Sunday, October 26, 2025

BOOK CHOICE -5

 BOOK CHOICE -5

நூல் தேர்வு -5

GLOSSARY

நூலின் தகவல்கள் CHAPTER அமைப்பில் தொகுக்கப்பட்ட பின்னர் உயர் கல்வி நூல்களில் GLOSSARY என்னும் கலைச்சொற்கள் பகுதி இருக்கும். அச்சொற்களின் ஸ்பெல்லிங் மற்றும் சரியான பொருள் / பயன்படுத்தும் முறை தெளிவாக்கப்பட்டிருக்கும் . இது பெரும்பாலும் ரெபெரென்ஸ் என்னும் மேற்கோள் பகுதிக்கு முன்னர் இடம் பெறும். இதன் மூலம் கற்போர் பிழையின்றி கற்பர் மற்றும் கருத்துகளை வரிசையாக எழுதும் முறைமைகளை சரியாகப்பயில முடியும். இதனால் தான் எப்போதும் உயர் நூல்களைப்படியுங்கள், கடைச்சரக்காகிவிட்ட, நோட்ஸ்களை எளிமையை நம்பி ஏமாறாதீர்கள்.[என்று இடையறாது வலியுறுத்துகிறேன்.மேலும் உயர் கல்வியில் ஆழ்ந்து பயிலாவிடில் அலுவலகப்பணியில் /ஆசிரியப்பணியில் ஆளுமை செலுத்த  இயலாது] 

  விரிவாக/ ஆணித்தரமாக விவரம் அறிந்தவர்கள் காமா சோமா வகை ஆக்கங்களுக்கு முயலமாட்டார்கள். பொருளீட்ட விழைவோர் எளிய வழிமுறைகளை மேற்கொள்வர். எனவே எளிமை சில வாழ்வியலுக்கு உகந்தது னால் உயர்கல்விக்கு அல்ல. மனதையும் மூளையையும் கசக்கிப்பிழியும் கடின முறைகளுக்கு நீங்கள் பழகிவிட்டால் உலகில் எந்த காலத்திலும் களத்திலும் நீங்கள் கோலோச்ச இயலும். இது அறிவு சார்ந்த பயிற்சி. இதில் சமரசங்கள் பெரும் சரிவைநோக்கி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

Reference types*

பொதுவாக உயர் கல்விக்கென எழுதப்படும் நூல்கள் கருத்துச்செறிவு, நிகழ்கால தரவுகள், தகவல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க மேற்கோள்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருத்தல் அவசியம். இவற்றை முறையாக வழங்கும் நூல் ஆசிரியர்கள் உலக அரங்கில் ஏற்கப்படுத்தல் இயல்பு. எனவே பதிப்பாளர்கள் இவற்றை சந்தைப்படுத்த முனைவார்கள். இதில் மிகவும் பெருமையும் கௌரவமும் தரவல்ல பகுதியே reference பகுதி. அதனை இயன்ற அளவு புத்தம் புதிய ஆய்வு வெளியீடுகளை தொகுத்தல் சாலச்சிறந்தது

அதாவது கல்விப்பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தனது அன்றாடப்பணிகளுக்கும் ஆய்வில் வந்த தகவல்களை வகுப்பறையில் விளக்கும் போது பயில்வோருக்கு புரியும் -நான் இன்னும் பலவற்றை கற்க .. வேண்டும் என்பது. அவ்வகை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகளை படிப்பதால் reference தொகுப்பது எளிது மட்டுமல்ல தரக்குறைவான தகவல்களையோ, எழுதும் முறைகளையோ விரும்ப வாய்ப்பே இல்லை

சரி reference தொகுப்பதில் உள்ள இரு முறைகளை முன்னரே  தெரிவித்துள்ளேன். ரெபெரென்ஸ் பகுதிக்கென ஒவ்வொரு ஆய்வு சஞ்சிகையும் [journal ] தனக்கென ஒரு வடிவமைப்பை தேர்ந்து வைத்திருக்கும். அந்த சஞ்சிகையில் கட்டுரை வெளியிட வேண்டும் எனில் 'அவர்களது வடிவமைப்பில் நீங்கள் கட்டுரை சமர்ப்பித்தால் மட்டுமே [தரமான கட்டுரைகள் ஆனாலும் ] உரிய review எனும் சீர்தூக்கல் அடிப்படையில் ஏற்கப்படும். எனவே சாதாரண புத்தகத்திலும் இதை நடைமுறைப்படுத்தினால் பயில்வோர் ரெபெரென்ஸ் பற்றி தெளிவு கொள்வர். 

