Sunday, November 2, 2025

BOOK CHOICE -6

 BOOK CHOICE -6

நூல் தேர்வு -6

நூல் தேர்வு

இந்த தலைப்பில் இரு வேறு தேவைகளை விரிவாக பேசி வருகிறேன்

1 பயில்வோர் எவ்வாறு புத்தகங்களை தேர்வு செய்தால் உயர் கல்வி, போட்டி தேர்வு , ஆராய்ச்சிக்களம் இவற்றில் தயக்கமோ அச்சமோ இல்லாமல் செயல்பட பெரிதும் உதவியாக இருக்கும்என்பதை பார்ப்போம்.

.எனவே நன்னூல் என்ற தகுதியை நிர்ணயிக்க வல்ல பொருள்கள் குறித்து எனது சிற்றறிவுக்கு எட்டிய விவரங்களை தந்துள்ளேன்

2 அதே நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் இவற்றை தொடர்ந்து உபயோகிப்போர் ஆசிரியப்பணியில் தெளிவும் கம்பிரமும் மேலிட பணியாற்ற இயலும். அதைவிடவும் சிறப்பாக, தயக்கமின்றி விரிவுரை ஆற்றவும், வெகுநுணுக்கமான தகவல்களை சிறப்பாகவும்சீராகவும் விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும்  தரமான நூல்கள்/ கட்டுரைகள் பெரிதும் வலு சேர்க்கும்.

அதிலும் குறிப்பாக மொழி ஆளுமையும் துல்லியமும் ஆய்வுக்கட்டுரைகளை தொடர்ந்து பயன்படுத்துவது என்ற அணுகுமுறை கைக்கொள்வோர்க்கு எளிதில் வசப்படும்.

எனவே நூல் தேர்வு பயில்வோர் பயிற்றுவிப்போர் இருசாரார்க்கும் உற்ற உறுதுணை ஆகும் என்பது எனது புரிதல். அதன் தொடர்ச்சியாக இன்னொன்றையும் குறிப்பிடலாம். நல்ல நூல் படைக்க ஆர்வம் உடைய எவரும் இத்தொடரில் பல நிலைகளில் விளக்கப்பட்டுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொண்டால் , நூல் வடிவமைப்பு கலையையும் புரிந்து கொள்ளலாம். அவற்றை செயல் படுத்தும் போது.  நன்னூல் வடிவமைக்க தேவையான ஆயத்ததகுதிகள் கைவரப்பெற்றிருக்கும் என்று சொல்லலாம். எனவே நூல் தேர்வு என்பது ஆழ்ந்து அலசவேண்டிய ஒரு செயல். இதனாலே தான் மேற்கத்திய நூல்களை சிலாகித்துப்பேச வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே விருப்பு வெறுப்பின்றி தகவல் திரட்ட பலநூல்களின் அணுகுமுறை நல்ல வழிகாட்டியாகும். .

CONTENTS  [பொருளடக்கம்]

ELABORATION [விரிவான பொருளடக்கம்]

நூல் வடிவமைப்பில் பொருளடக்கம் [CONTENTS]  மிகவும் முக்கியமானது. நூலின் தகவல்கள் எங்கெங்கு தொகுக்கப்பட்டுள்ளன என்பதை வெளியிட இதுவே வழி எனவே நூலின் துவக்கமே இங்குதான்..

இவற்றில் வெறும் CHAPTER தலைப்புகளை குறிப்பிடுவதுடன் அவை துவங்கும் பக்கங்களையும் குறிப்பிடுவது ஒரு வகை.

2 இரண்டாவது வகை -விரிவான பொருளடக்கம் [ELABORATE CONTENTS]. இவ்வகையில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் [CHAPTER HEADING ] என்னென்ன துணை தலைப்புகள் [SUBTITLES] உள்ளன அவை ஒவ்வொன்றிலும் உள்ள விவரங்களின் தகவல்கள் குறித்த சிறு பொருள் விளக்கம் இவற்றை  தெளிவாக குறிப்பிட்டிருத்தல்.

FURTHER NREADING ["மேலும் அறிந்துகொள்ள]

மிகவும் ஆழ்ந்த புலமையும் அனுபவமும் கொண்ட நூலாசிரியர்கள் மிகவும் விரிவாக ஒரு பட்டியலை தொகுத்து நூலின் பிற்பகுதியில் வெளியிட்டிருப்பர் .அதன் தலைப்பு "மேலும் அறிந்துகொள்ள "   என்று பொருள்பட 'FURTHER  READING ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதில் வேறுபல உலகப்புகழ் கொண்ட நூல்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். பெரும்பாலும், அவை நூலகங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றில் ஒரு சிலவற்றையாவது படித்தால் நமது புரிதலும் நம்பிக்கையும் பன்மடங்கு உயரும். இதுபோன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றினால், தெருவில் விற்கும் NOTES களின் தகுதி எத்தகையது என்று உடனே விளங்கும். உயர் நிலைகளை எட்ட உயர்வகை நூல்கள்தான் உகந்தவை என்பதையு சொல்லவும் வேண்டுமோ. 

