Saturday, October 18, 2025

BOOK CHOICE -4

 

BOOK CHOICE -4                                             இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நூல் தேர்வு -4

Correlating Text and Reference   

புத்தகத்தில் மேற்கோளாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் ,ஆண்டு பொதுவாக, அடைப்புக்குறிக்குள் அமைப்பர். அவை நூலின் பிற்பகுதியில் உள்ள REFERENCE பகுதியில் முறையான இடத்தில் இடம் பெற முயற்சி மேற்கொள்ளுதல் அவசியம். முறையான இடம் என்பது, நூலாசிரியர் தேர்வு செய்துள்ள அமைப்பில் முறையான இடம் எனக்கொள்க. அதாவது ரெபெரென்ஸ் CHAPTER அடிப்படையில் அல்லது மொத்த நூலின் விவரங்களை உறுதி செய்யும் அமைப்பிலோ அமைக்கலாம். எதுவாயினும் இதில் 2 அணுகுமுறைகள் சாத்தியம். நூல்/ ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்கள் -அகரவரிசையில் [ABCD ] அமை த்தல்   2  கட்டுரைகள் வெளியான ஆண்டு வரிசையில் அமைத்தல் [1988, 1997, 1999 , 2005 ]. இரண்டாம் வகை தொகுப்பு எனில் பொதுவாக எல்லா REFERENCE களையும் 1, 2, 3 என வரிசைப்படுத்தி , உரிய வரிசை எண் நூலின் பா டப்பகுதியில்  இடம் பெறச்செய்தல். [ 12] [47] என்ற வகையில்.

Indexing

INDEX  என்பது நூலின் மிக மிக முக்கிய பகுதியாகும் . ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்கான தகவலை எங்கே பார்க்கலாம் என்ற வழிகாட்டியே இண்டெக்ஸ் எனப்படுவது. இண்டெக்ஸ் இல்லாத நூல்கள் உபயோகிப்போருக்கு மிகுந்த நேர விரயத்தை ஏற்படுத்தும்.. ஒரு நிமிடத்தில் அடைய வேண்டிய இடத்தை பல முறை தேடித்தான் எட்ட முடியும் என்றால் பயில்வோருக்கு சலிப்பு தான் தோன்றும். எந்த உபகரணமும் USER FRIENDLY வடிவமைப்பில் இருத்தல் அவசியம் எனும் போது  கல்வி நூல்களுக்கும் அது பொருந்தும் அன்றோ? எனவே இண்டெக்ஸ் மிக கவனமாக தொகுக்கப்பட வேண்டும். அவற்றை நூல் ஆசிரியரே செய்தல் குழப்பங்களை தவிர்க்க பெரிதும் உதவும். அது என்ன என்று பார்ப்போம்.

ரெபெரென்ஸ் பதிவிடுவது ஒரு நுண் கலை . ஆம் ஒவ்வொரு மேற்கோள் சுட்டப்படும் போதே text பகுதியில் குறிப்பிடும் போதே பிற்பகுதியில் விரிவான தகவல்களுடன் ரெபெரென்ஸ் பகுதியிலும் பதிவிட வேண்டும் . இல்லையேல் ஒவ்வொரு ரெபெரென்ஸ் குறித்த விவரங்களை த்தேடித் தேடி பதிவிட நீண்ட கால விரயமும் அசதியும் ஏற்படும்.. இவற்றை முறையாக செய்வதற்கு சில அணுகுமுறைகள் நல்ல உதவியாக அமையும். அவற்றை பின்னர் பார்ப்போம்.  

மேற்கத்திய நூல்களில் reference பகுதியை இரு பிரிவுகளாக அமைத்திருப்பர். அதை இண்டெக்ஸ் [index] என்ற குறியீடாக வழங்குவர். இரு இண்டெக்ஸ் பிரிவுகள் a] SUBJECT INDEX , b] AUTHOR INDEX  என்பன.                                               ஒரு பொருள் பற்றித்தேட subject index.

  குறிப்பிட்ட reference வழங்கிய ஆய்வாளர் குறித்தோ ஆய்வு குறித்தோ அறிய author index + ஜெனரல் ரெபெரென்ஸ் இரண்டையும் பார்த்து தகவல் திரட்ட முடியும். எனவே ரெபெரென்ஸ், இண்டெக்ஸ் இவை இரண்டுமே வழிகாட்டிகள். இவை இல்லாவிடில் ஒவ்வொரு தகவலுக்கும் புத்தகம் முழுவதையும் அலசி தேட வேண்டி வரும். ஆகவே நூல் எழுத நினைக்கும் எவரும் நூலை வடிவிக்காமைப்பதில் உள்ள அணுகுமுறைகள் குறித்து அறிந்து கொண்டு தேவைக்கேற்ப புத்தகத்தை வடிவமைத்தல் சிறந்தது 

Reference types* [இதை பிறிதொரு பதிவில் காண்போம்.]

Acknowledgment: இது நூல் வடிவமைப்பில் உதவிய கருத்தியல் /பொருளாதார உதவிகள் பெற்றுக்கொண்டதை தெரிவித்து அவர்க்கு நன்றி பாராட்டும் ஒரு நற்பண்பு. சிலர் பதிப்பாளர்களுக்கும் இதில் அறிவிப்பு செய்வர்

Dedication

இது நூலை அர்ப்பணிக்கும் ஒரு பண்பு. பலர், நூலை பெற்றோர் / ஆசிரியர் / நண்பர் /சகோதரி எவருக்கேனும் அர்ப்பணிப்பதை தெளிவாக குறிப்பிடுவர் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் சேர்த்து வெளியிடுவர்.

நன்றி பாராட்டும் ACKNOWLEDGMENT, மற்றும் அர்ப்பணிக்கும் டெடிகேஷன் [DEDICATION] இவை தனி பக்கங்களாக நூலின் தலைப்பு பகுதியை அடுத்து பொருளடக்க [CONTENTS] பகுதிக்கு முன்னர் அமைத்தல் மரபு.    .                                   

பிற தகவல்கள் பின்னர்           

 நன்றி                 அன்பன் ராமன் 

*****************************************************************************

No comments:

Post a Comment

BOOK CHOICE -4

  BOOK CHOICE -4                                              இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நூல் தேர்வு -4 Correlating Text and Re...