Monday, October 20, 2025

SINDHOOR HAPPENINGS

 SINDHOOR HAPPENINGS

குங்குமப்பொட்டு நிகழ்வு

குங்குமப்பொட்டு நிகழ்வு  நினைவிருக்கிறதா ? வேறொன்றுமில்லை "operation sindhoor" என்ற இந்தியாவின் ருத்ர தாண்டவம் பற்றித்தான்.

இந்த நிகழ்வு குறித்து நம்மவர் சிலரே இந்தியாவை ஏளனம் செய்வதும் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அண்டை எதிரிதான் நம்மை வெகுவாக தாக்கியது என்றெல்லாம் கற்பனை வசனங்கள் பேசினாலும் உலகில் வேறு எவரும் இந்தியா குறித்து கேலி பேசுவதை நிறுத்திவிட்டார்கள் என்பதை விடவும் , இந்திய போர் தளவாடங்களை வாங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டுவது ஏன் -இது குறித்து உள்ளூர் மேதாவிகள் ஏன் பேசுவதில்லை

இந்தியா எது செய்தாலும் கேலிசெய்வதும் விமரிசனம் செய்வதும் அதில் ஊழல் , இதில் முறை கேடு என்று கட்டுக்கதைகளைப்பரப்பி இந்தியாவை எப்படியாவது கேலிப்பொருளாக சித்தரிக்க வேண்டும் , அல்லது ஜனநாயகம் செத்துவிட்டது என்று பொய் பேசுவது அவர்களுக்கு நித்யகர்மாநுஷ்டானம் . இவ்விடத்தில் மதுரையில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் "களுதைய [கழுதையை ] விடுங்க " தான் நினைவிற்கு வருகிறது

சரி சொல்ல வந்தது என்ன எனில் குங்குமப்பொட்டு நிகழ்வில் என்னதான் நடந்தது. என்பது பற்றியே.  கு பொ சம்பவம் முற்றிலும் இந்திய வான் படையின் அசுர விளையாட்டு எனில் மிகை அல்ல. ஏன்-- அதை அசுரிகளின் விளையாட்டு என்றும் சொல்லலலாம் .எப்படி எனில் பெண் பைலட்டுகள் இந்த முறியடிப்பு முயற்சியில் முன்னணி வகித்தனர் என்பதாலும் இதற்கு குங்குமப்பொட்டு என்ற நாமகரணம் தோன்றியதாக ஒரு பின்னணியும் உண்டு.    நமது கணக்கீட்டின் படி சுமார் 12 எதிரி போர்விமானங்கள் அழித்தோ முடக்கியோ செயலற்று போயின என்பதே .  

அதாவது உயர் வகை போர் விமானங்கள் [அமெரிக்காவின் F 16, சீனாவின் JF 17 ] உள்ளிட்ட 9 அல்லது 10 இந்தியா அழித்துவிட்டது. இது குறித்து அமெரிக்க கருத்து சற்று அடக்கியே வாசிக்கப்படுவதை காணலாம் .இவை தவிர 4, 5 உயர் ரக போர் தளவாடங்கள் , 4 நவீன ராடார்கள் , 2 கட்டுப்பாட்டுஆணை  மையங்கள் , 2 விமான ஓடு பாதைகள் , 3 HANGER எனப்படும் விமான நிறுத்து நிலையங்களை தகர்த்துவிட்டது குங்குமப்பொட்டு நிகழ்வு

சீனாவின் JF 17 நிலை குலைந்ததை பார்த்த பல நாடுகள்     JF 17 வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டன. குறிப்பாக அர்ஜென்டினா , மலேஷியா. இவற்றை நிர்மூலமாக்க உதவியது ரஷ்யாவின் S 400 எனும் ANTI -AIRCRAFT GUN ; S 400 பற்றி குறைகூறியவர்கள் பேச்சுமூச்சு இல்லாமல் வாயடைத்ததுடன் JF 17 வெறும் ஜம்பம் தான் என்று புரிந்துகொண்டனர்

மேலும் இப்போது S 400 வாங்குவதற்கு மிகுந்த போட்டி உருவாகியுள்ளது. இதன் அடுத்த தலைமுறை அண்ணன்      S 500 வந்து விட்டால் இந்த பிராந்தியத்தில் எந்த எதிரி விமானமும் போருக்கு கிளம்பவே இயலாது ஏனெனில் கிளம்பும் முன்னே சிதறடிக்கப்படும் அளவிற்கு தொழில்நுட்ப விரிவாக்கம் பெற்றுள்ளது S 500 . இவ்வாறே குங்குமப்பொட்டு நிகழ்த்திய சாதனை பலருக்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக பார்த்தால் இந்தியா வை விட எதிரி இழந்த தொகை சுமார் 90 % அதிகம் என்கிறார்கள்.

இவ்வனைத்தையும் முறையாக விளக்குகிறார் மேஜர் திரு மதன்  குமார்.    ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி தமிழில் விளக்குகிறார் . கேட்டு நன்கு புரிந்து கொள்ளுங்கள். இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=8I2SRKCVItk  IAF fire power major madhan [MESSAGE FROM OP-SINDHOOR]

**********************************************************

No comments:

Post a Comment

SINDHOOR HAPPENINGS

 SINDHOOR HAPPENINGS குங்குமப்பொட்டு நிகழ்வு குங்குமப்பொட்டு நிகழ்வு   நினைவிருக்கிறதா ? வேறொன்றுமில்லை "operation sindhoor...