Sunday, November 2, 2025

PASSENGER AIR CRAFT SJ 100

PASSENGER AIR CRAFT SJ 100

பயணிகள் விமானம் எஸ் ஜெ -100

 

இப்போது இது என்ன வகை தகவல் என்பவர்கள் மகிழ்வுற வேண்டிய தருணம் . ஏனெனில் இந்த விமானம் இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒரு  உண்மை நம்மை துன்புறுத்தும். அது என்னவெனில் மிகச்சிறந்த மென்பொருள் பொறியாளர்கள் , தொழில் நுட்பாளர்கள் [TECHNOCRATS ] நம்மவர்கள் தான் எனினும் இன்னும் விமானமோ , விமான எஞ்சினோ தயாரிக்க இயலவில்லை. ஆனால் ஏவுகணை ,ராடார் இவற்றில் நம் வளர்ச்சி விஸ்வரூபத்தை சாப்பிட்டுவிடும் விஸ்வரூபம்  எனில் மிகை அல்ல.

பிறகு ஏன் விமான தொழில் நுட்பத்தில் இவ்வளவு சுணக்கம் ? என் மனத்திரையில் ஓடுவது இவை தான்

இந்தியாவை ஏளனம் செய்யும் இந்தியர்கள் 2 உண்மையை பேச தயங்கும் பிரஜைகள். இண்ட்ஷிய மண்ணில் பிறந்து வாழ்ந்து, சொத்து சேர்த்து கொண்டு, எதற்கும் மேல் நாட்டை பற்றி உயர்வாக வலிந்து   சித்தரிக்கும் தகவல் பரப்புவோர் , இவர்களுக்கு கிடைத்து வந்த நிழற்குடை பாதுகாப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களை மட்டுமே பார்த்து வந்த பலரும் நாமும் குறைந்த உழைப்பைக்கொடுத்து ஊதியம் வாங்கிக்கொண்டு வாழ்ந்தால் என்ன என்ற நிலைக்கு வந்து விட்டனர். இவ்வனைத்தையும் மீறி இந்த நாடு உயிர்த்துடிப்புடன் மீண்டெழுகிறது என்றால் 'காலம் கனிந்து வருவதாக ' பார்க்கலாம். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக விமானத்துறை குறித்து இந்தியா முயலவே இல்லையா? பெயரளவிற்கு சில முயற்சிகள் நடந்து வந்திருக்கின்றன. இன்னொரு உண்மையையும் மறுப்பதற்கில்லை. அதாவது இந்த தொழில் நுட்பம் எங்களது பிறப்புரிமை என்பது போல அமெரிக்காவும் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பெரியண்ணன் தோரணை காட்டி வந்ததுடன், விமானம், ராடார் , போர் தளவாடங்கள் அனைத்தையும் மூன்றாம் உலக நாடுகள் என்று ஒரு நாமகரணம் சூட்டி ஏழ்மையை சாதகமாக்கி பெரும் விற்பனை சந்தையாக மாற்றி கொழித்துக்கொண்டிருந்தனர். இப்போது இவன் யார் நமக்கு அதிகாரம் செலுத்த ? என்ற நிலைப்பாட்டை இந்தியா போன்ற நாடுகள் கையில் எடுத்ததுடன், வேகமும் விவேகமும் காட்டி நேரடி பேச்சுவார்த்தையில் உன் உருட்டல் எல்லாம் இங்கு வேண்டாம் என்று சொல்வதுடன் உன்னால் ஆனதைப்பார் உன் வியாபாரம் உனக்கு என் தேவை எனக்கு இந்த எல்லையை மீற  எவனுக்கும் உரிமை இல்லை என்று   எல்லை வகுத்து விட இப்போது இந்திய துணைக்கண்டத்தில் மூக்கை நுழைத்தால் முதுகு பழுத்துவிடும் என்று பெரியண்ணன்கள் அடக்கி வாசிக்கிறார்கள் . இவ்வளவு மாற்றங்கள் விளைந்துவரும் சூழலில் தான் பயணிகள் விமான தயாரிப்பில் இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் SJ -100 ரக விமானதயாரிப்பிற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. SJ என்பது SUPER JET என்பதன் குறியீடு 100 என்பது பயணியர் எண்ணிக்கை [108] குறித்த அடையாளம் என எண்ணுகிறேன். இந்தஒப்பந்தம் US மற்றும் EU மிரட்டும் தடைகளை துடைத்தெறிந்துவிட்டு அப்படித்தான் விமானம் தயாரிப்போம் -உனக்கென்ன என்பதாக அரங்கேறிக்கொண்டிருக்கிறதுஏற்கெனவே இந்திய -ஸ்பெயின் கூட்டு முயற்சியில் CJ 295 ரக ராணுவ விமானங்கள் தயாரிப்பு நடந்து வருகிறது அதில் 16 [மொத்தம் 56] ஸ்பெயின் உரியகாலத்தில்  வழங்கிவிட்டது. மீதமுள்ள 40 , அடுத்த 14 விமானங்களை ஸ்பெயின் மேற்பார்வையில்  இந்தியாவில் தயாரிக்கப்படும். கடைசி 10 [31-40] விமானங்களை இந்தியாவே தயாரிக்கும் [ஸ்பெயினின் உதவியோ, ஊடுருவலோ  இன்றி] அதை டாடா நிறுவனம் செய்த்து தரும் .