INDEX

இண்டெக்ஸ் [index] ஒரு  நூலின் தகவல்ககளில் குறிப்பிட்ட தலைப்பிற்குரிய விவரங்களை எந்தப்பக்க த்தில் காணலாம் என்று அடையாளம் காட்டும் வழிமுறை .

ஒரு எச்சரிக்கை

நூல் எழுதும் போது, நமது பிரதி கணினி [கம்ப்யூட்டர்] மூலம் தொகுத்த பக்கங்களாக இருக்கும். அவற்றை அச்சிடும் போது மொத்த பக்கங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். நமது பிரதி 100 பக்கங்கள் என்றால் அச்சிட்டபின் சுமார் 76-80 பக்கங்களாக குறைந்துவிடும். அது, அச்செழுத்து மற்றும் லே -அவுட் எனும் பத்தி பிரித்தல் உத்தியினால் ஏற்படும். மாற்றம். எனவே பொருளடக்கம், இண்டெக்ஸ் எதுவாயினும் அச்சடித்தபின்னரே எந்தெந்த பக்கங் களில்   என்னென்ன தகவல்கள் என்று குறிப்பிட முடியும்.  எனவே பொருளடக்கம், இண்டெக்ஸ் இவற்றி ன் தலைப்புகளை மட்டும் கொடுத்துவிட்டு அச்ச டித்தபின் பக்க எண் களை குறிப்பிட்டால் குழப்பம் இன்றி நூல் வடிவம் பெரும்.

SUBJECT INDEX

AUTHOR INDEX

இண்டெக்ஸ் பகுதியை இரண்டாக பிரித்து subject index மற்றும் author index என்ற பிரிவுகளில் முறையே பாடப்பகுதி மற்றும் ஆய்வாளர்களின் பட்டியல் என்று அமைப்பது மிகச்சிறந்த நூல்களில் காணப்படும் முறை. எதுவாயினும் ஒவ்வொரு தகவலையும் அகர வரிசைப்படி அமைத்தால் தகவல் தேடுவது எளிது. இதனையும் கருத்தில் கொள்க

Publishing   அச்சிட்டு வெளியிடுதல்

இதுவே நூல் ஆக்கத்தின் இறுதிப்பகுதி. அதை நல்ல பதிப்பாளர் மூலம் வெளியிடுதல் நூலுக்கு ஒரு நல்ல அங்கீகாரமாக அமையும். ஆனால் அவர் கள் நூலின் தரத்தை உரிய நிபுணர்களின் கருத்தை/ விமரிசனத்தை அறிந்த பின்னரே முடிவெடுப்பர். EXPERT  OPINION எனும் நிபுணர் கருத்தைப்பொறுத்தே அமையும். ஆகவே நூலின் தரம் மிகவும் முக்கியம்.

நல்ல பதிப்பாளர்கள் எனில் நூலை விற்பனை செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வர்.

ஒரு நூல் ஆக்கத்தில் இவ்வளவு உழைப்பும் கவனமும் தேவைப்படுகிறது. இருக்கவே இருக்கிறது என்று ஆசிரியப்பணியையும் , அச்சடித்துவிட்டால் விற்று விடலாம் என்று நூலையும் எடை போட வேண்டாம். இரண்டும், ஆழ்ந்த கவனமும் முழு அர்ப்பணிப்பும் இன்றி வெற்றி தராது.

நான் இதுவரை கல்வியின் பல பரிமாணங்கள் பற்றி தெரிவித்து வந்த அனைத்தும் ஆசிரியப்பணியின் அனுபவத்தின் வெளிப்பாடே அன்றி, வேறில்லை.

ஏற்பதும் எதிர்ப்பதும்- வாசகர் மன நிலை. எதிர்ப்போர் வசம், வேறு நடைமுறைகள் /செயல் வடிவங்கள் இருந்தால் தயங்காது blog பதிவில் தெரிவிக்கலாம்.

நான் அறிந்த மற்றொன்று

நல்லாசிரியனாக பரிமளிக்க நல்ல பயில்வோனாக இருத்தல் ஒன்றே வழி.      நல்ல பயில்வோரை உருவாக்க, நல்லாசிரியர்களே தேவை. இரு சாராருக்கும் உதவ எண்ணற்ற நூல்கள் உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தினால் கல்வி கனியாகும், கசக்காது .

நன்றி            அன்பன் ராமன்

No comments:

Post a Comment

BOOK CHOICE -6

  BOOK CHOICE -6 நூல் தேர்வு -6 நூல் தேர்வு இந்த தலைப்பில் இரு வேறு தேவைகளை விரிவாக பேசி வருகிறேன் 1 பயில்வோர் எவ்வாறு ...