருக்கும் முதல் பக்கத்தில் பின்புறம் அச்சிடப்பட்டிருக்கும். அவை இரண்டு வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

REPRINT  2025[  என்பது மறுபதிப்பு -புதிய தகவல்கள் சேர்க்கப்படவில்லை என்று பொருள்].

REVISED EDITION 2025 =புதிய தகவல்களுடன் 2025 இல் வெளியிடப்பட்டது என்று பொருள் ]  கூடியவரை புதிய EDITION களை வாங்க முயல்வது நல்லது.

 இவை தவிர பிற குறியீடுகள்

பதிப்பாளர்:

 -பல நிறுவனங்கள் உலகளாவிய பெயர் பெற்றவை அவை நல்ல நூல்களையே வெளியிடும்.

வகைப்படுத்தப்பட்ட நூல்

என்பதன் சான்றாக  ISBN எண்  இருந்தால் முறைப்படி அச்சிடப்பட்டதாக புரிந்து கொள்ளலாம். ISBN குறியீடு இல்லாத நூல்கள் அநேகமாக உள்ளூர் தயாரிப்புகளாகவே இருக்கும். அதாவது நூலாசிரியர் இன்னும் உயர் அங்கீகாரம் அடையாதவர் என்றே உணரலாம் .

REFERENCE / BIBLIOGRAPHY தகவல்கள் உள்ள நூல்கள் நல்ல புரிதலுடன் எழுதப்பட்டிருக்கும். இவை இல்லாதவற்றை உயர் கல்வி பயில்வோர் முற்றாக தவிர்த்தல் நல்லது.

REFERENCE எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.  

நூலின் பின் பகுதியில் ஒரு பட்டியலாக என்னென்ன நூல்கள் பயன்படுத்தப்பட்டன என்று ஒவ்வொரு சாப்டருக்கும் [chapter]  தனித்தனியே அமைத்த வகைநூல்  நல்ல நூல் என்றுணர்த்துவது. எதுவுமே குறிப்பிடாமல் வெறும் பட்டியல் எனில் வெறும் மரபுக்காக reference கொடுத்துள்ளதை உணரலாம் 

கவனம்

Reference என்பது ஆங்காங்கே சாப்டர்களில் வரும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள் ; உள்ளே இருக்கும் பெயரும் ஆண்டும் பின்பகுதியில் உள்ள REFERENCE பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று கவனியுங்கள் முறையாக தொகுத்த நூல் எனில் ரெபெரென்ஸ் TEXT பகுதியிலும் அதன் முழு விளக்கமும் நூலின் பின் பகுதியிலும் இடம் பெற்றிருக்கும்.

பிற முக்கிய விவரங்கள்

குறிப்பிட்ட பாடப்பகுதி எந்த பக்கம்/ பக்கங்களில் இருக்கிறது என்பதை "INDEX " என்று நூலின் இறுதிப்பகுதியில் தொகுத்திருப்பர்.. மிகச்சிறப்பாக தொகுக்கப்பட்ட நூல்களில் INDEX -இரு  பிரிவுகளாக இருக்கும் அவை AUTHOR INDEX மற்றும் SUBJECT INDEX என்று குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டவரின் பெயர் மற்றும் பாடப்பகுதி இடம் பெற்றுள்ள பக்கம் குறித்து வெளியிட்டிருப்பர்.

இவ்வாறு, தலைப்பு , [வெளியீடு ஆண்டு]  ஆசிரியர், பதிப்பாளர் , ISBN எண், REFERENCE /BIBLOGRAPHY , CITATION OF  REFERENCE  in the chapter , விரிவான index அனைத்தையும் கவனித்தால் நல்லவை யாவை ,     அல்ல வை யாவை என்பதனை தெளிவாக்கும் . உயர் கல்வி நூல் தேர்வுக்கு   இவை மிகவும் அவசியம்

Citation என்பது, குறிப்பிட்ட ஒரு ஆதார வெளியீட்டை பாடத்தில் சரியான இடத்தில் மேற்கோள் போல விளக்கி அதற்கான மூல பதிப்பு [ஆசிரியர் [கள்], ஆண்டு] இவற்றை அடைப்புக்குறிக்குள் இடம்பெறச்செய்து தனது கூற்றுக்கு வலிமையான ஆய்வு ஆதாரம் இருப்பதை தெரிவித்தல்.

தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகளை படித்து உள்வாங்கும் ஆசிரியர்கள் இந்த நடைமுறையை தவறாது மேற்கொள்வர் . அதே நேரத்தில் பாடப்பகுதில் இடம் பெற்றுள்ள மேற்கோள் குறித்த முழு விவரமும் Reference /Bibliography  பகுதியில் இடம் பெற்றிருந்தால் அது உரிய சான்று எனக்கொள்க.

இப்பகுதிக்கென்று சில சர்வதேச சம்பிரதாயங்கள் [International Traditions ]  உண்டு. .

அவை ஆய்வு கட்டுரைகளின் மேற்கோள்களை

1 ஆண்டு வாரியாக [1975, 1976, 1989] என வெளியிடுவது.

2 கட்டுரை ஆசிரியர்களின் பெயர்களை [முதல் ஆசிரியரின் பெயர் அடிப்படையில் அகர வரிசையில் வெளியிடுதல்

3 அனைத்து மேற்கோள்களையும் 1, 2 என[ மேலே காணும் ஒரு வகையில்] வரிசைப்படுத்தி , அவற்றின் வரிசை எண் [SERIAL NUMBER ]எதுவோ, அதனை பாடப்பகுதியில் மேற்கோளாக அடைப்புக்குறிக்குள் [54, ] [128], [316] என்பதாக வெளியிடுதல் .

ஆனால் ஒன்று ஏதோ ஒரு நடை முறையை மட்டுமே பின்பற்றி இருத்தல் வேண்டும். ஒரே நூலில் அனைத்து சம்பிரதாயங்களையும் உபயோகிக்கக்கூடாது.

இது போன்ற விவரங்களை பின் பற்றும் நூல் ஆசிரியர்கள் பெரும்பாலும் கருத்துச்செறிவு நிறைந்த ஆக்கங்களை வெளியிடுவர். ஆகவே இவை நல்ல நூல்களுக்கான குறியீடுகள் என்று புரிந்து கொண்டு நூல் தேர்வுக்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள் .

ஏதோ எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்துள்ளேன். 

உயர்கல்வித்தேவைக்கு நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளை படித்து உள்வாங்குதலும் இன்றியமையாதன.

நன்றி

அன்பன் ராமன்.

1 comment:

  1. நல்ல விளக்கம்.உபயோகமான பதிவு.
    ISBN என்பதை விளக்கவும்.

    ReplyDelete

GOOD- BUT LESS KNOWN -12

  GOOD- BUT LESS KNOWN -12 நல்ல ஆனால் அறியப்படாதவை-12                         I do not wish to say anything . Please listen and drawyo...