Monday, October 27, 2025

BRAHMOS –UPGRADING

 BRAHMOS –UPGRADING

மேம்படுத்தப்பட்ட ப்ரம்மோஸ் ஏவுகணை

ஏற்கனவே குலை நடுங்கும் பல நாடுகள் ப்ரம்மோஸின் புதிய அவதாரம் கண்டு தூக்கத்தை தொலைத்திருப்பர் எமில் மிகை அல்ல. அப்படி என்ன நடந்து விட்டது என்போரே இந்தியா போர்க்கருவிகளிலும் தளவாடங்களிலும் புலிப்பாய்ச்சல் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆம் சற்றும் மிகை இல்லை .

பழைய ப்ரம்மோஸ் 300 கி மி இலக்கை தாக்கும் இப்போதோ 800 கி மி வரை பாய்ந்து தாக்க வல்ல புதிய மேம்பாடு பெற்றுள்ளது. இதன் ராம்ஜெட் எஞ்சின் இன்னும் சிறப்பாக சீறிப்பாயும். அதையும் விட இலக்கை சிறிதும் தவற விடாமல் அடித்து நொறுக்கும் வீரியமும் பெற்றுள்ளது.மேலும் இது பல்வகை செயல்பாடுகளுக்கும் உகந்த வடிவமைப்பை கொண்டுள்ளது .

அதாவது தரையில் இருந்து கிளம்பி வானில் வரும் தாக்குதலை வீழ்த்தவும், விமானத்தில் இருந்து வேறொரு விமானத்தை தகர்க்கவும், மற்றும் கப்பல் தளத்திலிருந்து துறைமுகம் உள்ளிட்ட எந்த இலக்கையும் கபளீகரம் செய்யும் அதீத ஆற்றல் பெற்றுள்ளது. அது எப்படி எனில் இதன் செலுத்து உபகரணம் [navigation systerm ] வெகுவாக சீரமைத்த திறன்மேம்பாடு பெற்றுள்ளது..

பிறர்க்கு புளியைக்கரைக்கும் தகவல் என்ன எனில் இந்த புதிய ப்ரம்மோஸ் ஏவுகணையை முடக்க [jamming  செய்யவே ] முடியாத படி மிகவும் 'புத்தி வாய்ந்த' மென்பொருள் கொண்டது. மாறாக எதிர்ப்படும் பிற போர்க்கருவிகளை இது முடக்கி விடும்.

சென்ற குங்குமப்பொட்டு நிகழ்வில் இந்தியா களமிறங்கிய வெறும் 13-15 முதல் தலைமுறை ப்ரம்மோஸ் காட்டிய கோர தாண்டவம்  இன்னும் பல நாடுகளுக்கு அச்சத்தையும் வியப்பையும் கொடுக்கிறது.  இன்னும் தீவிர மேம்பாடா ஐயோ என்று அலறல் இப்போதே துவங்கிவிட்டது. இதற்கிடையே ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குங்குமப்பொட்டு செயல்பாட்டில் நிகழ்ந்தது .

என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட எதிரியின் மிஸைல் PL  15 தீபாவளி பட்டாசு போல் பிசுபிசுத்து வெடிக்காமலேயே இந்திய எல்லைக்குள் முழு அமைப்புடன் வீழ்ந்தது.

நமது ராணுவத்தினர் இந்த PL 15 பாகிஸ்தான் நமக்கு அளித்த GIFT என்று நகைச்சுவையாக சொல்கிறார்கள். இது முழு பொருளாக கிடைத்ததும் , இந்திய நிபுணர்கள் அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ஆய்ந்து அதில் இருக்கும் தொழில் நுட்பத்தை ஒழித்தழிக்க தேவையான தற்காப்பு+ எதிர்வினைக்குரிய எல்லா தேவைகளையும் புதிய ப்ரம்மோஸில் பொருத்திவிட்டனர். எனவே வாங்கடா இப்போ என்ற நிலையில் இந்திய ஏவுகணைகள் பெரும் சேதம் விளைவிக்க உரிய நிலையை அடைந்துள்ளன. மென்மேலும் வேக அதிகரிப்புக்கு       வேண்டிய வடிவமைப்புகள் நடந்து வருகின்றன.

அப்படி வேகம் எட்டிவிட்ட ப்ரம்மோஸ்களை  மறிக்க முயன்றால் நடுவானிலேயே மரிக்க வேண்டியது தான்.

இந்த புதியப்ரம்மோஸ்  ஏவுகணை எதிரி போர் விமானம் / ஏவுகணைகள் கிளம்பும்  முன்னரே [கருவறையே கல்லறை போல] அவற்றை அழித்துவிடும்

தளவாடத்தன்னிறைவு இந்தியாவின் முதன்மை இலக்கு என்பது தெளிவாகிறது.

மேலும் பல அரிய தகவல்களை மேஜர் திரு மதன்குமார் தமிழில் தந்துள்ளார். கவனித்து புரிந்துகொள்ள இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=4_CSublp7cw MAJOR MADHAN KUMAR

நன்றி

அன்பன் ராமன்

***********************************************************************************

No comments:

Post a Comment

BRAHMOS –UPGRADING

  BRAHMOS –UPGRADING மேம்படுத்தப்பட்ட ப்ரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே குலை நடுங்கும் பல நாடுகள் ப்ரம்மோஸின் புதிய அவதாரம் கண்டு தூக...