Tuesday, October 21, 2025

LET US PERCEIVE THE SONG -43

 LET US PERCEIVE THE SONG -43

பாடலை உணர்வோம் -43

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

[புதிய பறவை-1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி,பிசுசீலா                                                               இந்த சிட்டுக்குருவி திடீரென்று சிறகடித்தது திரை வானில் 1964 ல். இந்த குருவிகள் அவ்வப்போது பாடலை; சுமந்து வருவது தமிழ் சினிமாவில் நிகழ்வது கண்கூடு. 

அக்கா குருவி 1955ல் எம்.எஸ் ராஜேஸ்வரி குரலில்,     கே வி மஹாதேவன் இசையில் சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமாஎன்று தமிழகத்தைக்கலக்கியது அன்றைய வரலாறு.

அடுத்த குருவி 1964 புதியபறவையாக வந்து முத்தம் கொடுத்த சிட்டுக்குருவி பி சுசீலாவின் குரலில் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் சரோஜா தேவிக்கென      துள்ளிப் பறந்த வண்ணக்குருவி.

இதன் தங்கை அடுத்த 7 ஆண்டுகள் கழித்து  "சவாலே சமாளி" யில் கட்டவிழ்த்து துள்ளிய 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு" விஸ்வநாதன் இசையில் சுசீலாவின் குரலில் சிறகடித்து  துள்ளிப் பறந்து அன்றைய தேசிய விருது இரண்டாம் இடம் பிடித்தது [1971 ஜெயலலிதா நடிப்பில்..

இப்படி குருவிகள் நமது பாடல்களில் இருந்தாலும் "முத்தம் கொடுத்த சிட்டுக்குருவி சற்று மாறுபட்டது. அக்கா மற்றும் தங்கை குருவிகள், கதையின் ஓட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டவை.

ஆனால் இந்த முத்தக்குருவி , கதை விவாதம் இன்றியே [அந்நாளில் துர்லபம்] ஒரு குதூகல அமைப்புக்கு பாடல் எழுதி அதற்கு இசை கொடுத்தனர் மெல்லிசை மன்னர்கள். அதனால், இப்பாடல், வெகு ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு மாறுபட்ட பரிமாணம் எனில் மிகை அல்ல.

சரோஜாதேவிக்கு என்ற ஒற்றை தகவலுக்கு செவி மடுத்து ஒரு ப்ரம்மாண்டத்தைப்படைத்த எமகிங்கரர்கள் -கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,பி சுசீலா. அந்நாளில் கதைக்களம் விரிவாக அறியாமல், பாடல் புனைய முனைந்தது கிடையாது. ஏனெனில், சும்மா பாடல் என்று துவங்கமாட்டார்கள். அப்படியும் ஒரு அவசரம் கருதி படத்திற்கு பாடல் துவங்க, இதுவே புதிய பறவையில் முதல் பாடலாய் பதிவாயிற்று; அனைத்துமே புதிய பறவையில் வெற்றிப்பாடல்கள் தான் எனினும் சிட்டுக்குருவி கொடுத்த முத்தம் மங்காத மறையாத வெற்றியாக திகழ்வதை எவரும் புறக்கணிக்க இயலுமோ? 

காதல் வயப்பட்ட நாயகி, இயற்கையோடு ஒன்றி, செவ்வானம், கடல், குருவி என்று கற்பனையில் மிதந்து அந்த நினைவிலேயே தனதுகாதல் மன நிலையை உணர்த்துவதாக கண்ணதாசன் பாடல் புனைந்து திறம் காட்டியுள்ளார்.. மனம் சிறகடிப்பதை சொன்னால் தான் காதலின் வீரியம் புரியும்

[கவி அரசருக்கு தெரியாத காதலா சொல்லா, வீரியமா?  மனிதர் -நேர்த்தியாக விளக்கியுள்ளார்.

காதலில் துள்ளும் மனதின் வேகத்திற்கு, உடலால் பறக்க இயலவில்லை என்று அங்கலாய்க்கும் பெண். சொற்களை கவனியுங்கள்

பல்லவிக்குப்பின் வரும் முதல் சரணம்

மொட்டு விரிந்த மலரினிலே

வண்டு மூழ்கிடக்கண்டேனே

மூங்கிலிலே காற்று வந்து

மோதிடக்கண்டேனே --ஹோய்

[இவை இயற்கையில் நிகழும் சங்கமங்கள்] இதைப்போல நானும் பறந்து திரிந்து மகிழ வேண்டும் என்பதாக பல்லவி இசைத்த பின்

மகிழ்ச்சி களிப்பில்

  என்று ஆலாபித்து

பறந்து செல்ல நினைத்து விட்டேன்

எனக்கோ சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணை இல்லையே

எடுத்துச்சொல்ல மனமிருந்தும்

வார்த்தை வர வில்லையே

என்னென்னவோ நினைவிருந்தும்  

நாணம் விட வில்லையே --ஹோய் *

 

மீண்டும் இறுதிச்சரணத்தில்

இரவினில் நிலவினிலே என்னை மறந்தேனா

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா என்று தன்னையே வியந்து உள்நோக்கும் 'introspection' இந்த வரி .