சில நடை முறைகள்

அனைத்து கட்டுரையாளர்கள் பெயர்களையும் ஒரே மாதிரி, முதலில் இனிஷியல், பின்னர் பெயர் என அமைத்தல் [ஒரு கட்டுரையையே 5, 6  அதற்கு மேலும் நபர்கள் வழங்கியிருப்பர்]. மிக அதிகமான [10, 15 நபர்கள் எனில், முதல் பெயருக்குப்பின் மற்றும் பலர் என்பதாக et al ., என எழுதிவிடலாம் இயன்ற வரை எல்லா பெயர்களையும் குறிப்பிடுதல் நலம் , பின்னர் கட்டுரை தலைப்பு,ஆண்டு வெளியிட்டஆண்டு  சஞ்சிகை, அதன் வரிசை எண் ,பிரதியின் எண் [vol ] மற்றும் பக்க எண்கள் என குறிப்பிடுதல் 

உதாரணம்

 1 J  Robert , V Martin , et .al ., 2024 Effect of starvation in flowering phase of Mustard , Journal of Phenology, 206, 10, 56-58 என்று அமைத்தல் 

2    Robert , J  Martin ,V et .al ., Effect of starvation in flowering phase of Mustard , Journal of Phenology, [, 2024  ] 206, 10, 56-58 என்று அமைத்தல்   

3    Robert , J  Martin ,V et .al ., ., Effect of starvation in flowering phase of Mustard  Journal of Phenology, 206, 10, 56-58 [ 2024 ]

இவற்றில் ஒன்றை ஒரே சீராக பயன் படுத்தவேண்டும் . பல முறைகளையும் ஒரே நூலில் அமைக்கக்கூடாது. 

சரி, ஆய்வுக்கட்டுரைக்கு பதிலாக வேறொரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரெபெரென்ஸ் எழுதவும் நடை முறை வகுக்கப்பட்டு;ள்ளது .

உதாரணம்  

J  Robert , V Martin , et .al ., 2024., Effect of starvation in flowering phase of Mustard  In:  Flowering in Higher Plants –Jonathan &Julie [eds] 87-91 London, McGraw Hill  [Saline stress or trigger- for flowering?]

இவை போன்ற பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற அணுகுமுறைகள் ISBN அங்கீகாரம் பெற மற்றும் வெளிநாட்டில் உபயோகிப்போருக்கும் நம்பிக்கையூட்டும் . அதுவே, நூலின் தரத்திற்கு சான்றாக அமையும்.

எனவே நூல்களை தேர்ந்தெடுப்போர்     தரம் குறித்து நாட்டம் கொள்ள வேண்டும். சரி நல்ல நூல்கள் விலை அதிகம் என்போர் EASTERN ECONOMY EDITIUON [EEE] அல்லது அவற்றின் உரிமம் பெற்ற இந்திய பதிப்புகள்,  வாங்கும் விலையில் கிடைக்கும்.அவற்றை வாங்கிப்பயன் பெறலாம்  இன்றேல் நூலகத்தில் இருந்து பெறும் நூல்களை, முக்கிய பகுதிகளின் பிரதிகளை XEROX எடுத்து பயன் படுத்தலாம். ஆனால், நல்ல நூல்களை நாடிப்படியுங்கள் உங்களின் மேலாண்மை பன் மடங்கு உயரும் .

பிற தகவல்கள் பின்னர்

*************************************************************************************

No comments:

Post a Comment

BOOK CHOICE -5

  BOOK CHOICE -5 நூல் தேர்வு -5 GLOSSARY நூலின் தகவல்கள் CHAPTER அமைப்பில் தொகுக்கப்பட்ட பின்னர் உயர் கல்வி நூல்களில் GLOSSA...