Monday, October 6, 2025

INDIA’'S LCH

 INDIA’'S  LCH

இந்தியாவின் LCH

LCH என்பது Light Combat Helicopter என்பதன் சுருக்கம் . இதை உருவாக்கிய நிறுவனம் HAL எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனும் இந்திய  வடிவமைப்பு நிறுவனம் . இந்த LCH வடிவமைப்பு வெகு நாட்களாக நடந்து வந்து கடந்த 5, 6 ஆண்டுகளில் தான் இறுதி நிலையை எட்டியது. போகட்டும்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன் என்பது போன்ற பெருமைக்குரியது இந்த LCH . இதன் பெயர் HA L  PRACHAND [பிரசந்த்] அதன் பொருள் "தீவிர" /'வெறித்தனமான ' என்பது. அதாவது இது இந்தியாவின் வெறித்தனமான ஹெலிகாப்டர் என்று உணர்த்தும் நாமகரணம்.

கார்கில் சண்டையில் கிடைத்த அனுபவமே இந்த LCH வடிவமைப்பிற்கு காரணியாக அமைந்தது என்று சொல்கிறார்கள். அதாவது வெகு உயரத்தில் கடுங்குளிரில் செயல்படும் வடிவமைப்பு கொண்ட ஹெலிகாப்டர்கள் அப்போது நம்மிடம் இல்லை

.அந்தஅனுபவ பாடம் கொடுத்த ஞானம் தான் விசேஷ வடிவமைப்பு. ஆம் இந்த குட்டி ஹெலிகாப்டர் -18 டிகிரி[மைனஸ் 18 டிகிரி] செல்சியஸ்  குளிர் மற்றும் 4.1 கிலோமீட்டர் உயரத்திலும் சிறப்பாக இயங்கும் திறன் கொண்டது. சுமார் 16000 அடி உயரத்தில் கடுங்குளிரில் அனாயாசமாக வித்தை காட்டும் , பாய்ந்து தாக்கும். இது பல் திறன் கொண்டது எனவே MULTIROLE COMBAT DESIGN என்கிறார்கள். இது முற்றிலும் இந்திய வடிவமைப்பு.

இந்திய தயாரிப்பா என்று ஏளனப்பார்வை பார்த்த காலங்கள் இப்போது பழைய கதை.. இந்தியா கருவிகளை தயாரித்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று எங்கும் ஏங்கும் குரல்களும் முகங்களும் தென்படக்காண்கின்றோம்.

ஏன் எனில் தரமும் விலையும் எவரையும் ஆவலுடன்  சிந்திக்கத்தூண்டுவது இன்றைய இந்தியாவின் சிறப்பு . அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பாருங்கள் இதன் திறனை.

இந்த வகை ஹெலிகொப்டர் களை ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா துருக்கி, மற்றும் சைனா ,தயாரித்து போர் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்தியாவும் இவ்வியாபாரத்தில் கால் பதித்ததில் பழைய அண்ணன்களுக்கு கோபம். ஆனால், பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா , நைஜீரியா போன்ற நாடுகள் HAL PRACHAND வாங்க மிகுந்த முனைப்பு காட்டி அவற்றிற்கான விண்ணப்பங்களையும் ஒப்புதல் கடிதங்களையும் கொடுத்துள்ளன.

அப்படி என்ன இந்த LCH ன் பெருமை?

ஆம் வேறெந்த ஹெலிகாப்டரையும் விட அதிக உயரம் பறக்கவும் கடுங்குளிரில்  இயங்கவும் வெகு திறமையானது   HAL PRACHAND

மேலும் வான் வெளி மோதல், [Aerial Combat],ஆயுதங்களை வானிலிருந்து வான் நோக்கி செலுத்த [Air to Air MISSILE  Fire],

பீரங்கிகளை தகர்க்க [Anti tank missile delivery ] ராக்கெட் ஏவ [unguided rocket ] மற்றும் கன  ரக துப்பாக்கிகளை எடுத்து செல்ல என்று பல தளவாடங்களை சுமந்து கொண்டு விரைந்து சென்று அதிரடி செயல் புரியும் திறன்.

அதாவது இந்த ஹெலிகாப்டர் போல் வெகு உயரத்தில் போர் புரிய மற்றும் போர்க்கருவிகளை போர் முனைக்கு அனுப்ப மற்றும் திறமையாக செயல் புரிய உகந்த நவீன தொழில் நுட்ப ராடார்கள், firepower என்னும் பொசுக்கும் திறன் வேறெந்த முன்னணி ஹெலிகாப்டரிலும் இல்லை. கொள்முதல் விலை பராமரிப்பு செலவு , இரண்டும் குறைவு. ஏனைய ஹெலிகாப்டர்கள் துவக்க விலை 50 மில்லியன் முதல் 73 மில்லியன் , இந்திய தயாரிப்பு 45 மில்லியன் என்பதோடு அதி நவீனமானது . அதனால் மிக எளிதில் மார்கெட்டைப்பிடித்து    அதிக ஆர்டர்களையம் வாங்கி பழைய அண்ணன்கள் நறநற என்று பல்லைக்கடிக்கிறார்கள். மேம்பட்ட தொழில் நுட்பம், செயல் திறன், நியாய விலை பராமரிப்பு எளிமை என்று இந்தியா போர்க்கருவி சந்தையில் வெகுவாக முன்னேறியுள்ளது. மேலும் பழைய அண்ணன்களோடு போரிட இந்திய தயாரிப்பு தான் சரியானது  என்று அமெரிக்காவையும் சீனாவையும் மிரள வைக்கிறார்கள், பிலிபைன்ஸ், அர்ஜென்டினா மற்றும் நைஜீரியா.

நைஜீரிய பைலட்கள் இந்தியாவின் HAL நிறுவனத்தில் முறையான பயிற்சி பெற்றுவிட்டார்கள் எனில் அவர்களின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என்று தெரிகிறது. பிலிப்பைன்ஸுக்கு சீனாவை சமாளிக்க இந்த HAL PRACHAND  பேருதவி  செய்யும் என்கின்றனர்

பிற தகவல்களுடன் பின்னர் சந்திப்போம். இன்றைய வீடியோ இணைப்பு கீழே. இந்த அறிவிப்பாளர் HAL என்பதை எழுத்துக்கூட்டி ஹால் என்கிறார் . ஒருவேளை MINISTRY  OF EXTERNAL AFFAIRS [MEA] என்பதை பூனை போல் மியா என்பாரோ ? நல்ல கூத்து .

https://www.youtube.com/watch?v=aKhxcQ0rs14

INDIA’S HELICOPTER HAL PRACHAND

*************************************************************************************

1 comment:

  1. இந்திய ராணுவ தயாரிப்புகள்
    வியக்க வைக்கின்றன.
    "ஹாலு"ம் "மியா"வும் ஒரு அதிரடி காம்பினேஷன்.

    ReplyDelete

GOOD- BUT LESS KNOWN -12

  GOOD- BUT LESS KNOWN -12 நல்ல ஆனால் அறியப்படாதவை-12                         I do not wish to say anything . Please listen and drawyo...