என்ன கதை என்பது அறியாமலே கவிதை தயார் [இது கண்ணதாசன் நிலை.]

இசை அமைப்பாளர் பாடலுக்கு, இல்லை இல்லை சொற்களுக்கு உயிரூட்ட பல நுணுக்கங்களை கையில் எடுப்பார். இங்கும், அப்படித்தான், எண்ணற்ற நுணுக்கங்கள். என்ன என்று தேடினால் நிறையவே கிடைக்கிறது

·       இந்த 'ஹோய்' விஸ்வநாதனின் தனி முத்திரை என்று அடித்து சொல்வேன். சிறகடித்துப்பறக்கும் உள்ள நிலைப்பாடல் எனில் அங்கே சரியான இடம் பார்த்து இந்த 'ஹோய்'க்கு ஒரு சிறப்பிடம் இருக்கும். அப்படி எல்லாம் நினைத்த இடத்தில் ஹாயாக 'ஹோய்'   என்று பாட முடியாது. நான் இவ்வளவு பேசக்காரணம் வேறு எவர் இசை அமைப்பிலாவது இவ்வளவு 'ஹோய்' பார்த்ததுண்டா ? அல்லது அந்த 'ஹோய்' இவ்வளவு நேர்த்தியாக ஒலித்த பாடல்கள் வேறு எவர் இசை அமைப்பிலாவது பார்த்ததுண்டா? மெல்லிசையில் இதுவும் ஒரு மெருகூட்டல்..

பெண்மன ஆசை என்பதால் பல்லவியை மெல்ல கிசுகிசுக்க சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்று துவக்கி முற்றிலும் கிசுகிசுக்க பின்னர் தான்---இசை ஒலிக்க பாடல் உயிர்த்துக்கிளம்புகிறது.  அப்போதும் கூட வயலினை குழுவாக இழையவிட்டு கூடவே குழல் வைத்த உத்தி.

பாடல் நெடுகிலும் வயலின்கள் குழல். போங்கோ  அவ்வப்போது ட்ரம் என்று மென் அதிர்வுகள்.

ஒவ்வொரு சொல்லையும் எப்படி பாட வைத்துள்ளனர் -மிகுந்த கவனத்துடன் கேளுங்கள்.   ஏற்ற இறக்கங்கள் ,

கண்டேனே எனும் போது ஒரு ஏக்கம்  ஆலாபனையில் மட்டில்லா உற்சாகம் ,சிறகில்லையே பறவை துணை இல்லையே இவற்றில் எழும் ஆற்றாமை என்று ஒவ்வொரு சொல்லும் ஒரு பாவ [BHAAVA ] களஞ்சியம் , புரியாமல் மேலோட்டமாகக்கேட்டு விட்டு பாடல் கேட்டுவிட்டேன் என்னும் மனங்கள் பாவக்களஞ்சியங்கள். ஒரே பாடலில் எண்ணற்ற தொட்டுதொடரும் உணர்ச்சிப்பின்னல் சங்கிலித் தொடர் இப்பாடல் எனில் -தவறில்லை எழுதி விளக்கும் நுணுக்கங்கள் அல்ல அவை . ஊன்றி கேட்டால் நெஞ்சை அள்ளும் குழைவும் குரலும் இப்பாடலின் தனிச்சொத்து. பாடகி சுசீலா ஒரு இறைக்கொடை என்பது மீண்டும் நிரூபணம் இப்பாடலில்.

இப்பாடலுக்கும் பிற குருவிப்பாடல்களுக்கும் இணைப்புகள் தந்துள்ளேன் ஒவ்வொன்றையும் கேட்டு பாடலின் பரிமாணத்தை உணருங்கள்

Chittukkuruvi –puthiya paravai 1964 KD  V R , PS

https://www.youtube.com/watch?v=XLETWdhRYvo

https://www.youtube.com/watch?v=khDF6e59rE0&list=RDkhDF6e59rE0&start_radio=1 chittukuruvi     qfr 750

https://www.youtube.com/watch?v=GreSmZhQlU0 TOWN BUS KVM MS RAAJESWARI

https://www.youtube.com/watch?v=gsP6BEMOoqk CHITTUKKURUVIKENNA –SAVAALE SAMAALI KD MS V PS

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -43

  LET US PERCEIVE THE SONG -43 பாடலை உணர்வோம் -43 சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து [ புதிய பறவை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ரா...