SJ  100  விமானம் பயணியர் பயன்பாட்டுக்கு உரிமம் பெற்றது, இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும். செயல் அடிப்படை திறன் இவற்றில் SJ 100, ஸ்பெயினின் C 295 க்கு இணையானது தான் . 60 / 78/  98/ 108 பேர் வரை பயணிக்க இயலும் . உள்நாட்டு வான் பயணத்திற்கு போதுமானது. இன்னும் சில ஆண்டுகளில் நேரம் கருதி விமான சேவைக்கு தேவை அதிகரிக்கும். இந்தியா விழித்துக்கொண்டு விட்டது ஆனாலும் சிலர் பழித்துக்கொண்டே இருக்கின்றனர்.    இதன் பிற நிபந்தனைகள் மற்றும் பண நிபந்தனைகள், தொழில் நுட்ப பகிர்வு இவை ரஷ்ய அதிபர் புடின் அவர்களின் இந்திய பயணத்தில் [Dec-2025 இல் ]  இறுதி செய்யப்படும். இதன் வடிமைப்பு Sukhoi விமான கம்பெனியால் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் HAL நிறுவனத்தினரால் உருவாக்கப்பெறும் TECHNOLOGY TRANSFER எனும் தொழில் நுட்ப பரிமாற்றம் அதில் உள்ள நுணுக்கங்கள் [குடுமியை கையில் வைத்துக்கொள்ளுதல்] போன்ற வற்றை விளக்குவதுடன்  இந்தியாவில் அரசுத்துறையில் மெத்தன போக்கு குறித்து கொந்தளித்துப்பேசி , சில கருத்துகளை [டெக்னாலஜி உருவாக்க பயிற்சி] பற்றி விரிவாக விளக்கியுள்ளார் திரு ஆசிர் சாமுவேல் அவர்கள். நன்கு கவனித்து பல அறிய தகவல்களை புரிந்துகொள்ள இணைப்பு இதோ 

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து, இந்தியாவில் தயாரிக்கும் வரலாற்றில் முதல் பயணிகள் விமானம் SJ 100

https://www.youtube.com/watch?v=LHMQB69jS8o as on 03-11-2025

**************************************************************

No comments:

Post a Comment

PASSENGER AIR CRAFT SJ 100

PASSENGER AIR CRAFT SJ 100 பயணிகள் விமானம் எஸ் ஜெ -100   இப்போது இது என்ன வகை தகவல் என்பவர்கள் மகிழ்வுற வேண்டிய தருணம் . ...